காத்தான்குடியில் தொடர்ந்தும் இராணுவத்தினர் ரோந்து நடவடிக்கைளில்
(பழுளுல்லாஹ் பர்ஹான்)
மட்டக்களப்பு காத்தான்குடிப் பிரதேசத்தில் இராணுவத்தினரின் ரோந்து நடவடிக்கைள் தொடர்ந்த வண்ணம் காணப்படுகின்றன.
கடந்த 25ம் திகதி நாடு தழுவிய ரீதியில் இடம்பெற்ற பாரிய ஹர்த்தாலுக்கு முந்திய தினத்திலிந்து ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் இராணுவத்தினர் பிரதான வீதியில் மட்டுமல்லாது உள்வீதிகளிலும் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.
காத்தான்குடி பிரதான வீதியில் ஒவ்வொரு சந்திகளிலும் ஆங்காங்கே இவர்கள் பாதுகாப்புக்கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இராணுவத்தினர் மட்டுமல்லாது விசேட அதிரடிப்படையினர்,மோட்டார் போக்குவரத்துப் பொலிஸார் உள்ளிட்டோர் இந்த நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்.

Post a Comment