சிங்களவர்களை ஆயுதமாக பயன்படுத்தும் தேரர்கள்
(ஏக்கூப் பைஸல்)
சிந்திப்பவர்கள் புரட்சியை உருவாக்குகிறார்கள். கொள்ளைக் கூட்டத்தை சேர்ந்தவர்கள் அதை நடத்திச் செல்கின்றர்கள்.
பௌத்த மதத்தை பாதுகாக்க பௌத்தர்களை ஆயுதமாக பயன்படுத்தும் சில தேரர்கள் பெஷன்பக் வர்த்தக நிலையத்தை 2013.03.28 ஆம் திகதி இரவு 08 மணிக்கு முற்றுகையிட்டதை முஸ்லிம்களாகிய நாங்கள் கண்டிக்கின்றோம்.
புத்தர் போதித்த அமைதிக்கான மதத்தில் இருந்து யுத்தம் செய்யும் சில காவியுடைகள் முஸ்லிம்களின் பொருளாதாரத்தினை முடக்கும் முதல் கட்டமாக வதந்திகள் பரப்பி நாட்டை அழிக்க நினைக்கின்றார்கள். இன்று திட்டமிட்டு பெஷன்பக் வர்த்தக நிலையத்தை 300 க்கும் அதிகமான சிங்கள மக்களும் தேரர்களும் முற்றுகையிட்டு சட்டத்தை மீறிச் செயற்பட்டுள்ளார்கள். இன் நிலையின் பின்னனியில் யார் ? ஏன் இவர்கள் இப்படிச் செய்கிறார்கள் ? என்ற கேள்வியை மியன்மாரில் இருந்து நாங்கள் கற்றுக் கொள்வோம்.
இலங்கையில் ஜனநாயகம் இன்று ஒரு வர்க்கத்தின் நலனுக்காக மட்டுமந்தான் காவலனாக இருக்கின்றது . எங்கள் பிரச்சினைகள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. இதற்கான தீர்வுகளை பெற்றுத் தருவோம் என்று சிங்கள தலைமைத்துவம் சொல்கின்றது. பாதிக்கப்பட்டு அரசாங்த்திடம் முறையிடுகின்ற போது அறிக்கை சமர்ப்பித்து நாங்கள் அமைச்சுக் குழுக்களை அமைத்துள்ளோம் என்று சொல்கின்றது. அமைச்சுக் குழு அறிக்கையை விடுவதற்கு முன்பே மீண்டும் புதிய பிரச்சினை எழுகிறது. பூச்சாண்டிகாட்டும் வேலையினை தலைமைத்துவங்கள் செய்கின்றது . இந்த நிலை எமக்கு வேண்டாம். அரசாங்கத்தில் எமது முஸ்லிம் தலைவர்கள் இருந்தும் ஏன் நாங்கள் பாதிக்கப்பட்டால் அதற்கான தீர்வுகளை பெற்றுத்தர முயற்சி செய்வதில்லை. தலைமைகள் இந்த நிலமையினை மாற்ற வேண்டும்.இல்லை எதிர்கட்சியில் இருந்து உரிமைக்காக குரல் கொடுத்து போராட வேண்டும்.
நீதிமன்றங்கள் என்ன செய்கிறது. மக்களின் காவலன் என்கின்ற பொலீஸ் என்ன செய்கின்றது. நாட்டில் வாழ்கின்ற அனைவருக்கும் சம உரிமை என்று சொல்கின்றவர்கள் என்ன செய்கின்றார்கள். 1983 ஆம் ஆண்டு காலப் பகுதியில் சிங்கள அரசாங்கம் தமிழ் மக்களுக்கு இப்போது முஸ்லிம்களுக்கு கையாளுகின்ற முறையைத்தான் அப்போது கையாண்டு கருப்பு யூலைக்கும், யுத்த களத்துக்கும் தழிர்களை அழைத்துச் சென்றது. அந்த நடவடிக்கைகள் இன்று சிங்களவர்கள் எங்கு சென்றாலும் அடி வாங்கும் நிலையினை தோற்றுவித்துள்ளது. இதை புரியாத இன்றை அரசாங்கம் முஸ்லிம் மக்களுக்கு அமைப்புக்களை உருவாக்கி ஏவிவிடுகின்றது. இது தொடர்ந்தால் இலங்கைக்கு எதிர்வருகின்ற மனித உரிமை மீறல்களுக்கான குற்றச் சாற்றுகளுக்கு எதிர்காலத்தில் வாக்களிக்க இரண்டு நாடுகளைத் தவிர வேறு நாடுகள் இருக்காது என்;பதை உணந்து கொள்ளவேண்டும்.
இலங்கை அரசியல் தலைவர்கள் ஏனைய நாடுகளிடம் பிச்சை எடுப்பதை ஒரு தொழிலாக வைத்திருக்கும் வரைக்கும் .நம் நாட்டு நிர்வாகம் சீர்கெட்டு கொண்டே இருக்கும்.

மூளையில்லாத எங்கள் அமைச்சர் சாரி அணியூங்கள்
ReplyDeleteஅரசாங்கம் எங்களை ஏமத்துகின்றது உண்மைதான்
ReplyDeleteஇலங்கை அரசியல் தலைவர்கள் ஏனைய நாடுகளிடம் பிச்சை எடுப்பதை ஒரு தொழிலாக வைத்திருக்கும் வரைக்கும் .நம் நாட்டு நிர்வாகம் சீர்கெட்டு கொண்டே இருக்கும்.என்பது உண்மையான கருத்து
ReplyDeletewhat happen in the monk .
ReplyDeleteFrom the dayof independent not a single government ruled this country independently without the influence of the Buddist monk but this time BBS JHU SR is the worse group among them they are criticising the mahanayeke groups also as long as this three groups are allowed to do everything they want publicly harming the Tamil speaking community we cannot expect the justice from the rulers after long silent now two ministers opened thir mouth athers may follow but we have to suffer for ever no hope up to this minutes
ReplyDelete