முஸ்லீம்கள் மடயர்களாக்கப்பட்ட தினம்..!
(HIZBULLAH IBRAHEEM)
இன்று சர்வதேச ரீதியில் பல தினங்கள் கொண்டாடப்படுகின்றன. ஆசிரியர் தினம், சிறுவர்கள் தினம், மகளிர் தினம், தொழிலாளர் தினம் இவ்வாறு பல தினங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.
ஆசிரியர் தினம் ஆசிரியர்களாலும், சிறுவர்கள் தினம் சிறுவர்களாலும், மகளிர் தினம் பெண்களாலும், தொழிளாலர் தினம் தொழிளாலர்களாலும் இவ்வாறு ஒவ்வொரு அமைப்பினராலும் அவர்களுக்குரியதினங்கள் கொண்டாடப்படுகின்றன. அவ்வாறுதான் மடயர்கள் தினமும் (April fool). இத்தினத்தை கொண்டாடுபவர்கள் விடயம் கேள்வியாகவே உள்ளது. வெறும் பொய்களாலும், கட்டுக் கதைகளாலும் சோடிக்கப்பட்ட இத்தினதில்தான் பலர் மன அழுத்தத்திற்குள்ளாகின்றனர். சிலர் மரணித்தே விடுகின்றனர்.
April fool இது யூத கிறுஸ்தவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டதே. இஸ்லாம் பொய் சொல்வதையும், ஏமாற்றுவதையும், ஒருவரை அதிர்ச்சிக்குள்ளாகுவதையும் வண்மையாக கண்டிக்கிறதே தவிர அதற்கு ஒரு பொழுதும் அனுமதி வழங்கவில்லை. என்றாலும் பொய் விடயத்தில் இரு சகோதரர்களுக்கு மத்தியில் இணக்கத்தை உண்டாகக்குவதற்காகவும், மனைவியை பொருந்த வைப்பதற்காக கணவனால் சொல்லப்படும் பொய்க்கும் விதிவிலக்கு அளித்துள்ளது.
முஸ்லீம்களே! யூத கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படும் இத்தினத்தை நாம் கொண்டாடக் கூடாது. ஏனெனில் முஸ்லீம்களை மடயர்களாக சித்தரிக்கவே இத்தினம்உருவாக்கப்பட்டது. 800 வருடங்களாக ஸ்பெயினை ஆட்சி செய்து கொண்டிருத்த முஸ்லீம்களை ஆயுதங்களினால் எதிர்த்து தோல்வி கண்ட யூத கிறிஸ்தவர்கள் அடுத்த நடவடிக்கையாக சிந்தனா ரீதியான போராட்டத்தை ஆரம்பித்தனர்.
மதுவையும் மங்கைகளையும் காட்டி இஸ்லாமிய கலாசாரத்தை விட்டும் முஸ்லீம்களைத் தூரமாக்கினர். முஸ்லீம்களுடைய உள்ளங்களில் இமாம்கள், உலமாக்களைப் பற்றி தவறான எண்ணங்களை விளைத்தனர். பணத்திற்கும் ஆடம்பரத்திற்கும் அடிமைகளாக முஸ்லீம்களை மாற்றினர். இதன் விளைவாக ஈமானில் பலவீனமடைந்திருந்த முஸ்லீம்கள் சின்னாபின்னமாகி முடிவில் ஸ்பையினை எதிரிகளிடம் பறிகொடுக்கும் அவல நிலை ஏற்பட்டது.
ஸ்பெயின் பறிக்கப்பட்ட அத் தினமே April fool (முஸ்லீம்கள் மடயர்களாக்கப்பட்ட தினம்) ஆக எதிரிகளால் கொண்டாடப்படுகிறது. முஸ்லீம்களாகிய எமக்கு இத்தினம் கொண்டாடுவதற்கான தினம் அல்ல. மாறாக 800 வருடங்கள் இஸ்லாமியர்களால் ஆட்சி செய்யப்பட்ட பல இஸ்லாமிய சின்னங்களை தன் வசம் வைத்துள்ள ஸ்பெயின் இதுவரை கிடைக்கவில்லையே என்ற கவலையை இத்தினம் எமக்கு உண்டாக்க வேண்டும். இத்தினத்தின் வரலாறு மாற்றப்பட வேண்டும்.
முஸ்லீம்கள் மடயர்கள் இல்லை என்பதை இந்நாள் உலகிற்கு உணர்த்தும் நாளாக இந்நாளை மாற்ற வேண்டும். எமக்கு மத்தியில் ஏற்படும் வேற்றுமைகளை களைந்து ஒற்றுமையாக இவ் வரலாற்றை மாற்ற நாம் ஒன்றுபடுவொம் Inducer in Raze Artifice of Yahood (IRAY) சகோதரர்களாய்.
அல்லாஹு அக்பர்.

Shaykh Ibn ‘Uthaymin:
ReplyDeleteI warn my Muslim brothers against what some stupid people do when they narrate april jokes. This lie have they taken from the jews, the christians, fire-worshipers (Majus) and other disbelievers.
Not only is this act a lie, which is in itself forbidden according to the Shari’ah, it also involves imitating the disbelievers, which is forbidden. The prophet (salla Allahu ‘alayhi wa sallam) said:
“Whoever imitates a people belongs to them.”
Shaykh-ul-Islam Ibn Taymiyyah (rahimahullah) said:
“Its chain of narration is good.”
The least one could say is that it is forbidden, even if it seemingly entails disbelief.
Together with these two sins, the Muslim becomes humiliated before his enemy. It is generally known that the one who is imitated boasts before the imitator and sees himself as being in front of him. The imitator thus becomes weak so that he imitates him. The believer thusly becomes degraded since he subjugates himself and follows the disbelievers.
The fourth sin is that this filthy lie is often about taking someone else’s money unjustly and scaring the Muslims. They maybe lie and tell the family that they will be having guests. As a result thereof they prepare a great meal and meat and the like. They might also lie and tell them horrifying news of a relative being run over by a car or the like. This is not allowed.