Header Ads



பொது பலசேனாவின் வளர்ச்சியும், முஸ்லிம் அரசியவாதிகளின் அங்கீகாரமும்..!



இலங்கையில் நடந்துகொண்டிருக்கின்ற இனவாத நடவடிக்கை இலங்கை முஸ்லிம்களின் வாழ்கையில் நிச்சயமாக பெரியளவிலான பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்பதில் எந்தவித சந்தேகம் கிடையாது.

கடந்த காலங்களை உன்னிப்பாக அவதானிக்கின்ற எவராலும் மிக இலகுவில் இந்த இனவாத நடவடிக்கைகளை யார் பின் நின்று வழிநடாத்துகின்றார்கள் என்பதை மிக இலகுவில் அறிந்து கொள்வார்கள். முழுமையாக அரச அங்கீகாரத்துடனேயே முன்னெடுக்கப்படுகின்றது.

பொது பலசேனாவின் பெளத்த கலாச்சார நிலையத்தை திறந்து வைத்து உரையாற்றும் பொழுது பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் உறை எதைச் சொல்கின்றது. 'நாட்டில் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் பலர் அதை பேசித்தீர்க்குமாரே கூரினர். எனினும் நாம் சற்று கடினமாக நடந்து அதற்கு தீர்வு கண்டோம். அதுவே சாத்தியமானது. அது போல் பௌத்த தேரர்கள் மென்மையை சற்று கைவிட்டு கொஞ்சம் கடினமாக சில விடயங்களை சொல்கிறார்கள்' 

இந்த கடினம் என்பது எதனை குறிக்கின்றது. இன்னும் சில நாட்களில் மனிதாபிமான நடவடிக்கை எடுப்பார்கள் போல் தோன்றவில்லையா?? 

இதற்கெள்ளாம் காரணமானவர்கள் யார்???

எமது நாட்டில் இருக்கின்ற முஸ்லிம் அரசியல்வாதிகள் யார்? அவர்களின் குடும்ப வரலாறுகள் என்ன? இவர்கள் அரபுப் பெயரைக் கொண்ட மனிதர்களா? இலாஹ் (லாஇலாஹ இல்லல்லாஹ்) வுக்கு விளக்கம் தெரிந்த முஸ்லிம்களா? 

இலங்கை அரசியல் வாதிகளில் பௌத்தர்கள், கிரிஸ்தவர்கள் அவர்களின் மார்க்கத்தை அதன் வழிகாட்டல்படி வாழ்கின்றார்களோ இல்லையோ அவர்கள் அந்த மதத்தின் மீது பற்றுள்ளவர்களாக இருப்பதை நம்மால் காணக்கூடியதாக இருக்கின்றது. முஸ்லிம் என்று சொல்லிக்கொண்டிருக்கின்றவர்கள் இஸ்லாம் மார்க்கத்தை ஒரு கலாச்சாரமாக பின்பற்றுகின்றார்களே தவிர மார்க்கத்தின் மீது பற்றுவைத்து இருக்கின்றார்கள் என்பதற்கு எந்தவித அறிகுறியும் கிடையாது.

இவர்களிடத்தில்.......??????
ஒற்றுமையின்மை
பனம், பதவி, அதிகார ஆசை
சுயநலம், காட்டிக்கொடுப்பு
பொய், பொய்யை அங்கீகரித்தல்
நடிப்பு, ஏமாற்றுதல்
பயம் (பணம்,பதவி, அதிகாரம்,கௌரவம்) இல்லாமல் போய்விடும் என்ற.

இஸ்லாத்தையும் அரசியலையும் சேர்க்காதீகள்??????? இது தான் இன்றைய முஸ்லிம் சமூகத்தின் நிலைப்பாடும் பேச்சும். எனவே தான் நாம் இன்று இந்த நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்பதில் சந்தேகமில்லை. ஏனென்றால் நபி (ஸல்) அவர்கள் காட்டித்தந்த இஸ்லாமிய மார்க்கத்தில் அரசியல் ஒன்டறக்கலந்ததே. எனவே நாம் நபி (ஸல்) அவர்கள் காட்டித்தந்த முழுமையான இஸ்லாத்தை பின்பற்றவில்லை என்பதே.

