Header Ads



முஸ்லிம்களுக்கு எதிரான பேரினத் தீவிரவாதிகளுக்கு 3 பரிமாணங்கள் உள்ளன



முஸ்லிம்களின் சமய, சமூக, கலாசார தனித்துவங்களை தீவிரவாதத்தோடு தொடர்புபடுத்தி நோக்கும் பார்வை இப்பொழுது மேலோங்கியுள்ளதாக குறிப்பிட்ட நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம், நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பிருந்தே  தமது தனித்துவத்தைப் பேணும் ஆடை அணிகளை முஸ்லிம்கள் அணிந்து வந்துள்ளனர் என்றும் அவ்வாறு அவர்கள் தங்களது தனித்துவத்தை வெளிக்காட்டுவது புதியதல்லவென்றும் தெரிவித்தார். 

நிந்தவூரில் நடைபெற்ற ஒன்றுகூடலொன்றின் போதே அமைச்சர் ஹக்கீம் இதனைக் கூறினார். 

தென்கிழக்கு பல்கலைக்கழக வேந்தர் கலாநிதி இஷாக், அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அறபுக் கல்லூரி செயலாளர் மௌலவி யூ.எம். சஹீத், அதன் பொருளாளர் யூ.எல். வாஹித், மௌலவி ஹாஷிம் (மதனி), மன்னார் அனர்த்த முகாமை உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.சி. முஹம்மது றியாஸ் ஆகியோர் உட்பட முக்கியஸ்தர்கள் பலர் இவ் ஒன்றுகூடலில் பங்குபற்றினர். 

இலங்கையின் பழமையான மத்ரஸாக்களில் ஒன்றாக விளங்கும் 1954 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு, 350கும் மேற்பட்ட உலமாக்களை உருவாக்கியுள்ள அட்டாளைச்சேனையில் அமைந்துள்ள கிழக்கிலங்கை அறபுக் கல்லூரியின் 60 ஆவது ஆண்டு விழாவை சிறப்பாகக் கொண்டாடுவது தொடர்பில் இதன் போது ஆரம்பத்திலேயே கலந்துரையாடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அங்கு இன்றைய சூழ்நிலைபற்றி வினவப்பட்டபோது அமைச்சர் ஹக்கீம் மேலும் தெரிவித்ததாவது, 

முஸ்லிம்களுக்கு எதிரான பேரினத் தீவிரவாதிகளின் வெறுப்பு நடவடிக்கைகளுக்கு சமூக, அரசியல், வர்த்தகப் பரிமாணம் என மூன்று பரிமாணங்கள் உள்ளன. காலம் காலமாக இவற்றின் மீது பேரினத் தீவிரவாதிகளின் கவனம் திரும்பியிருந்தது. 

அவர்கள் அவ்வப்போது முஸ்லிம்களை சீண்டிப் பார்த்து நாங்கள் எந்த அளவுக்கு சகித்துக்கொள்கிறோம் அல்லது எங்களது பதில் நடவடிக்கை எவ்வாறு அமையப்போகிறது என்பதை பரீட்சித்து வந்துள்ளனர். 

போத்தலில் அடைக்கப்பட்டிருந்த பூதம் இப்பொழுது வெளிக்கிளம்பியுள்ளது. வெளியில் வந்த பூதத்தை மீண்டும் போத்தலுக்குள் அனுப்புவது இலேசான காரியமல்ல. ஆப்பிழுத்த குரங்கின் நிலை ஏற்பட்டுள்ளது. 

முஸ்லிம்கள் மத்தியில் வேறுபட்ட சிந்தனைக் கோட்பாடுகள்காணப்படுகின்றன என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.  பலவீனமான மக்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு பலமான அரசாங்கத்திற்கு உண்டென நான் முன்னரும் வலியுறுத்தியிருக்கிறேன். 

முஸ்லிம்களின் சனத்தொகை அதிகரித்திருப்பதாக அச்சமடைகின்றனர். அண்மையில் நான் பிறப்பு, இறப்பு பற்றிய தலைசிறந்த புள்ளிவிபர ஆய்வாளர் பேராசிரியர் ஜயந்த திஸாநாயக்கவை சந்திக்க நேர்ந்த பொழுது அவர், முஸ்லிம்களின் சனத்தொகையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுவதைப் பற்றிப் பிரஸ்தாபித்தார். பொதுவாக சனத்தொகை விகிதாசாரத்தில் ஏற்ற இறக்கம் காணப்படுவது இயல்பானது என்றும், அது மாறும் தன்மை வாய்ந்தது என்றும் அதற்காக சிங்கள மக்கள் வீணாக அஞ்சவோ, அலட்டிக்கொள்ளவோ தேவையில்லை என்று என்னிடம் கூறினார். 

இலங்கைக்கு எதிராக ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை எதிர்த்து ஏழு முஸ்லிம் நாடுகள் வாக்களித்திருக்கின்றன. அத்துடன், 52 நாடுகள் அங்கம் வகிக்கும் முஸ்லிம் நாடுகளின் அமைப்பு ஜனாதிபதிக்கு இலங்கை முஸ்லிம்கள் தொடர்பில் ஒரு முக்கியமான கடிதத்தை அனுப்பி வைத்துள்ளன. இவ்வாறு அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார்.    


19 comments:

  1. என்னடா தலை இருக்க வால் ஆடுதே என்று பார்த்தேன். தவத்தைச் சொல்றன். ஆக நீங்க நிந்தவூருக்கு வந்து பேசி இருக்குறீர்கள்.
    அது இருக்கட்டும் தலைவா, எங்களுக்கு ஒரு குழப்பம் தெளிவு படுத்துவீர்களா? அதாவது;

    நீங்களும், தவத்தாரும், உங்கள் மற்றைய சஹாக்களும் அம்பாறை “தெயட்ட கிருல”க்கி வந்து நல்லா முஸ்பாத்தி பண்ணிப்போட்டு வந்திட்டேள்;

    ஏன்? நம்முட தவத்தார், ட்வீட்டர் (SMS) மூலம் மக்களைத் தடுத்தார்? இப்படிச் செய்தால் மக்கள் குழம்ப மாட்டர்களா?

    ReplyDelete
  2. இவன் ஆயிரம் நிலவுடன் song போடுவான்,
    பல மடையர்கள் ஏமாந்து போவர்கள்.
    யா அல்லாஹ் முனாபிக்களை அளிப்பாயாக.!

    ReplyDelete
  3. WE WELCOME THE M/C LEADER ROUF HAKEEM FOR CONCERNING THE SOCIETY AND SPEAKING ABOUT IT NOW.

    BUT HE WANTS TO SPEAK AT PARLIAMENT AND NOT IN THE OUT STATION. SO THAT OTHER MPs WILL PUT THE STRESS ON THE DEFENSE MINISTRY AND THE GOVERNMENT WILL ACT ABOUT BBS.

    ReplyDelete
  4. கூட்டங்களில் பேசுவதை விட்டுவிட்டு சட்டமியற்றும் பாராளுமன்றத்தில் பேசட்டும் பார்ப்போது.ஆனால் பேசமாட்டார்.காரணம் மக்களை எப்படி ஏமாற்றவேண்டும் என்பது அவருக்கும் அவர்கட்ச்சி சார்ந்தோருக்கும் நன்கு தெரியும் அப்பா!

    ReplyDelete
  5. இவர்கள் இப்படி நிந்தவூர் லதான் பேசுவார்கள்,kandy,colombo இல் இப்படி பேசமாட்டார்கள் ,யானை வரும் பின்னே ,மணி ஓசை வரும் முன்னே ,புரிஞ்சுதா ப்ரோதேர்ஸ் ------
    election varapovudu.

