Header Ads



பௌத்தர்களின் உரிமைகளுக்காக பிக்குகள் எடுக்கும் முயற்சி பாராட்டுக்குரியது - மஹிந்த



பௌத்த மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்காக பிக்குகள் எடுத்து வரும் முயற்சி பாராட்டுக்குரியது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.காலணித்துவ ஆட்சிக் காலத்தில் பௌத்த மக்களின் உரிமைகளை பறிக்க முயற்சி எடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.எனினும், குறித்த காலப் பகுதியில் பௌத்த மக்களின் உரிமைகளை உறுதி செய்ய பௌத்த பிக்குகள் பாரியளவில் சேவையாற்றியதாகத் தெரிவித்துள்ளார்.

பௌத்த பிக்குகளுக்கு இடையிலான ஒற்றுமை நாட்டின் சுபீட்சத்திற்கு வழிகோலும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.சியாம், ராமன்ய மற்றும் அமரபுர போன்ற பிரிவுகளைச் சேர்ந்த பௌத்த பிக்குகள் நாட்டின் அபிவிருத்திக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.




2 comments:

  1. பஞ்சசீலத்தில் மதத்தில் பௌத்தர்களுக்கு ஆகாததாக ஆக்கப்பட்டிருக்கின்றதே! ஜனாதிபதி அவர்களே நீங்களும் பௌத்தர்தானே! நாட்டிலுள்ள மதுபானக் கடைகளை ஒரே ஒரு அறிவித்தல் மூலம் தடைசெய்யக் கூடிய அதிகாரம் மிக்க ஒரு பதவியில்தானே நீங்கள் இருக்கின்றீர்கள்.

    பௌத்த மதத்தைப் பாதுகாப்பதற்காக இரவோடு இரவாக அனைத்து மதுக்கடைகளையும் நீங்கள் ஏன் மூடிவிட முடியாது!

    வெறுமனே பிக்குகளின் பின்னால் ஒழிந்து கொள்வதனை விட்டுவிட்டு நேரடியாகவே செயலில் இறங்குங்கள் பார்க்கலாம்.

    ReplyDelete
  2. Not only that, they have to also stop cooking fish, egg, caned fish, try fish, Maldive fish, egg if they say "Sabbe saththa bahavanthu thukithaththaa". In another sense, consuming vegetables too must be stopped if they love living things in the world. They too are living and they have life. Hereafter we should see only Muslims at Muslim restaurants, not others who are secretly coming for fried meet and vatalaappam. No problem we lose business but we can make it a true Srilanka.

    ReplyDelete

Powered by Blogger.