Header Ads



இலங்கை மேசைப்பந்து அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் மன்சில் முத்தாலிப்பின் செவ்வி


(ஜே.எம்.ஹபீஸ்)

யாழ், வவுனியா மாவட்டங்களில் மேசைப் பந்து விளையாட்டுத்துறையை அபிவிருத்தி செய்ய இலங்கை மேசைப் பந்து சங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக இலங்கை மேசைப்பந்து அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் மன்சில் முத்தாலிப் தெரிவித்தார்.

முன்னாள் தேசிய மேசைப்பந்து வீரரும் மேசைப் பந்து பயிற்றுவிப்பாளர் சங்க உபதலைவருமான மன்சில் முத்தாலிப் தற்போதுமேசைப் பந்து அபிவிருத்திதொடாபான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.அவர் அதுபற்றி தகவல் தருகையில் தெரிவித்ததாவது-

அடுத்த தென்கிழக்காசிய நாடுகள் விளையாட்டுப் போட்டி மற்றும் பொதுநலவாய நாடுகள் விளையாட்டுப் போட்டி என்பவற்றில் பதக்கங்களை வெல்லும் நோக்கில் தமது பணி தொடாவதாக அவர் தெரிவித்தார்.நீண்டகாலமாக மேசைப் பந்து விளையாட்டுத்துறையில் தாம் பெற்ற அனுபவங்களை கொண்டு இதனை அடைய முடியுமென தான் எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார். தனக்கு ஏற்கனவே மேசைப் பந்து சங்பத்தில் அணித் தெரிவாளர், மேசைப் பந்து சங்கத்தின் முகாமையாளர்,அதன் பொது நிர்வாகி, போன்ற பொறுப்பான பல பதவிகளை தாம் மேற்கொண்டு இலங்கை மேசைப் பந்து சங்கத்தை வழிநடத்திய அனுபவம் பற்றியும் அவர் தெரிவித்தார். இதன் காரணமாக இலங்கையின் மேசைப் பந்துத் துறை அபிவிருத்தி அடையும் எனப் பலர் எதிர்பார்ப்பதாக எமக்குத் தெரிவித்தனர்.

இலங்கை மேசைப் பந்து வீரர்கள் ஏற்கனவே பெற்ற பல வெற்றிகள் உண்டு. அவை சர்வதேசத் தரம் வாய்ந்தவையாக இருந்துள்ளன. அதேபோல் எமது கனிஸ்ட வீரர்கள் பலரும் வெளிநாட்டுப் போட்டிகளில பங்கு கொண்டு பதக்கங்களை வென்றுள்ளனர். அதே நேரம் எமது கனிஷ்ட வீரர்கள் வளர்ந்து வரும் சந்தர்ப்பங்களில் தமது திறமைகளைக் கோட்டை விடுகின்றனர். எனவே சர்வதேச ரீதியில் வெற்றிகளை ஈட்டுவதற்கு இப்படியான சூழ்நிலைகளில் இருந்து எமது வீரர்களை மீட்டெடுக்க வேண்டும். அதற்கான வழிவகைகளை அமைத்துக் கொடுக்க வேண்டும்.

அதே நேரம் தெற்காலிசிய விளையாட்டுப் போட்டியை மட்டும் இலக்காகக் கொண்டு நாம் இயங்கவும் முடியாது. ஏனென்ரால் மேசைப்ந்து என்பது பிரபலம் மிக்க ஒரு உள்ளக விளையாட்டுத்துறையாகும். அதேபோல் வருடா வருடம் 700 வீரர்கள் பங்கு கொண்டு வருகின்றனர். அனால் ஒரு நிரந்தர உள்ளக அரங்கு இல்லாத காரணத்தால் ஒரே இடத்தில் இப்போட்டிகளை நடத்தி முடிக்க இயலாதுள்ளது.அதற்கான வளப் பற்றாக்குறை காணப்படுகிறது.

1990ம் ஆண்டு தேசிய சேமிப்பு வங்கி (Nளுடீ) அனுசரணை யாளராக இருந்து அதன் பங்களிப்பை வழங்கியது தவிர அவ்வப்போதைய நிலைமைகளுக்குஏற்பவே அனுசரணையாளர்களைத் தேடிக் கொள்ளவேண்டிய சூழல் காணப்படுகிறது.ஆனால் விளையாட்டுத்துறை அமைச்சு சில நிலையான நடவடிக்கைகளை மேற்கொண்டுவரகின்றது. இத்துறைக்கென்று காரியாலயம ஒன்றும் விளையாட்டு அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளது.

எனவே எமது மேசைப் பந்து வீரர்களுக்குத் தேவையான பயிற்சி,மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக கொடுப்பதன் மூலமே எதிர்காலத்தில் நாம் எதிர் பார்க்கும் இலக்கை எய்த முடியும். அவ்வாறான ஒரு நல்ல நிலையைத் தோhற்று விக்க பின்வரும் விடயங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஏற்கனவே மேசைப் பந்துக்கான தரமான ஒரு அடித்தளம் காணப்பட்டு வருகிறது. ஏனைய மாவட்டங்கiளுடன் ஒப்பிடும் போது வவுனியா,மற்றும் யாழ் மாவட்;டத்தில் உள்ள பாடசாலைகளில் இதனை அபிவிருத்தி செய்வதற்கான அதிகூடிய சூழ் நிலை காணப் படுகிறது. ஏனைய மாவட்ட மாணவர்களை விட இவர்களுக்கு கூடுதலான அவகாசம் உண்டு.

எனவே வவுனியா, யாழ் மாவட்டங்களில் 1500 மேசைப்பந்துக்கான தளபாடம் மற்றும் மேசைகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.இடைக்கடை இம்மாவட்டங்களில் மேசைப் பந்து தொடர்பான பயிற்சி முகாம்கள் நிறுவப்பட உள்ளன.இலங்கை மேசைப் பந்துத் துறையை ஒப்பிடும் போது தென்கிழக்காசிய பிராந்தியத்தில் இரண்டாம் இடத்தில் இலங்கையின் வளர்ச்சி பதிவாகியுள்ளது.2006ம் ஆண்டு இடம் பெற்ற ;சாப்' போட்களில் இலங்கை முதலிடத்திற்கு மிக அண்மித்த நிலையிலேதான் தோல்வியைத் தழுவியது.

இலங்கை அணியின் தீப்திகா ரொட்ரிகோ, 2009ம் ஆண்டு இந்தியாவுடனான இறுதிப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றார்.

தற்போது வடகிழக்கிற்கு வெளியேயும் எமது பயிற்சிப் பாசறைகள் இடம் பெற்று வருகின்றன என மன்சில் முத்தாலிப் மேலும் தெரிவித்தார். இஙை;கை மேசைப் பந்து சங்க இணைப்பாளர் தனது முழுமையான பங்களிப்பை மேசைப் பந்துத் துறை வளர்ச்சிக்காக வழங்கிவருவதாக மன்சில் முதாலிப் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.