பெஷன்பக் மீதான தாக்குதலுடன் எமக்கு சம்பந்தமில்லை - பொதுபல சேனா
(தமிழில் அபூ முஸ்னா)
நேற்று வியாழக்கிழமை இரவு பெபிலியான பிரதேசத்தில் அமைந்துள்ள பெசன் பக் நிறுவனத்தின் மீது சில அடிப்படைவாதிகளினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், அத்தாக்குதலை பல்வேறு தரப்பினரும் எமது அமைப்பே நடாத்தியதாகக் கூறி எமது தலையில் போட முயற்சித்து வருகின்றனர் என பொது பல சேனா அமைப்பு இத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பொதுபல சேனா அமைப்பானது பௌத்த சாசனத்திற்காகவும், சிங்கள இனத்திற்காகவும், பொதுவாக சகல இலங்கையர்களின் சமாதானமான மற்றும் சமூக உரிமைகளுக்காக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒரு அமைப்பாகும். நாம் குழப்பம் ஏற்படுத்துதல் மற்றும் தொல்லைகளுக்குள்ளாக்குதல் போன்ற நடவடிக்கைகளில் ஒருபோதுமே நம்பிக்கை கொண்டவர்களல்ல. எனவே எந்தவிதமான நோக்கத்திற்காகவும் குறித்த நிறுவனத்தின் மீது தாக்குதல் மேற்கொண்டதை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
இது தொடர்பில் உடன் நடவடிக்கை மேற்கொண்டு இச்சம்பவத்தில் தொடர்புடையவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு நாம் அரசாங்கத்தை கேட்டுக் கொள்கின்றோம் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

என்ன கொடும சார்!
ReplyDeleteஐயோ பாவம்.
We know you are good guys
ReplyDeleteயாராவது சொல்லுவீர்களா நான் கனவு காண்கிறேனா இல்ல முழிச்சிட்டு தானா இருக்கன் என்று? எவ்வளவு தான் நோண்டிப் பார்ப்பது? கையெல்லாம் காயம்.
ReplyDeleteஅவனுகளத் தவிர இலங்கையில் மத்த எல்லோரும் மடையர்கள் என்று நினைத்திட்டங்க போல..
ha ha, it is a wonderful statement by BBS. BBS works according to Buddhism, for Buddhist race and for peace among all Sri Lankans and equal rights for them. They say that they are not a movement for creating problem and disturbance and they dont believe in such things too.Then who are those Bikkus who joined the attack? What are they members of? Is it another BBS2? Then who visited them at the temple in the middle of the night and not for the place of incident? Who threatened Fashion Bug not to expose the recording of their CCTV? What is happening then? when things go out of hand they are issuing media reports.Good manners
ReplyDeleteபுல்லயும் கில்லிட்டு தொட்டிலயும் ஆட்டுரான் பாருடா....! யார் குடுத்த ஐடியா...! கோ...தா....ஹே
ReplyDeleteஅட நாதாரி பயல்களா?
ReplyDeleteஇதைத்தான் சொல்வது இடுப்பில் பலமில்லாதவன் செயலென்று.
ReplyDeleteபொதுபலசேனதான் இதைச்செய்தது என்பதற்கு முன் ஆதாரமான பதிவுகளும் CCTV மூலம் பதிவுசெய்யப்பட்ட முளு நீள வீடியோவும் ஆதாரமாக இருக்கும்போது நீ எப்படி சொல்லமுடியும் இதை செய்யவில்லையென்று. வீடியோவில் உள்ள முகங்கள் அனைத்துக்கும் சரியான தண்டனை கிடைக்கவேண்டும். உண்மை ஒருபோதும் மறைந்திருக்காது வெளிவரும்.
பொதுபலசேனவை நம்பி இதுபோன்ற காரியங்களில் இறங்கி வீணான வம்புகளில் ஈடுபடும் அப்பாவி பெளத்த இழைஞர்களும், பாமரர்களும் கண்டுபிடிக்கப்பட்டு சட்டதின் கொண்டுவரப்பட்டு, தண்டிக்கப்படும்போது பொதுபலசேன ஒருபோதும் இதுபோன்ற அப்பாவிகளுக்கு உதவிசெய்யப்போவதில்லை.