    ReplyDelete
  6. அஞ்சாநெஞ்சன்,மாமனிதர் மர்ஹூம் தந்தை அஸ்ரப்f அவர்களின் பாசறையில் வளர்க்கப்பட்ட ஓர் அரசியல் வாதியா இந்த நீதி அமைச்சர் றாவ்f ஹகீம் என்று எண்ணத்தோன்றும் அளவுக்கு செயல்கள் கானப்படுகின்ன்றன.
    நீதி அமைச்சர் றாவ்f ஹகீம் அவர்களே!
    உங்கள் பாசறையில் வளர்க்கப்படுகின்ற அல்லது பயிற்றப்படுகின்ற வளர்ந்துவரும் இளையவர் தவம் அவர்களுக்கும் உங்களுக்கும் இடையில் எந்த வேறுபாட்டையும் நான் உணரவும் இல்லை, காணவும் இல்லை. காரணம் அவரும் சமுகப்பிரச்சினை தொடர்பாக மேலோட்டமான சிறிய அறிக்கை விடுகிறார் அதே போன்று நீங்களும் செய்கிறீர்கள் மற்றும் கட்சிக்கு அல்லது மறைந்த தலைவருக்கு மற்றவர்களால் களங்கம் ஏற்படுகிறபோது எதிர்த்து அறிக்கை விடுகிறார் நீங்களும் செய்கிறீர்கள். இவ்விடத்தில் எந்த ஒரு வேறுபாட்டினையும் நான் காணவில்லை. நீங்கள் முஸ்லிம் என்ற பெயர்தாங்கிய ஒரு கட்சியின் தலைவர் மட்டுமல்லாது நாட்டின் நீதி அமைச்சர்.
    இவ்விடத்தில் நின்று சற்று சிந்திக்கமாட்டீர்களா? வளர்ந்துவரும் தவம் அவர்களைப்போன்று தானா நீங்கள் செயற்படவேண்டும். குறைந்த பட்சமேனும் உங்களது செயற்பாடு மேலோங்கி இருக்கக்கூடாத?
    நீதி அமைச்சர் றாவ்f ஹகீம் அவர்களே!
    நாங்கள் மனவேதனைப்படுகிறோம் மற்றும் எங்களை நாங்களே நொந்து
    கொள்ளுகிறோம்.காலம் பதில் சொல்லும் இன்ஷா அல்லாஹ்.
    பழயன கழித்தல் புதியன புகுதல் எனும் காலம் வரும், அந்த நேரம் இஸ்லாமிய பாசறையில் வளர்க்கப்பட்டு பயிட்டப்பட்ட தன்னம்பிக்கை
    கொண்டவர்களைக்கொண்டு மக்கள் அரசியல் செய்ய வருவார்கள். அந்த நேரம்................
    மூத்த அரசியல்வாதிகளே! மற்றும் வளந்துவரும் இளைய அரசியவாதிகளே!இஸ்லாமிய சிந்தனையோடு, அடுத்த வினடியிலேனும் கூட மரணம் வரினும் அதற்கும் தயாரான நிலையில் அரசியல் செய்ய முன் வாருங்கள்.கண்ணீர் சிந்தி நோன்பு நோற்று வாக்களித்தமக்களை ஏமாற்றாதீர்கள். நீங்கள் தேடிய சொத்துக்களும் செல்வங்களும் அவர்களின் மனவேதனையால் உங்களை நிம்மதியாக வாழவிடாது. வரலாற்றை திருப்பி பாருங்கள்.
    நன்றி.

    ReplyDelete
  7. Aamam kadantha maakaaNa sapa therthalilum Ip pachchoomthi ippadithan east la pesiyethu .... pallikalai udaipavarkalai summay vidamaaddom ena... avar vidaamalirunthathu than naavaiyum kayaiyumthan ..... paralu manrukkul muslimkalin pirachanai patri peasa.. than navai vidave illai
    .... munafeeq thanam seipavan.

    ReplyDelete
  8. வெளி வந்தது பூதம் மட்டுமல்ல பலரையும் அருவருக்க வைத்த உங்களின் சுயரூபங்களும்தான்.

    இனிமேல் நாங்கள் சாடுவது அதாவுல்லவை மட்டுமல்ல உங்களையும் சேர்த்துத்தான்.

    இஸ்லாத்தின் அடிப்படையிலான புதிய அரசியல் ஒன்றுக்கான “பிஸ்மிலின்” முழக்கம் உங்களை அதிரவைக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை.

    இன்ஷாஅல்லாஹ்.

    ReplyDelete
  9. thalaivere mannikke vendum, aver iver seivathai solli samalikkamal neegkal enne setheerkal enru makkalukkuch chollunkal seiya mudiyaviddal veliye varugkal nagkalum eththanai nalthan kaththiruppathu

    ReplyDelete
  10. ஆப்பிழுத்த குரங்கு நீங்களா,அல்லது உங்களின் உசுப்பேற்றுதலுக்கு வாக்களித்த முஸ்லிம் சமுகமா? எங்கள் உரிமை இருப்பு பற்றி உரத்து குரல் கொடுப்பீர்களென எதிர்பார்த்தோம் இலவு மரத்து கிளியானது மிச்சம். ஆனால் எல்லாவற்றையும் மொத்தமாக விற்றுவிட்டு கையறு நிலைக்கு முஸ்லிம் சமூகத்தை கொண்டு சென்றது தான் நீங்கள் செய்த சாதனை,இப்போது போத்தல் பூதம் பற்றி பூச்சாண்டி சொல்லி தப்ப முனைகிறீர்கள் ஆனால் போத்தலில் அடைக்கப்படவேண்டியவர்கள் நீங்கள் தான்.

    ReplyDelete
  11. Jaffna Muslim! Please publish news for the sake of Muslim Community. This puppet is not a polititician for doing good things for Muslims. He knows how to fool people in Eastern Province. He has been selling the muslim community for his ministerial post and luxury life from the very first day become the leader of SLMC.

