Header Ads



காத்தான்குடி குர்ஆன் சதுக்கத்திற்கு ஈரானிலிருந்து மாபிள்கள் இறக்குமதி


(பழுளுல்லாஹ் பர்ஹான்)

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் வீதியை அழகுபடுத்தும் விஸேட வேலைத்திட்டத்தின் கீழ் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும் ,மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் அயராத முயற்சியின் பயனாக மட்டக்களப்பு-கல்முனை காத்தான்குடி பிராதான வீதிக்கு அருகாமையில் அமைந்துள்ள காத்தான்குடி குட்வின் சந்தி குர்ஆன் சதுக்கமாக மாற்றம் பெற்று வருகின்ற அதே வேளை அங்கு பாரிய அளவில் மிகவும் எழில்மிக்க சுற்றுவட்டம் (ரவுண்ட போட்) நிறுவப்பட்டு வருகின்றது. 

அதில் பதிக்கப்படுகின்ற மாபில்கள் ஈரானில் இருந்து வரவழைக்கப்படவுள்ளது. இந்த சுற்றுவட்டம் அமையப் பெரும் குர்ஆன் சதுக்கத்தை பார்வையிடுவதற்காகவும் மாபிள்களின் கணக்கீடு தொடர்பாகவும் ஆராய்வதற்காக ஈரான் நாட்டு முன்னாள் தூதுவர் அலா மூர்த்தி,ஈரான் நாட்டு பொறியியலாளர்கள்,கட்டிடக் கலைஞர்கள் விஜயம் செய்து இது தொடர்பில் ஆராய்ந்தனர்.

இதன்போது பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ,கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக்,முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பரீட் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

காத்தான்குடி நகரம் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் அயராத முயற்சியினால் அழகுபடுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 



1 comment:

  1. iranai nambi onrum vangatherkal , kattankudy makkale

    ReplyDelete

Powered by Blogger.