ஜம்மியத்துல் உலமா சபையை திட்டாதீர்கள்..!
அஸ்ஸலாமு அலைக்கும் வரமதுள்லாஹி வபரகாதுஹு .
அன்பார்ந்த இஸ்லாமிய சமூகத்திற்கு......
இன்று அனைவரினதும் பேச்சு "ஹலால் சம்பந்தமாக அகில இலங்கை ஜம்யதுல் உலமா சபை எடுத்த முடிவு தொடர்பாகவே இருகின்றது" பற்பலரும் இந்த விடயத்தை வெவேறு பார்வையிலும் பேச்சுகளிலும் விமர்சித்து கொண்டிருக்கும் இந்த வேளையில் அவசரமான ஒரு மடல்
இது போன்ற பிரச்சினைகள் ஊடாக எமது முஸ்லிம் சமூகத்தினுள் பிரிவினைகளை உண்டாக்கி எமது உணர்சிகளை தூண்டி எம்மை பிரித்து ஆளும் சூழ்ச்சி நடக்கிறது.
இஸ்லாமிய சகோதரர்களே..
இது போன்ற பிரிவினைகள் எம்மையும் எமது தூய மார்கபற்றையும் எமது சமூகத்தயும் பலவீனமாக்கி விடும் என்பதை கவனத்தில் கொள்ளவும். அதற்கு எவ்வகையிலும் நாம் காரணமாகி விட கூடாது.எமது முஸ்லிம் புத்திஜீவிகள் எடுத்த முடிவுக்கு ஆதரவாக நாம் செவி சாய்ப்போம்.
ஒற்றுமையால் ஒன்றுபடுவோம்.அனைவரும் இதை ஒரு தோல்வியாகவே கருதி சமூக இனைய தளங்களில் தவறான கருத்தை பரப்பி வருகின்றனர். இல்லை சகோதரர்களே இல்லவே இல்லை நாம் தோல்வி அடையவில்லை. இப்படி வதந்திகளும் இஸ்லாத்திற்கு எதிரான கருத்துகளும் பரப்புவர்கள் அல்லாஹ்வை பயந்து கொள்ளட்டும்.
இது எமக்கு கிடைத்த தோல்வி அல்ல...
நாம் வெற்றியை நோக்கி பயணித்து கொண்டு இருகின்றோம். ஆம் இது போல பற்பல சூழ்சிகள் நடந்தேறி இருக்கின்றன. நடக்கவும் இருக்கின்றன. இவை அனைத்தையும் அல்லாஹாவின் மார்க்கத்தை கொண்டும் அமைதியை கொண்டும் வெற்றி அடைவோம். சகோதரர்களே இது ஹலாலுக்கான முடிவாக இருந்தாலும் கூட எமக்கு எதிராக முடுக்கி விடபட்டுள்ள அந்நிய சக்திகளின் ஆரம்ப படியாகவே இருகின்றது.
அவர்கள் எமக்கு எதிராக எத்தனை பிரகடனம் கொண்டு வந்தாலும்,எத்தனை எதிர்ப்பை கொண்டு வந்தாலும் வெற்றி நமக்கே. அல்லாஹ் எம்முடன் இருகின்றான். நாம் அல்லாஹாவை பயந்து கொள்வோம்.. இது அல்லாஹ்வுடைய மார்க்கம்.. இதை அல்லாஹ் நிச்சயம் பாதுகாப்பான்...
நாம் அல்லாஹாவிடம் பாதுகாவல் தேடுவோம். அல்லாஹ்விடம் பிரார்த்தனையால் முறை இடுவோம். ஒற்றுமையால் ஒன்று படுவோம். அமைதி இனால் அந்நிய சக்திகளை எதிர்த்து நிற்போம்...
இன்ஷாஹ் அல்லாஹ்
மிகவும் வாரவேர்ற்றத்தக்க கட்டுரை
ReplyDeleteசரி, உலமா சபையை விமர்சிக்க மாட்டோம்,திட்ட மாட்டோம்.
ReplyDeleteமுஸ்லிம்களின் அடுத்த உரிமைகள் 100 வீதம் பாதுகாக்கப்படுமா?
