இப்படியும் ஒரு ஆசிரியை..!
நார்வே நாட்டின் மேற்கு கடலோர பகுதியில் வசிப்பவர் சோலா. இவர் மழலையர் பள்ளியில் தற்காலிக ஆசிரியையாக பணியாற்றி வந்தார். சில நாட்களுக்கு முன்னர், சிறிய பாட்டிலில் தன்னுடைய ரத்தத்தை பள்ளிக்கு கொண்டு வந்தார். அதை சிறிய தட்டில் ஊற்றினார். ரத்தத்தை தொட்டு பார்க்கலாமா என்று குழந் தைகள் கேட்டனர். அதனால் என்ன... தொட்டு பாருங்கள் என்று ஆசிரியை அனுமதித்தார். குழந்தைகளும் ரத்தத்தை தொட்டு பார்த்தனர். அதன்பின், விரலில் படிந்த ரத்தத்தை எப்படி போக்குவது? என்று குழந்தைகள் கேட்டனர். அதற்கு, தன் விரலை நாக்கில் வைத்து காட்டினார் ஆசிரியை.
அதன்படி, குழந்தைகளும் ரத்தத்தை நாக்கில் தடவி விரலை சுத்தப்படுத்தினர். இந்த தகவல் அறிந்து பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தலைமை ஆசிரியர் இன்ஞர் லிசி சோமி ஆ ன்டர்சனிடம் புகார் கூறினர். இதையடுத்து ஆசிரியை பணியில் இருந்து உடனடியாக நீக்கப்பட்டார். இதுகுறித்து இன்ஞசர் லிசி கூறுகையில், 3 வயது முதல் 6 வயது வரையுள்ள குழந்தைகள் படிக்கின்றனர். ஆசிரியையின் ரத்தத்தை அவர்கள் சுவைத்த சம்பவத்துக்கு பின், ஆசிரியைக்கு எய்ட்ஸ் மற்றும் ஹெபடிடிஸ் பி பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது என்றார். ரத்த பரிசோதனை முடிவு இன்னும் வரவில்லை. ரத்தம் மூலம் குழந்தைகளுக்கு தொற்று நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு கள் குறைவாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Post a Comment