பிற்போக்குவாத அமைப்புக்களை வளர்ப்பது இன்னுமொரு பயங்கர அமைப்பை உருவாக்கும்
முற்போக்குவாத அமைப்புக்களை போஷித்து வளர்க்கும் அரசாங்கம் நாட்டில் இன்னொரு பயங்கரவாத அமைப்பை உருவாக்குவதற்கு வழிசமைக்கின்றதென ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர குற்றம்சாட்டினார்.
கொழும்பில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டிலுள்ள முற்போக்குவாத அமைப்புக்களை போஷித்து வளர்க்கும் செயற்பாடானது நாட்டில் இன்னொரு பயங்கர வாத அமைப்பை உருவாக்கும் செயலாகவுள்ளது. இதனை அரந்தலாவை பிக்குகள் மீது இடம்பெற்ற தாக்குதலை நினைவுபடுத்தும் வகையில் அவ்விடத்தில் அண்மையில் ஜனாதிபதியினால் நிர்மாணித்து திறந்து வைக்கப்பட்ட நினைவாலையம் வெளிப்படுத்துகின்றது.
இவ்வாறு இடம்பெற்ற குரூரத்தனமான சம்பவங்களை நிர்மாணித்து மக்கள் மத்தியில் ஒரு குரூரமான உணர்வை உருவாக்கவே இந்த அரசாங்கம் நினைக்கின்றது. அது தான் வட, கிழக்கில் இனங்களுக்கிடையிலான யுத்தம் உருவானதற்கு அடிப்படைக் காரணமாகும். அது இன்று வியாபித்து இலங்கை பூராகவும் உருவாக்கப்பட்டுக் கொண்டு இருக்கின்றது.
இதேவேளை, இலங்கையில் நான்கு பிரதான மதங்களை தவிர வேறு மதங்கள் இருக்கக் கூடாதென அரசாங்கத்தினால் சட்டமொன்று உருவாக்கப்படவுள்ளது. இது எவ்வாறு முடியும்? எவருக்கும் எந்த மதத்தையும் பின்பற்றுவதற்கு உரிமையும் சுதந்திரமும் உள்ளது.
இந்நிலையில் ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் நாட்டுக்கெதிரானது கிடையாது. மாறாக ராஜபக்ஷ அணிக்குத் தான் அது எதிரானது. எனவே, இது குறித்து மக்கள் தெளிவாக இருக்க வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார். Vi

Post a Comment