Header Ads



அக்கரைப்பற்றில் இளைஞர் படுகொலை

(அகமட்)

அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பிரதேசத்தில் சற்று நேரத்திற்கு முன்னர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அக்கரைப்பற்று 6ஆம் நகர்ப் பிரிவில் அமைந்துள்ள ஹிஜ்ரா பாடசாலைக்கு அருகில் இன்று சனிக்கிழமை மாலை 6.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

இன்று காலை முதல் இப்பகுதியில் மின் வெட்டு அமுலில் இருந்தது. இந்நிலையில் இரவு 7 மணிக்கு மின்சாரம் வழமைக்கு திரும்புவதற்கு முன்னரே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

கூரிய ஆயுததத்தால் தாக்கப்பட்டே இவ் இளைஞன் படுகொலை செய்யப்பட்டுள்ளார். தனிப்பட்ட குரோதமே இக்கொலைக்கு காரணமாக அமைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. பொலைச் சந்தேக நபரை கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். உயிரிழந்தவரின் சடலம் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.