PEOPLE WANT TO UNDERSTAND WHICH ONE HALAAL AND HARAAM, IF YOU AVOID DOUBTFUL FOOD IT WILL BE GREAT = THEN THEY WILL ASK TO PROVIDE THE HALAAL CERTIFICATE
ReplyDeleteஒரு மார்க மேதைகளை கொண்ட உலமாசபை ஊடகாங்களின் முன்னே அரசாங்க அமைச்சர்களின் உபகுழுவின் முடிவை ஏட்போம் என்று பகிறங்கமாக வாக்குறுதி அளித்துவிட்டு இரு வாரங்கள் கடந்து அந்த உபகுழுவின் முடிவுக்கு காத்திருக்காது இறுதி முடிவு என்று ஊடகங்களின் முன்னே அளித்த வாக்குறுதியை மீறி அறிவிட்பு செய்து இருப்பது நல்ல பண்புதானா வாக்கு மீறும் உரிமையை அல்லாஹ் உலமாக்களுகு மட்டும் பிரத்தியோகமாக ஆகுமாக்கி இருக்கிறானா???
ReplyDeleteஒரு project முடிஞ்சா அடுத்த project ஆரம்பிக்க எவ்வளவு நேரம் எடுக்கும். அந்த project முடியாவிட்டால்???!
ReplyDeleteporumayake irukka mudiyavillai ippadiththan kaalam sellach selle ellam maranthu pooividum ovvonrai thadai varum
ReplyDeleteAlhamthulillah, Insh Allah, Allah guide us in the right path. We warmly accept the decision and Allah can grant very good lessons to Khafir in near future. Lets ask Dua.
ReplyDeleteஎமது உரிமயை காலில் போட்டு மிதித்து விட்டு. அவர்களின் (அரசாங்கத்தின்) ஏற்றுமதிக்காக மாத்திரம் ஹலால் தேவை என்றால், இந்த நயவஞ்சக முடிவை எவ்வாறு அல்லாவுக்கு மாத்திரம் பயந்து ஏற்றுக் கொண்டீர்கள்? தற்போது அல்லாவுக்கு மாத்திரம் பயப்பட வேண்டியவர்கள் நீங்கல்தான், நாம் அல்லாஹுக்கு மாத்திரம்தான் என்றுமே அஞ்சுகிரோம் ஆதலால்தான் நீங்கள் யார் யாரோ மனித சைதான்கலுக்கு பயந்து எடுத்த இந்த முடிவை எதிர்க்கிரோம்.
ReplyDeleteINSHA ALLAH. INTHA SANTHARPATHTHIL NAM ANAIVARUM OTRUMAIYHA IRUKKA VENDUM, ENGALUKKUL PILAVUHAL ETPADAKKOODATHU. ENGALUDAIYA PORUMAIYAI KONDU ALLAH ENGALUKKU VETRIYAI VALANGUVAN.
ReplyDeleteஅன்பின் இஸ்லாமிய சகோதரர்களுக்கு
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்
இஸ்லாத்தினது ஒவ்வொரு பகுதிகளையும் மாற்று மத சகோதரர்களுக்கு
தெளிவு படுத்தக்கூடிய சந்தர்ப்பம் தற்போது ஏற்பட்டுள்ளதால் இதனை உலமாக்களும் ஏனைய நமது சகோதரர்களும் நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் .இஸ்லாமிய பிரச்சாரங்களில் ஈடுபடும் சகோதரர்கள் தங்களது சொந்தப்பணத்தை செலவளித்து இந்தப்பணிகளில் ஈடுபடும்போது அதன் விளைவுகள் நாம் எதிர்பார்ப்பதையும் விட அதிகமாக பலன்களை உருவாகும் என்பதை நாம் நபிமார்களின் வரலாறுகளில் காணக்கூடியதாகவுள்ளது .
இலங்கை உள்நாட்டு முஸ்லிம்களுக்கு இல்லாத ஹலால் உள்நாட்டு உட்பத்தியாலர்களுக்கு மட்டும் எதற்கு? ஹலால் மதக் கடமைக்கான சான்றிதலா ? அல்லது வியாபாரக் கொள்கைக்கான சான்றிதலா?
ReplyDeleteஜமியத்துல் உலமாவை குரை காண்பது நோக்கமல்ல.அமைச்சரவை உபகுழுவின் முடிவை செயல் படுத்துவோம் என்ரு கூரிவிட்டு அதன் முடிவுக்கு முன் ஏன் இப்படி முடிவு செய்தார்கல்? தெலிவில்லை.
ReplyDeleteஅரசோ பொது பல சேன்வோ அமைச்சரவை உபகுழுவோ சொல்லாமல் ஏன் இந்த முடிவை எடுத்தார்கல்? தெலிவில்லை.
அப்படி முடிவெடுத்தாலும் ஒட்டு மொத்தமாக ஒருவருக்கும் நாம் ஹலால் சான்ரிதல் கொடுப்பதில்லை என முடிவு செய்திருக்கலாம்.தெலிவில்லை
நாட்டின் நல்லினக்கத்துக்கும் அபிவிருத்திக்கும் சில விட்டுக் கொடுப்புகல் செய்ய வேண்டும் என்ற்றால் ஹலாலை விட்டுக் கொடுத்ததைப் போல் எதிரகாலத்தில் வரவிருக்கும் குர்னபான், ஹிஜாப்,தொப்பி பொன்ற விடயங்கலின் போதும் நல்லினக்கம் எனும் பெயரில் விட்டுக் கொடுப்பதற்கு உலமா சபை படி அமைத்துக் கொடுத்திருக்கிரார்கலா.....?
இலங்கை முஷ்லிம்கல் அமைச்சர்கல் எம்பீக்கல் மீது நம்பிக்கை இழந்த நிலையில் நம்பியிருந்த ஒரே இயக்கம் உலமா சபையும் அமீன் அவர்கலின் முச்லிம் கொவ்ன்சிலுமே..
முஷ்லிம் சமூகத்தை ஒருங்கினைத்து சரியான தலைமைத் துவம் கிடைக்காத பட்சம் ஒவ்வொரு முஷ்லிமும் ஒவ்வொரு விதமாய் முடிவெடுத்து செயல் பட ஆரம்பித்தால் அதன் விபரீதம் இலங்கையும் ஒரு அடுத்த மியன்மார் தான்..அப்படி நடந்தால் அதற்கான முழுப் பொருப்பும் இப்பொழுது தலைவர்கல் என்ரு கூரிக் கொல்லும் அரசியல் மற்றும் இச்லாமிய இயக்க தலைவர்கல் தான்.
அல்லாஹ் எம்மனைவரையும் காப்பாற்றுவானாக...? ஆமீன்
அஸ்ஸலாமு அலைக்கும்!
ReplyDeleteஅதாவது, எதையும் உறிவுபுரணமாக கழ்வியரிவை கொண்டு நல்ல திட்டங்களை தீட்டி முடிவெடுப்பதும் பதில் கொடுப்பதுமாக செய்யாமல், அமைதியாகவும், ஒற்றுமையாகவும், துவாவுடனும் இருந்தால் அல்லாஹ் உதவுவானா? நிங்கள் சொல்வதுபோல் வெறுமனே முயற்சிகள் இல்லாமல் உலைத்தால் என்ன பயன் கிட்டும்? முயற்ச்சிகள் இல்லாமல் எப்படி படித்து பட்டம் பெறுவது? புத்தகத்தை கையிலெடுத்து அமைதியாகவும், ஒற்றுமையாகவும், துவாவுடனும் மற்றுமிருந்து பரிச்சையில் என்னதை எழுதி கிழிக்க முடியும்? பரிச்சையில் நல்ல முறையில் சித்தியடைய வேண்டுமென்றால் நீங்கள் கூறியவைகள் மட்டும் போதாது Sir,.. நல்ல முறையில் முயற்ச்சி செய்து படிக்கவேண்டும்.
எந்த செயலை செய்தாலும் அதற்க்கு சரியான முயற்ச்சியும் உடல் பொருல் செலவும் கடிண உலைப்பும் இருந்தால் தான் அவைகளை சாதிக்க முடியும். வெறுமனே ஒற்றுமை, துவா போதாது. உலைப்பை செய்து விட்டு தான் துவா செய்ய வேண்டும்........
ஜம்மியத்துல் உலமா செய்கின்ற அனேக வேலைகளுக்கு அவர்களிடமே பதில் இல்லை என்றபோது நீங்கள் ஏன் வக்காலத்து வாங்கவேண்டும்.
பயான் பன்ன மட்டும் தெரிந்தவர்களை வைத்து செயல்பட்டால் இப்படிதான் நடக்கும் என்பதை முதலில் உணருங்கள். அவர்களுக்கு பயானை தவிர வேரென்ன தெரியும். சொல்லுங்கள்...... தலைவர் ஏன் TNL விவாத கலத்தை தட்டிகழிதார், மற்றும் ஏன் அப்படிபட்டவர்களின் கேள்விகளை தைரியமாக சந்தித்து எந்தவொரு இடத்திலாவது அவரின் பேச்சிக்களிலோ அல்லது சந்திப்பிலோ அரிவுபுரணமாக சாட்சியங்களோடு விடை கொடுத்ததுண்டா? ஒன்றுமே செய்யாமல் வெறுமனே தலைவர் பதவியை தக்க வைப்பது என்ன ஞாயம்.
ulamaakkalin mudivil insha allah nanmai irukkum.
