Header Ads



விளங்கப்படுத்தமுன் விளங்க முயற்சிப்போம்..!


(ஹாரிஸ் ரஷாதி)

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் ஹலால் தொடர்பான இறுதித் தீர்ப்பின் இன்றய 11-03-2013 செய்தியாளர் மாநாட்டில் நானும் கலந்து கொண்டேன் என்ற அடிப்படையில் சில விடயங்களைக் கூற விரும்புகிறேன். இம்மாநாட்டில் அறிவிக்கப்பட்ட தீர்மானங்களில் மிக முக்கியமான தீர்மானங்களாக கீழ் வருவன அமைந்தன.

01.          ஹலால் சான்றிதழ் வழங்குவதற்காக இனி கட்டணங்கள் எதுவும் அறவிடப்பட மாட்டாது. வழமைபோல் ஹலால் சான்றிதழ் வழங்கும் நடைமுறை தொடரும்.

 02.         உற்பத்திப் பொருட்களில் இலட்சினை பொறிப்பது கட்டாயம் இல்லை. ஹலால் சான்றிதழ் பெரும் ஒரு கம்பனி தான் விரும்பினால் ஹலால் இலட்சினையை உற்பத்திப் பொருட்களில் பொறிக்கலாம். விருப்பமில்லையெனில் பொறிக்காது விடலாம். 

03.          வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஹலால் இலட்சினை பொறித்தே அனுப்புதல் வேண்டும். 

இம்முடிவுகளை தெளிவாக சிந்திப்போமேயானால் முஸ்லிம்களுக்குப் பயன்கள் அதிகம் என்பதை எந்தவொரு தூர சிந்தனையாளரும் அறிவர்.    

9 comments:

  1. porutkalil halal ilatchanei porikka padaavidin ipporull halaalana thu ,halaal atrathu enru makkalaal purinthukolla mudiyuma????

    allathu athatkaana weru wali muraigal undaa?

    ReplyDelete
  2. OK BUT PLZ INFORMED TO PEOPLE, WHICH COMPANY HAVE TAKEN HALAL CERTIFICATS. I THINK IT'S HELPFULL TO MUSLIMS

    ReplyDelete
  3. But it is not said earlier.

    ReplyDelete
  4. Dear , ஒரு எதிரியை தாக்குவதற்கும், வீழ்த்துவதற்கும், ஒரு சரியான கட்டமைக்கப்பட்ட திட்டம் தேவை . திட்டமிட்டு தாக்குவதென்பது எதிரியை நேருக்கு நேர் தாக்குவது / சுற்றி வளைத்து தாக்குவது / ஆயுதங்களால் தாக்குவது / கருத்துக்களால் வீழ்த்துவது / அவசரமாக வீழ்த்துவது / பொறுத்திருந்து வீழ்த்துவது / எமது வலையில் அவர்களை வீழ்த்துவது / அவர்கள் வலையில் அவர்களையே வீழ்த்துவது , இப்படி நிறைய விடயங்களை ஆராய்ந்து தக்க தருணத்தில் புத்தி சாதுரியமாய் அவசரபடாமல் நிதானமாய் வீழ்த்த வேண்டும் /
    ஜம்மியத்துல் உலமா சபை எடுத்த முடிவு சரியே / ஜம்மியத்துல் உலமாவையும் முஸ்லிம் மக்களையும் பிரிக்க சதி நடக்கிறது . யாரும் ஏமாந்து விட வேண்டாம் .

    ஒரு சமூகத்தை/இனத்தை வீழ்த்தி சின்னாபின்னமாக்கி , அழித்தொழிப்பதற்கு செய்ய வேண்டியது, அச்சமூகத்திலுள்ள 1. பொருளாதரத்தை வீழ்த்துவது 2. அறிவாளிகள், புத்திஜீவிகளை அழிப்பது 3. சமய / மார்க்க போதகர்கள் / உலமாக்களுக்கும் , மக்களுக்கும் இடையிலுள்ள தொடர்பை இல்லாதொழிப்பது 4. அதிகாரமில்லாத சக்தி குறைந்த அறிவிலி அரசியல்வாதிகளை அச்சமூகத்திற்கு பொறுப்பலர்களாக மாற்றுவது 5. அச்சமூகதிட்கு அச்சத்தை ஏற்படுத்தி , வீரமற்றவர்களாக மாற்றுவது . 6. இறைவனுக்கும் ,மக்களுக்கும் இடையில் இடைவெளியை அதிகரிப்பது..
    இவைகள் செயல்வடிவம் பெறும்போது அச்சமூகம் இருப்பிடம் தெரியாமல் அழிந்து விடும் . இப்போதைக்கு எமது முஸ்லிம்களின் தலைமை பீடம் உலமாக்களும் , புத்தி ஜீவிகளும் நிறைந்த அமைப்பு ஜம்மியத்துல் உலமா சபையும் , ஏனைய இஸ்லாமிய உலமா அமைப்புகளும் மட்டுமே, இவ்வமைப்புகளுக்கு முஸ்லிம்களாகிய நாம் போதிய பலம் சேர்க்க வேண்டும், பிரிந்து நின்று செயற்படாமல், ஒற்றுமையை பற்றிப் பிடிப்போம் ஆமீன் ....

