Header Ads



2 முஸ்லிம் சிறுமிகளின் கால்களை கழுவிய போப் பிரான்சிஸ்


உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் இன்று    வெள்ளியை அனுசரிக்கிறார்கள். இயேசு சிலுவையில் அறையப்படும் முன்பு தனது 12 சீடர்களின் கால்களை கழுவி முத்தமிட்ட நிகழ்ச்சியை நினைவு கூறும் வியாழன் வழிபாடு வாடிகன் நகரத்தில் நேற்று நடைபெற்றது.

வழக்கமாக வாடிகன் நகரில் உள்ள பீட்டர் தேவாலயத்தில் பாதிரியார்களின் கால்களை கழுவி போப் ஆண்டவர் முத்தமிடுவார். ஆனால், இந்த முறை புதிதாக பொறுப்பேற்றுள்ள போப் ஆண்டவர் பிரான்சிஸ் இதுவரையிலான மரபுகளை தகர்த்தெறிந்தார்.

வழக்கத்திற்கு மாறாக, அவர் ரோம் நகரில் உள்ள கசல்டெல் மர்மோ என்ற சிறார்கள் சீர்திருத்த பள்ளி சிறைக்கு சென்றார். அங்கு 12 இளம் சிறை கைதிகளின் கால்களை கழுவி முத்தமிட்டார். அவர்களில் 2 முஸ்லிம் சிறுமிகளும் அடங்குவர். இதுவரை போப் ஆண்டவர் பெண்களின் கால்களை கழுவி முத்தமிட்டது இல்லை. 

இதுகுறித்து அவர் கூறும் போது,

"எனது மனசாட்சிபடி மதகுருவின் கடமையை நான் செய்தேன். நான் உங்களுக்கு சேவை செய்ய இருக்கிறேன்.  என்றார்.

இந்த நிகழ்ச்சி வாடிகன் சிட்டி ரேடியோவில் மட்டும் நேரடியாக ஒலிபரப்பப்பட்டது. பாதுகாப்பு பிரச்சினைகள் காரணமாக மற்ற டெலிவிஷன் மற்றும் ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. 

No comments

Powered by Blogger.