பெளத்த அப்பாவிமக்களே பொதுபலசேனவை நம்பி நீங்கள் மாற்றுமதங்களுக்கெதிராக செயல்படவேண்டாம். அவர்கள் தவறான வழியில் சென்றுகொண்டிருக்கின்றார்கள். பொதுபலசேன இன்றோ நாளையோகாணமல் போய்விடுவார்கள் காரணம் அவர்கள் இதுபோன்ற செயல்பாடுகளில் ஈடுபடுவது பெளத்தமதத்தைக்காப்பதற்கோ அல்லது பெளத்த மக்களுக்கு நல்தை செய்வதற்கோ அல்லது நாட்டுக்கு நல்லது செய்வதற்கோ அல்ல மாறாக நாட்டைக்காட்டிகொடுத்தவர்க்ள் என்று அடிக்கடி சொல்வார்களே இவர்கள்தாம் அது, துரோகிகள் இவர்கள்.
பொதுபலசேனவில் உள்ள அனைத்து அங்கத்தவர்களின் பேச்சுமுறையைக்கவனித்தீர்களா அவர்கள் நாகரீகமற்ற முறையில்தான் பேசுகின்றார்கள் இதிலிருந்து நாம் எடுத்துக்கொள்ளவேண்டியது என்ன? பொதுபலசேனவில் உள்ளவர்கள் நல்லவ்ர்களல்ல அவர்கள் காடைத்தனமானவர்கள், மோசமான செயல்பாடுகளில் ஈடுபடுபவர்கள், அவர்களின் நமக்குத்தேரியாத பக்கங்கள் உள்ளன அவைகளைத்தெரிந்தால், நாம் அவர்களைக்கல்லெறிந்து கொல்ல எத்தனிப்போம் அந்தளவிற்கு கொடூரப்பாவிகள்தான் பொதுபலசேனவில் உள்ளவர்கள். அவர்களது செயல்பாடுகள் நாட்டுக்கு நல்லதை உண்டுபண்ணுவதற்கல்ல அவர்களைவைத்து இனங்களூக்கிடையில் மோதல்களை உண்டாக்கும் தீய சக்திகள் பணம்கொடுத்து வாங்கி பொதுபலசேனவை தாம் நினைத்தபடியெல்லாம் செய்துகொண்டிருக்கின்றார்கள்.
பெளத்தம், இந்து, முஸ்லிம், கிறிஸ்து என்று நாம் ஒற்றுமையாக வாழவேண்டாமா? நாளை நமது குழந்தைகளின் நிலையை நினைத்தீர்களா? இனங்களுக்கிடையே பிரிவினைகளையும், குழப்பங்களையும் உண்டுபண்ணும் பொதுபலசேன, ஜாதிக ஹெல உறுமய, சிங்கல ராவய போன்ற அமைப்புக்களும், சம்பிக்க ரனவக்க போன்ற இனவெறியர்களும் இருக்கும் வரை நாமும் நமது பின் சந்ததியினரும் ஒருபோதும் ஒற்றுமையாக வாழ முடியாது இவர்கள் வாழ விடவும் மாட்டார்கள்.
முன்பொரு யுத்தம் நடந்து முடிந்துவிட்டது, இனிமேலும் வேண்டாம் மீண்டுமொரு யுத்தம்.
முன்பு நடந்த யுத்தத்தின் ஆரம்ப நிலையும் தற்போதய நாட்டு நிலைமையும் ஒன்றாகத்தான் உள்ளது இன் நிலைமை தொடருமானால் நாட்டில் மீண்டுமொரு அழிவை உண்டுபண்ணும், ஆனால் இன்னுமொரு அழிவுக்கு வருமேயானால் அது நம் நாட்டுக்கொரு பேரழிவாகத்தான் இருக்கும் அது பெரும்பான்மைக்கும் சிறுபான்மைக்கும் நடக்கும் போராக இருக்காது அது மிகவும் அழிவுகளையும் பாதிப்புகளையும் உண்டாக்கும் என்பதில் சந்தேகமேயில்லை இதிலிருந்து நம்மை நாம் காப்பாற்ற ஒன்றுசேர்வொம் மேற்குறிப்பிட்ட நாட்டைக்குழப்பும் தீவிர எண்ணம் கொண்டவர்களுக்கெதிராக கேள்விகளை எழுப்புவோம், கோசங்களை எழுப்புவோம் அவர்களை இல்லாதொழிக்கும் வரை ஓயாமல் ஒறுபட்டு செய்ல்படுவோம்.