    ReplyDelete
  5. 1)
    a ) இலவசம் என்பதால் வியாபாரத்தை அதிகரிக்க மாற்று சகோதர சிறு உற்பத்தியாலார்களும் உருவாகலாம்.

    b ) அ.இ .ஜ . உ சபை தீவிரவாத அமைப்பும் அல்ல, அது அதனை ஆதரிப்பதும் அல்ல என்று சொல்லாமல் சொல்வது .

    c ) ஹாலாலின் முக்கியத்துவத்தை உணர்ந்து அவர்களாகவே கேட்டுப் பெறும் நிலைமை உருவாக்கியுள்ளது

    2) ஹலாலான உணவுக்கென்று நாட்டில் ஒரு நல்ல போட்டித்தன்மை ஒன்றை உருவாக்குதல்.

    3) ஒரு நிறுவனம் உள்நாட்டில் ஹாலால் இல்லாமலும் வெளிநாட்டில் ஹலாலுடனும் பொருட்களை விற்பதால் அப் பொருளின் மீதும், அந்நிறுவனம் மீதும் நம்பகத்தன்மை குறைவது .

    எல்லாவற்றிற்கும் மேலாக உலமா சபையானது அந்த அருளாளனின் உதவியுடன் இம் முடிவை எடுத்திருக்கும்.

    ReplyDelete
  6. ஹிஜாமையும் கழற்ற வேண்டுமாம் சித்திரை புதுவருடத்திட்கு முன்னே அதனை கழற்றும் தீர்மானம் எடுக்கபடதான் போகிறது ஆகவே அதட்கு நியாயம் கட்பிக்கும் அந்த புள்ளிகளை தயவு கூர்ந்து நேரகாலத்துடன் விளக்கிடுங்க மௌலானா?

    ReplyDelete
  7. சமூகத்தின் உரிமையை தாரைவார்த்துவிட்டு மந்திர விளக்கங்கள் கூறி மக்களை ஏமாற்ற வேண்டாம் .

    ReplyDelete
  8. இதில் என்ன மந்திரம் உள்ளது என்று கொஞம் சொல்லுங்களேன்.

    ReplyDelete
  9. மேலோட்டமாக நாம் தோல்வி அடைந்து விட்டோம் என எண்ணி நம்மில் உள்ள பல சகோதரர்கள் உணர்ச்சி வசப்பட்டு, மிகவும் காரசாரமாக விமர்சித்தும் விட்டார்கள். இனியும் விமர்சிப்பார்கள் சில நாட்களுக்கு. அவர்களுக்கு விளங்கும் ஆனா கொஞ்சம் சுணங்கும். இந்த நடவடிக்கைகள் மூலம் அல்லாஹ் நமக்கு பெரிய வெற்றியை வைத்துள்ளான் என்பதை நமது மக்கள் விளங்கிக் கொள்வார்கள். அதுவரை நமது தலைமையான ஜம்மியத்துல் உலமா சபையினரே பொறுத்துக் கொள்ளுங்கள். உங்களுக்காக இறைவனிடம் பிரார்த்திக்க பல உள்ளங்கள் இருக்கின்றன. பொறுமையாளர்களுடன் அல்லாஹ் இருக்கிறான். பொறுமையிழந்த எமது சகோதரர்களுக்காகவும் அல்லாஹ்விடம் நாம் பிரார்த்திப்போம். அல்லாஹ் போதுமானவன்.


    உங்களது தீர்மானத்தால் மக்கள் அனைவரும் திருப்தியடைய மாட்டார்கள். சகலதும் அறிந்தவன் அல்லாஹ், அவனுக்கு தெரியும் உங்கள் உள்ளங்களில் உள்ளவை. நீங்கள் திருப்திப் படுத்துவதற்கு அதிகம் பொருத்தமானவன் அல்லாஹ் மட்டும்தான். கவலைப் படாதீர்கள். பொறுமையாக இருங்கள். அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவான்.

    ReplyDelete

Powered by Blogger.