    ReplyDelete
  12. weld one sir when bbs make a false statement please give a counter statement for example spitting d food when giving to our respected non muslim brothers open your mouth otherwise history will punish you

    ReplyDelete
  13. பாட்டுபாடவேண்டாம். உடன் தலைமை பொறுப்பில் இருந்து இறங்கவேண்டும். கிழக்கு மாகாண மாகாண சபை உறுப்பினர்களுக்கு உங்களுக்கு சூடு சொரணை இருந்தால் வருங்கால அரசியல் எண்ணம் இருந்தால் அரசுடன் ஒற்றிக்கொண்டு இருப்பதை தவிர்த்துக்கொள்ளுங்கள். இதுதான் இப்போதைய தேவை. இதனால் எதுவும் உங்களுக்கு நடக்காது. மக்களாகிய நாங்கள இருக்கின்றோம். இதன் மூலம் தான் தலைக்கும் வாலுக்கும் கடிவாளம் போடமுடியும்.
    சரியான தரணத்தை பயன் படுத்திக்கொள்ளுங்கள் .

    ReplyDelete
  14. சார் உங்களுக்கு மட்டும் எல்லாம் நல்லா விளங்குது. உங்களுக்கிருப்பது ஞானக்கண்.

    நீங்கள் ஒரு பெரிய தீர்க்க தரிசியாக வேண்டியவர் சும்மா அநியாயமாக மு. கா வில் சேர்ந்து, போதாதட்க்கு தலைவராகி ரொம்ப கஷ்டப் படுகிறீர்கள்?
    எனது கண்ணுக்கு தலைவர் அஸ்ரப் அவர்கள் உங்களை மரத்தடியில் சேர்த்தது தொப்பி விற்க என்று விளங்குகிறது. சார் தெரியும் தானே "தொப்பி வியாபாரியும் குரங்கும்" கதை.

    பரிமாணம் பற்றி பேசுறீங்களே நீங்கள் கூர்ப்பு கொள்கையில் உள்ள டார்வினா? அல்லது குரங்கா?
    குரங்கு மரத்தில் இருந்து இறங்குவதுபோல் இப்பதான் மலை நாட்டில் இருந்து நிந்தவூருக்கு வந்தீரோ?
    நீங்களெல்லாம் தலைவர் பதவிக்கெல்லாம் லாயக்கில்லை. வேண்டுமென்றால் கோட்டு சூட்டு போட்டுக்கு பேஷன் ஷோ களில் முயற்சி பண்ணலாம். கூட அதாவுல்லாவையும் கூட்டிக்குபோங்க அட்லீஸ்ட் பார்கிறவங்களுக்கு குளுகுளுப்பாக இருக்கும்.

    ReplyDelete
  15. சும்மா பேசினாரேயொலிய உடந்தையானவர்கலை கண்டிக்கவாவது இல்லியே.மூன்ரு பரினாமம் என்ரார். அதில் ஒன்ரு முச்லிம் அரசியல் என்ரார்.அது அவரது அரசியல் சாதகத் தன்மைக்காகத் தான் பேசினார் ஏனென்ரால் அவர் தனிக் கட்சியை வைத்துக் கொண்டு முச்லிம் விரோதப் போக்குக்கு என்ன தான் செய்தார்?

    ReplyDelete
  16. We are agree 100% Muslim welfare. .time for kick out of puppets for Rajapakse government and their money. ..

    ReplyDelete
  17. சோ்! போதும் நீங்க உங்க கையையும் வாயையும் கொஞ்சம் புழுத்தாம அடக்குங்க. நீங்க முஸ்லிம் மக்களுக்கு கிளிச்சது போதும் உங்க அடைமொழிமான் மிச்சம் வேரு ஏதும் படக்கதை இருந்தா சொல்லுங்க.


    நிச்சயம் அல்லாஹ் போதுமானவன்!!!!!!!!!!

    ReplyDelete
  18. Rauf and all the other muslim parlimentarian this is the real testing for ur responsibility on our society be afraid of Allah not for Mahinda or anybody we are the witness for u in the day of judgment tomorrow be aware of that.
    If i am on ur seat i will try to get a acceptable sollution for our community otherwise i will resign my seat come to the road with our community.... definitly our community will accept it and expecting it.....if u r the dedicator for the community do it.... and prove it.

    ReplyDelete
  19. அவர்களுக்கு மூன்று பரிமாணங்கள் உள்ளன. உங்களுக்குத் தான் ஒரு பரிமாணமும் இல்லை.

    ReplyDelete

Powered by Blogger.