Header Ads



மஹிந்தவின் சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுக்கும் முஸ்லிம் அரசியல்வாதி (படம்)



(மொஹொமட் ஆஸிக்)

அக்குறணை பிரதேச சபையின் தலைவர் ஏ.எம்.எம். சிம்சான், அக்குறணை புளுகொஹொதென்னையில் அமைந்துள்ள தனது  வீட்டில் வீட்டுத் தோட்டம் ஒன்றினை  அழகான முறையில் செய்துள்ளார்.

ஒரு அங்குலக் காணியேனும் இல்லாமல் முற்றாக தனது வீட்டுப் பகுதிகளை பாவித்து இவ் வீட்டுத் தோட்டத்தை அவர் செய்துள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களது தேசிய திட்டமான வாழ்க்கை எழுச்சி திட்டத்திற்கு அமைய இவ்வீட்டுத் தோட்டம் அமைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இவ் வீட்டுத் தோட்டத்தில் பல வகையான மரக்கரிகள் தானியங்கள் காகப்படுவதுடன், கண்டிப் பிரதேசத்திற்கு பொருந்தாத கெரட், பீட், போன்ற மரக்கரிகலும் நன்ராக விழைந்துள்ளன. இதற்காக தனது மனைவி மற்றும் பிள்ளைகளது பூரண ஒத்துழைப்பு கிடைப்பதாகவும் அவர் தெரிவித்தார்.




No comments

Powered by Blogger.