Header Ads



பெஷன்பக் மீதான தாக்குதலுக்கு 'ஞானசார தேரரே பொறுப்பு' - அமைச்சர் ஹக்கீம்



பெப்பிலியான – கொஹுவல வீதியில் அமைந்துள்ள பெஷன்பாக் நிறுவனத்தின் மீது நேற்று இரவு குண்டர்களினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது

பொதுபல சேனா அமைப்பின் பௌத்த மத குரு 'ஞானசார தேரரே இந்த முஸ்லிம் வர்த்தக நிலையம் மீதான தாக்குதலை மறைமுகமாக தூண்டியதாக இலங்கையின் நீதி அமைச்சரான ரவூப் ஹக்கீம் குற்றம் சாட்டியுள்ளார்.

இதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், சிறுபான்மை மக்கள் மீது ஒரு உதிரிக்கும்பல் இலக்கு வைத்து தாக்குவதற்கு அரசாங்கமே இடமளித்ததாக அமைந்துவிடும் என்றும் ரவூப் ஹக்கீம் கூறுகிறார்.

இதேவேளை, இலங்கையில் முஸ்லிம்கள் கௌரவமாக வாழ்வதற்கு தமது அமைச்சுப் பதவிகள்தான் தடையாக இருக்குமானால், அதனை துறக்க தாம் தயாராக இருப்பதாக இலங்கையின் மற்றுமொரு அமைச்சரான ரிசாத் பதியுதீன் கூறியுள்ளார். ஏனைய முஸ்லிம் அமைச்சர்களும் அதற்கு தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

9 comments:

  1. அப்பாடா இன்டுதான் அமாவாச வெளிக்கிது

    ReplyDelete
  2. அடப்பாருங்கப்பா என்ன நடந்த இந்த அமைச்சா்களுக்கு ?

    சில விடயங்களில் நன்மை இருக்கு தயவு செய்து இப்ப வந்து உங்கட ஓட்டு வங்கிய நிறப்ப வேண்டாம். ஆனாலும் சில வேலைகளில் நீங்கள் அமைதியா இருப்பதும் நன்மைதான். மண்னித்துக்கொள்ளுங்கள்

    ReplyDelete
  3. பொறுமை காத்த
    சிங்கம் சீறத்துடங்கிவிட்டது .....
    பார்போம் இனியாவது ஏனைய அமைச்சர்கள் வாய் திறப்பார்களா என்று..
    ஒற்றுமையாய் குரல்கொடுப்பர்களா என்று....

    ReplyDelete
  4. Ippazan Unmaiyana Muslimkal Neegal Allah Uggal Anaivaraiyum Kappatruvan

    ReplyDelete
  5. அல்ஹம்துலில்லாஹ் நீண்ட நாகட்கலின் பின் வாய் திரந்திருக்கிரார். இது உதட்டில் இருந்தல்லாமல் உல்லத்திலிருந்து வந்தால் அல்லாஹ் உங்கலோடு இருப்பான். நாங்கலும் இருப்போம். ஆனாலும் உங்கல் அடுத்த கட்ட நடவடிக்கையையும் நாம் பார்த்துக் கொண்டு தான் இருப்போம். செயல் வடிவம் பெருமா என்ரு.

    ReplyDelete
  6. தலைவரே ! என்ன உங்களூக்கு பெஷன் பக்கில் பங்கா இதுக்கு மட்டும் வாய் திறந்திருக்கிங்க ????

    ReplyDelete
  7. வெட்கம் இல்லையா? என்ன மானம் கெட்ட பொளப்புடா இது உங்கள் பேச்சை கேட்ட காலம் மலையேறிவிட்டது. அரசியலை மறந்து விடுங்கள் ஏனென்றால் மக்கள் இப்போதுதான் விழிப்புடன் இருக்குறார்கள். இனி நல்ல business இல் இறங்குங்கள் அது வெற்றியளிக்கும்.

    ReplyDelete
  8. நீதியின் அமைச்சர்தானே நீங்கள்!
    எங்கே அந்த தேரரை நீதியின் முன் நிறுத்திக் காட்டுங்கள் பார்க்கலாம்.
    ஹெஹ்ஹெஹ்ஹெ... முடியாதுல்ல...!
    அப்ப என்ன புடுங்குறதுக்கு இந்த அரசுல இன்னமும் ஒட்டிக்கி இரிக்கிற...?
    ரோஷம் கொஞ்சம் வரப்புடாதா...!

    ReplyDelete
  9. Yaaruda ithu vaai thiranthathu ippothu solly irukkintraar aduththa election varumpothu Resign pannuvaar

    ReplyDelete

Powered by Blogger.