ReplyDeletedua seivomaaha......
unmaithan sahothararkele porumaiyaha iruppom allah namakku uthavuvaan
ReplyDeleteAllah is great.
ReplyDeletemihavum nalla karuththu.masha allah
ReplyDeleteஇன்றைய ஊடகங்களில் பௌத்த பிக்குகள் றவூப் ஹகீமுக்கும் அதாவுள்ளாவுக்கும் நன்றி தெரிவித்திருக்கின்றன. அப்போ இது நீங்கள் எடுத்த முடிவு இல்லை அப்படித்தானே? அப்போ நீங்கள் சொல்லும் புத்தி ஜீவிகள் நம்ம அரசியல் வாதிகள்தானே? எனவே மீண்டும் உங்கள் கபடத்தனத்தை நிருபித்திருக்கிறீர்கள்.
ReplyDeleteputti jeevihalin mudivalla madayyarhalin mudivu ithu.
ReplyDeletehalal thavirpathaha irundal muttraha thvirka vandum export panna mattum aan halal koduttarhal.
Dear Editor
ReplyDeletePlease publish an article about how Prophet Muhammed ( Sal)
act on a situation when the rights of muslims are forbidden by
Nonmuslim on period of makkah considering the current situation.
விட்டு கொடுப்பு கொடுப்பு என்று போனால் "சஹாபாக்கள் செய்யாத தியாகங்களை செய்யாமல் சும்மா சுவர்க்கம் போக போறீர்களா " என்ற பதம் சும்மாவா அது எப்படி export items க்கு free ஹலால் உங்க சொந்த பணத்திலா பொருளாதார் அபிவிருத்திக்கு உதவபோரிகள் உலமகளே இஸ்லாம் முதுகெலும்பு இல்லாத தலிமைதுவத்ய் கொண்ட மார்க்கம் இல்லை பொறுமை வேண்டும் அது அடிப்படி உரிமை களுக்கு அல்ல
ReplyDeletewelcome to ACJU insa allah we are win dont very ok
ReplyDeleteFirst of all we must explain about HALAAL mater to Sinhalees brothers. Our Ulama Sapai also didnt explain this matter to them yet...
ReplyDeleteமாணவா்கள் இல்லாத.பாடசாைலயில் அதிபராக இறிக்கத்தான் சரி இவன் எல்லாம்
ReplyDeleteacju should understand we minorities. we made a great mistake with government in jenewa. in future acju no need the political involvement. and will never forgive the society if it happens again.we need the tamils support.jazakallah
ReplyDeleteAssalamuAlaikum
ReplyDeleteEn Eniya Sahozararhale,
Thayavu saizu Ulamakkalaipatri thawaraha pesavenda, engalukku awarhalaipatri pesa aruhazai ellai. Ulamakkal thappana mudiveduttal azakku awarkal Allah vidam pazil shollavendum.
Ella pirachchinaikkum Karanam Namazu Muslimgal ahiya Naamthan, EMAZU IMANIN BALAVINAM, AMAL HALIL PODUPOKKU.
AMALKALAI SHEERAKKUVOM + ONDRU PADUVOM.
THULUKAIYAIKONDUM,PORUMAIYAIKONUM ALLAH VIDAM UZAVI THEDUVOM.
ALLAH WITH US
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லஹி வாபரகதுஹு
ReplyDeleteஇங்கே சில சகோதரர்களின் கருத்துகளுக்கு பதில் அளிக்க விரும்புகின்றேன்
@Firas Mohamed
முஸ்லிம்களின் உரிமைகள் பாதுகாக்க படுமா என எம்முள் கேள்வி எழுப்புவதை விடுத்தது பாதுகாக்க என்ன வழி என்று ஏன் சிந்திக்க கூடாது?
@Mirshal
பொறுமையாக இருக்கும் தருணம் இது எமது அவசர முடிவுகளால் ஒட்டுமொத முஸ்லிம் சமுதாயமே பாதிக்க படும் அதற்கு நாம் வழிவகுக்க வேண்டுமா?
@Thawheedh,Azeez,Haleem
இது நயவஞ்சக முடிவல்ல
எமக்கு எதிரான சக்திகள் ஹலால் சான்றிதழை நாட்டிலிருந்து முற்றாக அகற்ற முற்பட்டனர்.ஆனால் இன்றும் இலங்கையில் ஹலால் சான்றிதழ் நடை முறையில் இருந்கின்றது
1.ஹலால் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு கொடுப்பதனால் இன்னும் ஹலால் செயன்முறை இலங்கையில் உள்ளது..இதன் மூலம் அந்நிறுவனங்கள் 2 முறையில் தயாரிப்புகளை தயாரிக்க முடியாது..இதனால் அவர்களுக்கு போருட்சேலவே அதிகரிக்கும்...ஆகவே அவர்கள் எல்லாவற்றையும் ஹலால் முறையில் தயாரித்து பின்பு பொதி செய்யும் பொழுது ஹலால் முத்திரை வெளிநாடினருக்கும் இலங்கைக்கு ஹலால் முத்திரை இல்லாமலும் தான் தயாரிப்பார்கள்...இதன் மூலம் எந்த நிறுவனங்கள் வெளிநாட்டுக்கு ஹலால் செய்கிறார்களோ அவர்கள் முழுமையாக ஹலால் தான் செய்கிறார்கள்....இது மிகவும் பெரிய வெற்றி..
2.ஹலால் இருப்பதால் தான் அதிக விலைக்கு பொருட்கள் விற்கப்படுகின்றன என்று கூறினார்கள்..ஆனால் இப்பொழுது ஹலால் இல்லை எனும் பொழுது எல்லா ஹலால் பொருட்களும் விலை குறையணும்...ஆனால் அது நடக்க போகவில்லை என்று இலங்கை வர்த்தக சம்மேளனம் கூறியுள்ளது..ஏனென்றால் ஹலால் அவர்குல்டைய செலவில் எந்த ஒரு தாக்கத்தையும் செலுத்தவில்லை என்பதால்....இதன் மூலம் பொது பல சேனா பெரிய பொய்யர்கள் என்பதை காட்ட முடியும்....
3.ஹலால் மூலம் நேரியாய காசு சம்பாரிதார்கள் என்று உலமா சபையை குற்றம் சாற்றி அச்சபையை கலைக்க பார்த்தார்கள் ..அனால் அது இலாபம் சம்பந்த பட்ட நிறுவனம் இல்லை என்று அவர்கள் ஹலால் இலவசமாக தருகிறோம் என்று கூறியதன் மூலம் அறிவித்துள்ளார்கள்.இது இன்னொரு வெற்றி....
ஏனன்றால் முஸ்லிம்களை சுற்றி ஒரு கயிறு சுற்றப்பட்டு கொண்டிருக்கிறது...இதன் மூலம் முஸ்லிம்கலுக்கு ஏற்படும் பிரச்சனையை போக்க ஒரு தலைமைதுவம் தேவை...அதற்கு தகுதியானவர்கள் தற்பொழுது 3000 பேரை கொண்ட உலமா சபையே...அதனால் எத்ரிகள் முஸ்லிம்களை இந்த சபையிடம் இருந்து பிரிக்க முஸ்லிமாகலுக்குள் இருக்கும் புல்லுருவிகள் மூலம் பிரச்சினை உண்டாக்கப் பார்கிறார்கள்.ஏனெறால் ஒரு பாம்பை கொள்வதென்றால் தலையை வெட்டினால் தான் முடியும்....இப்பொழுது இலங்கை முஸ்லிம் சமூகத்தின் தலை உலமா சபையே.
@மகதி
அரச உபகுழுவில் பொது பல சேனா,அரச உயரியிய பீடங்களின் தலையீடு இருக்காது என்பது என்ன நிச்சயம் ???
அப்படி இருந்து அது எமக்கு எதிராக இருந்து இருந்தால் அபோது மட்டும் நாம் என்ன பண்ணி இருப்போம் ?
@ Mr.True With Proof
நல்ல கருத்து
ஆகவே இந்த ஹலால் விடயத்தில் நீங்கள் கருதும் உழைப்பு என்ன?
வீதிக்கு இறங்கி சண்டை போட வேண்டுமா?
@Faizar
நாம் குறிப்பிடும் புதீஜீவிகள் அரசியல் வாதிகள் இல்லை
வீணாக அரசியல் வாதிகளை இதில் புகுத்த வேண்டாம்
இந்த விடயத்தில் அவர்களின் பங்கு ஒரு துளி கூட இல்லை
நமக்குள் ஒற்றுமையாக இருந்தால் எம்மை யாராலும் அளிக்க முடியாது
அவர்களின் உள் நோக்கம் நம் ஒற்றுமையை இவறன சம்பவங்களின் மூலம் பிரிப்பது தான்
ஒற்றுமையாக இருந்து வெற்றி பெறுவோம் இன்ஷால்லாஹ்
(எழுத்து பிளைகள் இருந்தால் மன்னிக்கவும்)