Header Ads



சவால்களை வெற்றிகொள்ள வெளிநாட்டுவாழ் இலங்கையரின் ஆதரவு வேண்டும் - மஹிந்த


நாடு முகம் கொடுத்திருக்கும் சவால்களை வெற்றி கொள்வதற்கு வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களின் பெரும் ஆதரவை இலங்கை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

இலங்கை வந்துள்ள இலங்கை அமெரிக்க சமூகத் தலைவர்களுடன்  அலரி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனை வலியுறுத்தியதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. 

சர்வதேச அரங்கில் இருக்கும் இலங்கைக்கு எதிரான சக்திகளை வெற்றிகொள்வதற்கு வெளிநாட்டில் வாழும் இலங்கையர்களது ஆதரவு மட்டுமன்றி புலம்பெயர் வாழ் சமூகத்தின் ஆதரவும் இலங்கைக்கு தேவைப்படுவதாகவும் ஜனாதிபதி இதன் போது குறிப்பிட்டுள்ளார். 

அத்துடன், முதலீட்டுத் திட்டங்களிலும் வர்த்தக அபிவிருத்திகளிலும் அவர்களது பங்களிப்பானது நாட்டின் முன்னேற்றத்துக்கு மிகவும் முக்கியமான விடயமாக அமையுமென்றும் ஜனாதிபதி ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார். 

அமெரிக்காவில் இருக்கும் இலங்கை கல்விமான்கள், வர்த்தக சமூக தலைவர்கள் மற்றும் தொழிற்சார் நிபுணர்கள் உள்ளிட்டோர்  அடங்களான இந்தக் குழுவானது 30 வருட பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்ததன் பின்னர் நாட்டை துரிதமான அபிவிருத்திக்கு இட்டுச் செல்லும் பணிகள் குறித்து ஜனாதிபதிக்கு நன்றியும் பாராட்டுயும் தெரிவித்ததாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

3 comments:

  1. நாடு முகம் கொடுக்கும் பெரும் சவாலே நீர் தான்... உனது ஆட்சியில்... இனத் துவேசம் தலை விரித்தாடுகின்றது... வெளிநாட்டு கொள்கை படு கேவலமாக சரிந்துள்ளது... பொருளாதாரம் அதல பாதாளத்தில் நோக்கி சென்று கொண்டிருக்கிறது... நாட்டில் சட்டம் ஒழுங்கு என்பது துளி அளவும் கிடையாது... உனது காட்டுத் தர்பாறு தான் நடக்கிறது..!!!!

    நிட்சயமாக இந்த நாட்டிக்கு பெரும் சவாலாக உள்ள உன்னை வீட்டுக்கு அனுப்புவது இந்த நாட்டுப் பற்றாலர்களது ( தேசப் பிரேமிகள் ) ஒவ்வொருவரினதும் கடமையாகும்.

    ReplyDelete
  2. what have you done for us, we need to pay bero more and we are sending money to home we are living out, what have you done for us to support to you, before you told tax free vehicle available and pension system available but all are by words, so why need to support you

    ReplyDelete
  3. ஜனாதிபதி அவர்களே! உமது ஆட்சியில், சிறுபான்மை இனத்தவர்களுக்கு பலவகையான நெருக்கடிகள் உண்டாக்கப்பட்டுள்ளன. பொதுபலசேன், ஜாதிக ஹெல உறுமய, சிங்ஹல ராவய போன்றவர்களின் இனவெறியாட்டங்களையும், அவர்கள் சிறுபான்மையினருக்கெதிராக அள்ளிவீசும் நச்சுக்கருத்துக்களையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் சம்மதத்துடன்தான் நடக்கின்றது என்பதை நாங்கள் தெட்டத்தெளிவாக உணரக்கூடியதாக உள்ளது. மேற்கூறப்பட்ட இனவெறியர்களின் நடவடிக்கைகள் மிகவும் பயங்கரமானதாகவும், அசிங்கமானதாகவும், பொய்யானதாகவும் இருந்தபோதும் சிறுபானமையினத்தவர்கள் மிகவும் பொறுமையாக இருக்கின்றார்கள், இருப்பினும் அவர்களுக்கெதிராக எதுவித நடவடிக்கைகளும் எடுக்கபடவில்லை, மாறாக அவர்களின் செயலகளால் நாம் வேதனைப்படுத்தப்படிருக்கும்போது, உமது சகோதரர் கோத்தபய ராஜபக்ஸவினால் பொதுபலசேனவுக்கு ஒருகாரியாலயம் பகிரங்கமாகத்திறந்துவைக்கப்பட்டிருந்தமை மிகவும் மனவேதனைக்குரியதுவும் மிகவும் கண்டிக்கத்தக்க செயலுமாகும். இருப்பினும் உமது தரப்பிலிருந்து இவைகளுக்கெதிரான எதுவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லையென்பது நாட்டிலுள்ள அனைத்துமக்கள் மனதிலும் மிகவும் கசப்பானதொரு நிகழ்வாகவும் உமது அரச நடவடிக்கைகளும், உமதுசகோதரர்களின் அணுகு முறைகளும் ஒருபோதும் மக்கள் மனதில் நல்லெண்ணங்களுக்கு வழிவகுக்காது என்பது ஆணித்தரமான உண்மை. ஆகவே தற்போது உம்மாலும் உமது குடும்பத்தாலும் தற்போது நாடும் நாட்டு மக்களும் முகம்கொடுத்திருக்கும் பிரச்சினைகளுக்கு நாட்டுமக்களாகிய நாம் அனைவரும் ஒன்றுதிரண்டு சரியான தீர்வொன்றுக்கு வரவுள்ளொம் என்பதை ஜனாதிபதி உணர்ந்துகொள்ளவேண்டும்.

    சிறுபான்மையினருக்கெதிரான இனவெறியார்களின் காடைத்தனமான நடவடிக்கைக்கு முதலின் சரியான தீர்வொன்றை அரசாங்கம் மேற்கொள்ளவேண்டும் அதற்கு சகலவழிகளிலும் அனுசரணையும் பேருதவியும், அரசியல்செலவாக்கும் வழங்கிவரும் உமது சகோதரர் கோத்தபய ராஜபக்கவுக்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும், குறைந்தபடசம் நடவடிக்கையாக சம்பிக்கரனவக்க, பொதுபலசேன அனைத்து உறுப்பினர்கள், ஜாதிக ஹெல உறுமய, சிங்கல ராவய போன்ற சகல இனத்துவேசிகளும் சிறுபான்மையினத்தினருக்கெதிராக நச்சுக்கோஸமிடுவதும், காடைத்தனமாகவும் அசிங்கத்தனமாக செயற்படுவதுவும் உடனடியாக நிறுத்தப்படவேண்டும். முதலில் இவைகளை செய்யமுடியும் ஜனாதிபதி அவர்களே!! முடியாவிட்டால் நாங்கள் எங்களால் முடிந்தளவும் முடிந்ததை செய்கின்றோம் உம்மால் முடிந்ததை செய்யவும் இதற்குமேலும் நாம் வேதனைப்படுவதற்கு ஒன்றுமில்லை, அவமானப்படுவதற்கும் ஒன்றுமில்லை, செய்யவேண்டியதெல்லாம் உம்புறமிருந்து மிகவும் மோசமான முறையில் கிடைத்தவண்ணம்தான் உள்ளது. பொறுத்திருந்து பார்கலாம். பொறுமையும் தர்மமும் ஒருபோதும் தோற்காது.

    ReplyDelete

Powered by Blogger.