பொதுபலசேனாவின் அனைத்து நடவடிக்கைகளையும் வெளிப்படையாக அரசில் இருக்கும் அனைத்து முஸ்லிம் பெயர் தாங்கி பாராளுமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் அங்கீகரித்துக்கொண்டிருக்கின்றார்கள். இவர்களில் யாராவது ஒருவர் பத்திரிகை மாநாட்டிலோ அல்லது பாராளுமன்றத்திலோ வேறுவகையிலோ இதற்கு எதிரான கருத்தக்களை இன்றுவரையிலும் பேசவில்லை. கருத்துக்கள் வெளியிட்ட ஒருசிலர் அவர்களின் (பொதுபல சேனாவின்) செயற்பாட்டை அங்கீகரித்தே பேசியுள்ளார்கள். பாராளுமன்றத்தில் பள்ளிகள் தாக்கப்படவில்லை என்று உறுதியாக சொன்னபோது அதை அனைவரும் அங்கீகரித்தார்கள். உன்மைப்படுத்தினார்கள். அல்லாஹ் போதுமானவன். அனைத்தையும் பார்த்துக்கொண்டிருப்பவன். அவைபற்றி நிச்சயமாக அல்லாஹ் ஒருநாள் விசாரிக்கத்தான் போகின்றான்.

இவர்கள் ஏன் பொதுபல சேனாவின் கருத்துக்களை எதிர்பதில்லை 

இவர்களில் யார் ஹராம், ஹலால் பேனுதல் உடையவர்கள்
எத்தனை போர் குர்ஆனை ஓதுகின்றார்கள்.
யாருக்கு சமூகப்பற்று (மார்க்கப்பற்று) இருக்கின்றது.
எனவே ஏன் இவர்கள் பொதுபல சேனாவின் நடவடிக்கைகளை எதிர்க்க வேண்டும்.

இவர்களுக்கு

ஹராம்,ஹலால் பிரச்சினை கிடையாது.
எங்கயாலும் தேர்தல் பிரச்சாரத்திற்கு போனால்தானே தொழ வேண்டும் எனவே பள்ளிகள் அதிகம் தேவையில்லை. ஜும்ஆ மாத்திரம் தொழுபவர்களுக்கு ஏன் சிரிய பள்ளிகள்.
குர்ஆன் ஓதுபவர்களுக்கு தானே குர்ஆன் வேண்டும்.

தேர்தல் காலங்களில் தானே முஸ்லிம் சமூகம் வேண்டும். இப்போ ஏன் சமூகத்திற்காக பேச வேண்டும் இது உழைக்கும் காலம் உழைத்துக்கொள்வோம். (இரண்டு மேடைகளில் பேசினால் மக்களை ஏமாற்றிவிட முடியும்)

இவைகளில் இருந்து நாம் பாதுகாக்கப்பட வேண்டுமானால் அல்லாஹ்வின் நாட்டம் என்று அல்லாஹ்வின் மீது குற்றத்தை போடாமல் அல்லாஹ்வின் கட்டளையையும் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வழிகாட்டளையும் நமது வாழ்கைக்குள் கொண்டுவர வேண்டும். அப்படியென்றால் இவ்வாறான மார்கம் தெரியாத பேரளவு முஸ்லிமாக இருக்கும் அரசியல்வாதிகளை அடையாளம் கண்டு நிராகரிக்க வேண்டும். கட்சிக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் சமூகப்பற்றாளர்களைத் தேடி தெரிவு செய்ய வேண்டும். அது பிரதேச சபை முதல் பாராளுமன்றம் வரை பின்பற்றப்படல் வேண்டும். 

முஸ்லிம் சமூகத்திற்கு கிராம, பிரதேச அபிவிருத்திற்கு முதல் தமது உரிமைகளே முக்கியமாகும். உரிமைகள் அற்ற அபிவிருத்தி எதற்கு??? பள்ளியை கட்டிக்கொடுத்து தொழ வேண்டாம் என்றால் ஏன் பள்ளிவாயல்கள்.

எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் இப்பொழுது கொஞ்சம் கொக்கரித்துக்கொண்டிருந்தாலும் அவர்களின் ஆளும் கட்சி அரசியல் காலத்தை பின்னோக்கிப்பார்ப்பது முக்கியமாகும். அவர்கள் ஆளும் கட்சியில் இருக்கும் பொது இஸ்லாத்துக்காக முஸ்லிம் சமூகத்திற்காக என்ன செய்து இருக்கின்றார்கள்???  வரலாறு உண்மையை சொல்லும். இவர்கள் இப்பொழுது பேசுவதை பார்த்தால் தெளிவாக தெரிகின்றது சமூகப்பற்றைவிட அரசியல் நோக்கத்திற்காவே பேசுகின்றார்கள் என்பது.

