இலங்கையிலுள்ள தமிழ் நாட்டவர்களை நாட்டைவிட்டு வெளியேற்றுவோமென எச்சரிக்கை
I.P. கிரிக்கெட் போட்டியில் இலங்கை வீரர்கள் கலந்துகொள்வதை தமிழ் நாட்டு அரசியல் வாதிகள் அரசியல் ஆக்கக் கூடாது. தமிழ் நாட்டில் உள்ள இலங்கையர்கள் மீதான வன்முறை அதிகரித்தால் இலங்கையிலுள்ள தமிழ் நாட்டவர்களை நாட்டைவிட்டு வெளியேற்றுவோம் என பொதுபலசேனா அமைப்பின் பிரதான செயலாளர் கலபொடஹத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
தமிழ் நாட்டில் இலங்கை விளையாட்டு வீரர்களுக்கு எதிராகவும் இலங்கை அரசுக்கு எதிராகவும் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்து கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது பற்றி அவர் மேலும் கூறுகையில்,
தமிழ் நாட்டு அரசியல் வாதிகள் இன்று நேற்றல்ல காலங்காலமாக இலங்கை அரசிற்கு இடையூறாகவே இருந்து வருகின்றனர். இலங்கை ஒரு தனிநாடு என்பதை இந்திய அரசாங்கமும் தமிழ் நாட்டு அரசாங்கமும் மறந்துவிட்டன போலும். அதனால் தான் இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் இந்தியா தலையிட்டு வருகின்றது.
இலங்கையின் உள்நாட்டு விடயங்களில் இந்தியா தலையிடுவதை பௌத்த சிங்கள மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பு என்ற வகையில் நாம் எமது கண்டனத்தைத் தெரிவிக்கின்றோம்.
தமிழ் நாட்டு அரசியல் வாதிகள் மேலும் மேலும் இலங்கை மக்களுக்கு இடையூறு விளைவித்தால் இலங்கையில் உள்ள தமிழ் நாட்டு மக்களை நாட்டிலிருந்து விரட்டி விடுவோம். அதுமட்டுல்லாது தமிழ் நாட்டில் உள்ள பிரதான விமான நிலையங்களை இலங்கையர்கள் பயன்படுத்தக் கூடாது என்ற பிரசாரத்தை எமது மக்கள் மத்தியில் கொண்டு செல்வோம். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் நட்புறவு இல்லையெனக் கூறும் தமிழ்நாடு எமக்குத் தேவையில்லை.
சென்னையில் நடைபெறவுள்ள ஐ. பி. எல். போட்டிகளில் இலங்கை வீரர்கள் பங்கெடுக்கக்கூடாது என தமிழ்நாட்டு அரசியல் வாதிகளும், மாணவர் அமைப்புகளும் தெரிவித்து வருகின்றன. தமிழ் நாட்டு அரசியல் வாதிகளுக்கு முக்கியமான அறிவுரையொன்றை தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம்.
நாடுகளுக்கு இடையிலான அரசியல் பிரச்சினைகளை விளையாட்டில் புகுத்த வேண்டாம். விளையாட்டு என்பது பிரச்சினைகளை நிவர்த்தி செய்து ஒற்றுமையை கற்றுக்கொடுக்கும் பாடமாகும். அதனை சுயலாபத்துக்காக அரசியலாக்க வேண்டாமெனவும் தெரிவித்தார்.

தேரரே உங்கட சோலியை மட்டும் பாருங்களே!
ReplyDeleteநீங்க ஏ ஊராவுட்டு சோலியை பார்குறீகள்?
மிச்சம் துள்ளாதீகோ,
' துள்ளுற மாடு பொதி சுமக்கும் '
பௌத்த சிங்கள மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பு என்று உம்மை யார் சொன்னது. நீங்கள் பெளத்தபயங்கரவாதிகள் என்று அனைவராலும் முத்திரை குத்தப்பட்டுள்ளது உமக்குத்தெரியாதா? சற்றுப்பொறுங்கள் பொதுபலசேன காடையர்களே கொஞம் பொறுங்கள் நாங்கள் பொறுமையுடன் இருக்கின்றோம் நீங்கள் என்னசெய்தாலும் நாங்கள் ஒன்றும் செய்யமாட்டோம் ஏனெனில் நாங்கள் ஒருபோதும் ஒட்டுமொத்த பொதுபலசேனவைப்போல ஒருபோதும் அறிவற்றகூட்டமல்ல, நாம் நற்பண்புடையவர்களாகவே வாழவிரும்புகின்றோம்.
ReplyDeleteஉண்மையில் பெளதர்கள் மிக மிக நல்லவர்கள் பண்புடையவர்கள் அன்னிய மததை மதிப்பவர்கள் அன்னிய மதத்தவர்களுடன் சகோதரத்துவமாகப்பழகுபவர்கள். பெளத்தர்களில் சில கெட்டவர்கள் இருந்தார்கள் அவர்கள் பொதுபலசேன என்றதொரு அமைப்பாக ஒட்டுமொத்தமாகிவிட்டார்கள், இதனால் பெளதர்களிலுள்ள மோசமானதொரு கூட்டத்தினரை ஒரேகுடையின்கீழ் கண்டுபிடித்த பொதுபலசேனவுக்கு பெளதர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் அனைவரும் நன்றிகள் தெரிவித்துக்கொள்கின்றோம்.
உவன் ஞானசார ஒரு கொட்டபாயவின் கடி நாய். சேரி கூட்டத்து மன்னன். இவனெல்லாம் காவி சீலையாலை போர்த்துக்கொண்டு தேரர் என்று அறிக்கை விட்டுககொண்டு திரியுறான். குலைக்கும் நாய்க்கு பொல்லடி கிடைக்கும். அது நிச்சயம்.
ReplyDelete