ஈராக் சந்தையில் இலங்கை தேயிலைக்கு கிராக்கி ஏற்படுத்துவது பற்றிய கலந்துரையாடல்
(இர்ஷாத் றஹ்மத்துல்லா)
இலங்கை தேயிலைக்கு தெடர்ந்தும் ஈராக் சந்தையில் சிறந்த கிராக்கியினை ஏற்படுத்துவது தொடர்பில்,ஏற்றுமதியாளர்களின் ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளும் வகையில் கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையில் இன்று 13-03-2013 ஏற்றுமதி அபிவிருத்தி சபை கேட்போர் கூடத்தில் கலந்துரையாடலொன்று இடம் பெற்றது.
கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சின் செயலாளர் அநுர சிறிவர்தன,மேலதிக செயலாளர் சீதா செனவிரத்ன,ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் பதில் தலைவரும்,நிறைவேற்று பணிப்பாளருமான கலாநிதி யூசுப்.கே.மரைக்கார்,மற்றும் வர்த்தக திணைக்கள பணிப்பாளர் உட்பட ஏற்றுமதியாளர்களும் இதன் போது பிரசன்னமாகியிருந்தனர்.
இலங்கை தேயிலையின் தரம்,ஏற்றுமதி என்பன குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டதுடன்,இலங்கையின் தேயிலைக்கே ஈராக் முன்னுரிமையளித்து அவற்றை இறக்குமதி செய்வதாகவும்,இரு நாடுகளுக்குமிடையிலான வர்த்தக உறவை மேலும் வலுப்படுத்தும் திட்டங்கள் வகுக்கப்படவுள்ளதாக இங்கு அமைச்சர் றிசாத் பதியுதீன் சுட்டிக்காட்டினார்.
அதே வேளை ஈராக் உயர் வர்த்தக குழுப் பிரதி நிதிகள் எதிர்வரும் மாதங்களில் இலங்கைக்கு வருகைத் தரவுள்ளதாகவும்,அதே போல் இலங்கை வர்த்தக குழுவொன்றும் ஈராக் செல்லவுள்ளதாகவும் அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறினார்.


இந்த நாட்டில் முஸ்லிமாக இருக்கின்ற ஒவ்வொருவருக்கும் மதம் பற்றிய உணர்வு இருக்கின்றது.அது அமைச்சர் றிசாதுக்கு மட்டும் இருக்க வேண்டம் என்று கூறுவது பிழையானது.ஆனால் அவரும் இவ்விடயங்களில் அதி கூடிய கவனம் செலுத்தியுள்ளார்.அநியாயம் கூறுவது அபத்தமானது..பொது பல சேனாவிக்கு அல்லாஹ் அவர்களது உள்ளத்தை விசாலப்படுத்தி ஈமானியத்தை கொடுக்க பிரார்த்திங்கள் நெக்ஸ்ட் அவர்களே
ReplyDeleteகாழ்ப்புணர்வுடன் எந்த ஒருவர் மீதும் விமரிசனங்களை முன் வைக்கக் கூடாது. அவ்வாறல்லாது முன் வைக்கப்படும் விமர்சனங்களும் தனி மனித தாக்குதலன்றி, நாகரிக வார்த்தைப் பிரயோகங்களுடன் அமைந்திருப்பதுவே பண்பு.
ReplyDeleteஇன்றைய கால கட்டத்தில் அமைச்சர் ரிஷாத் முஸ்லிம் சமூகத்திற்கு கிடைத்த மாபெரும் கொடை. வன்னி மாவட்டத்தில் பல்லாயிரக் கணக்கான முஸ்லிம், தமிழ் மக்களினால் விரும்பப்படுகின்ற ஓர் அமைச்சர். அவர் அரசியலுக்குள் நுழையும் முன்பே மக்கள் சேவையில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டவர். அந்த சுயநலமில்லாத அவரது சேவைக்கு அல்லாஹ் கொடுத்த பரிசுதான் இந்த அமைச்சர் பதவி.
அமைச்சர் பதவி கிடைத்த பின்பும்- ஒரு பலம் வாய்ந்த அரசியற் கட்சியை ஸ்தாபித்து அதன் மூலம் பல வெற்றிகளைக் கண்டபோதும்- தனது கடந்த கால வாழ்க்கையை மறக்காது, மிக எளிமையான முறையிலேயே தனது வாழ்க்கையை ரிஷாத் வாழ்ந்து வருகிறார் என்பதை இந்த நாடே அறியும்.
அந்நிய சக்திகள் தமது அரசியல் வங்குரோத்து நிலைமையை மறைக்க ரிஷாத் மீது அபாண்டங்களை அள்ளி வீசிய போதும், அவர் சார்ந்த வன்னியின் தமிழ் மக்களினாலோ- முஸ்லிம் மக்களினாலோ-அல்லது தேசிய ரீதியிலோ, அவர் மீது பாரிய எந்தக் குற்றச் சாட்டுகளும் இதுவரை எழவில்லை என்பது நிதர்சனம்.
நான் யார் என்பதே அமைச்சருக்குத் தெரியாது. எனவே, அவரைப் பற்றிய எனது விமர்சனங்களில் எனக்கு எந்த சுய லாபமும் இல்லை என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
நல்லதையே நினைக்கும்-நல்லதையே செய்யும் ஒருவரைப் பற்றி, நல்லதையே கூற வேண்டும் என்ற எனது மன உந்துதலின் வெளிப்பாடே அவரைப் பற்றிய எனது விமர்சனங்கள்.
அல்லாஹ் போதுமானவன்!
YES YES, WHAT HE SAID ABOUT THIS HALAAL ISSUE IF YOU DO NOT HAVE RIGHTS HOW CAN YOU SLEEP ON YOUR BED THE ONE GIVEN BY BASEER
ReplyDelete