உலமா சபையை எடுத்துக்கொண்டால் அவர்கள் நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டல் படியே செயற்படுகின்றார்கள் என்றே நான் நம்புகின்றேன். ஆனாலும் மனிதர்களில் யாறுக்கோ பயந்து அவசர அவசரமாக முடிவுகளை எடுக்கின்றார்கள் (இவர்களும் அல்லாஹ்வுக்கு மட்டும் தான் பயப்பட வேண்டும் என்ற நிலையிலிருந்து கொஞ்சம் விலகிவிட்டர்கள் போலும்) ஏனென்றால் 2013.03.11 திகதியன்று உலமாசபை எடுத்த முடிவை ஜனாதிபதியின் தெரிவுக்குழுவின் முடிவுக்குப் பின்னர் எடுத்திருக்கலாமே. அப்பபோ தானே எமது சமூகத்திற்கு இந்த அரசாங்கத்தின் நிலைப்பாட்டை காட்டியிருக்கலாம். ஹலால் சான்றுதலை விடுவதாக இருந்தால் முழுமையாக விட்டிருக்கலாமே??? இப்போ இலங்கையில் உள்ள முஸ்லிம்கள் ஹராம் கலப்பிடம் உள்ள உணவையும் உண்னலாம் என்கின்றார்களா? மனிதன் என்ற வகையில் சில அழுத்தங்களுக்கு முகங்கொடுக்க வேண்டி இருக்கிறது நமது முஸ்லிம் பெயர்தாங்கி அரசியல் வாதிகளின் சுயநலப்போக்கும் காரணமாக. 

இவர்களின் இரண்டு முடிவுகளை அதற்கு உதாரணமாக பார்க்கலாம். 

முஸ்லிம்களுக்கு மட்டும் ஹலால் என்ற முடிவை அறிவித்தபோது,  அவர்கள் பாதுகாப்புச்செயலாளரின் கூட்டத்திற்கு போய்விட்டு வந்து அடுத்த நாளே இந்த அறிவிப்பை செய்தார்கள். அதே இரண்டாவது அறிவிப்பும் அப்படியே. இதற்கென ஜனாதிபதி அமைச்சரவை குழு அமைக்கப்படு அவர்கள் முடிவு கொடுக்க முன்பு பாதுகாப்புச் செயலாளரை சந்தித்து அவசர அவசரமாக முடிவெடுப்பதற்கான காரணம் என்ன? இந்த விடயத்தை பாதுகாப்புச்செயலாளரை சந்தித்துவிட்டு முடிவு எடுக்க பாதுகாப்புச்செயலாளருக்கு உள்ள அதிகாரம் என்ன.

எனவே இங்கும் இந்த கடினம் பிரயோகிக்கப்படுகின்றதோ?

அல்லாஹ் யாவற்றையும் அறிந்தவன். 







2 comments:

  1. ”மந்திரம் கால் மதி முக்கால்’’ என்பது ஒரு பழமொழிதான்.இதன் கருத்தை இஸ்லாம்போலியானது எனக்கூறாது. ஹலால்சான்றிதழ் வேண்டும்,நீக்கமுடியாது என ஜம்மியதுல் உலமா விடாப்பிடியாக இருந்திருந்தால் முஸ்லிம் சமூகத்தை அதற்கு என்ன விலைகொடுக்கவும் தயாராக வைத்திருக்கவும் வேண்டிவந்திருக்கும்.அவ்வாறான சந்தர்ப்பம் ஏற்பட்டிருந்தால் பொதுபலசேனா பல நாசகாரவேலைகளில் ஈடுபட்டிருக்கும்.அரசாங்கமும் சந்தர்ப்பத்தைப்பயன்படுத்தி ஹலாலை அகற்றும்படி கோரலாம்.அரசு முஸ்லிம்களின் நடத்தையை பிழையானது என சுட்டிக்காட்ட நேர்ந்தால் முஸ்லிம்களை தீவிரவாதப்போக்குடையவர்கள் என்று கூற்றினை உண்மைப்படுத்த அணைத்துத்தீயசக்திகளும் கணபொழுதில் களமிறங்கும்.ஹலால் முஸ்லிம்களுக்கு அவசியம் என்பதினால் முஸ்லிம்கள் அதனை தேடிப்பெற்றுகொள்வது நன்மைக்குறிய செயலாகும்.

    ReplyDelete
  2. உஷ்... இவர்கள் தேர்தல் காலங்கள் ஹலால் சாராயம்தான் நமது இளைஞர்களுக்கு வாங்கிக் கொடுப்பார்கள், தேர்தல் முடிந்ததும் ஹலால் விஸ்கிதான் அருந்துவார்கள்.

    இவர்களிடம் போய்.....

    ReplyDelete

Powered by Blogger.