Header Ads



நான் அமைச்சராக இருந்தபோதும் முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதியே - அமைச்சர் றிசாத்


பாராளுமன்ற கட்டிட தொகுதியில் புதன்கிழமை ஹலால் தொடர்பில் ஆராயும் அமைச்சரவை உபகுழுவின் கூட்டம் நடைபெற்றுள்ள வேளையில் அமைச்சர்களிடையே முரண்பாடு உருவாகியுள்ளது.

இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது,

அமைச்சர் சம்பிக்க ரணவக்கவுக்கும், அமைச்சர் றிசாத் பதியுதீனுக்குமிடையே முரண்பாடான கருத்துக்கள் உருவாகியுள்ளன. இதன்போது ஒருகட்டத்தில் அமைச்சர் றிசாத் வெளிநாடுகளுக்கு ஹலால் முத்திரை பதியப்பட்ட பொருட்கள் ஏற்றுமதி செய்வதையும் நிறுத்தலாமே என குறிப்பிட்டுள்ளார். இதன்போது மற்றுமொரு அமைச்சர், றிசாத் பதியுதீனை நோக்கி, நீங்கள் வர்த்தக அமைச்சர்தானனே அப்படி கூறலாமா என கேள்வியெழுப்பியுள்ளார்.

இதற்கு பதில் வழங்கியுள்ள அமைச்சர் றிசாத், நான் வர்த்தக அமைச்சராக இருக்கலாம். ஆனால் இந்த அமைச்சரவை உபகுழுவின் கூட்டத்தில் முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதியாகவே கலந்து கொண்டிருக்கிறேன் என பதிலளித்துள்ளார்.

அத்துடன் கண்டி மாவட்டம் உள்ளிட்ட பல பிரதேசங்களில் முஸ்லிம் எதிர்ப்பு போரட்டம் தீவிரமாகியுள்ளதாகவும், இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் அமைச்சர் றிசாத் வலியுறுத்தியுள்ளதுடன், முஸ்லிம் சமூககம் மீது கண்களை மூடிக்கொண்டு குற்றம்சுமத்துவதை கைவிட வேண்டுமெனவும், குறித்த அமைச்சரவை உபகுழு கூட்டத்தில் மேற்கொள்ளப்படும் தீர்மானங்களை ஏனைய முஸ்லிம் அமைச்சர்களுக்கு அறியப்படுத்த வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளார்,

9 comments:

  1. Rishard , If your very sincere about what you’re doing Insha’Allah you will see ALLAH help without your knowledge.

    ReplyDelete
  2. உண்மையிலேயே முதுகெலும்புள்ள அமைச்சர். முஸ்லிம் சமூகத்திற்கு கிடைத்திருக்கும் மிகப் பெரும் சொத்து.

    அமைச்சர் ரிஷாத் தலைமையில் முஸ்லிம் சமூகம் அணி திரள்வதைத் தவிர இன்றைய கால கட்டத்தில் வேறு தெரிவுகள் இல்லை.

    ReplyDelete
  3. சம்பிக்க ரணவக்க கொஞ்சம் கேஸ் பாரம் தானே?
    அவர் ஏ மிச்சம் நம்மலோட முட்டிக்கொண்டு வாராறு?

    ReplyDelete
  4. மத்தவங்க மெத்தமனமாக இருந்தாங்களோ?

    ReplyDelete
  5. yes you all are ministers. definitely not our representatives. Most of you all are demagogues.

    ReplyDelete
  6. Avasarappada vendam ivarum oru arasiyalvaathi.

    ReplyDelete
  7. கண் கேட்டதிற்கு பின் சூரிய நமஸ்காரம் என்னும் பல மொழித்தான் ஜபாகம் வருது....

    ReplyDelete

Powered by Blogger.