புல்மோட்டையில் முஸ்லிம் குடும்பத்திற்கு நேர்ந்த கதி
(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை புல்மோட்டை பகுதியில் நேற்றிரவு ஒரே குடும்பத்தைச்சேர்ந்த நான்கு பேருக்கு உணவில் மயக்க மருந்து போடப்பட்டு மயக்க முற்ற நிலையில் புல்மோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.பின்னர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை அரசினர் பொது வைத்தியசாலைக்கு அம்புலன்ஸ் வண்டி மூலம் இடமாற்றப்பட்டுள்ளதாகவும் புல்மோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.பாதிக்கப்பட்டவர்கள் இலாஹியா நகர்,புல்மோட்டை பகுதியைச்சேர்ந்தவர்கள்.
தனக்கு வேலை தேடித்தருமாறு கூறி வந்த நபரை இரவு உணவு கொடுத்து வீட்டில் உறங்க வைத்த போதே இவர்களுக்கு மயக்கமுற்றதாகவும் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட தந்தை எல்.டி.நஐப்(60) சம்சுன் பீவி (48) எம்.என்.எம்.றியாஸ்(19) றிஸ்னா (12) ஆகியோரே பயக்கமுற்ற நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலதிக விசாரணைகளை புல்மோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment