Header Ads



முஸ்லிம்களின் கன்னத்தில் அறைந்துள்ள அரசாங்கம் - மனோ கணேசன் சாடல்


மத்தியக்கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இலங்கை பொருட்களுக்கு ஹலால் இலச்சினை வழங்க இணங்கும் அரசு, உள்நாட்டில் ஹலால் இலச்சினையை தடை செய்து இந்நாட்டு முஸ்லிம் மக்களுக்கு அநீதி இழைத்துள்ளது. இதன்மூலம் வெளிநாட்டு முஸ்லிம்களுக்கு ஹலாலை வழங்கிவிட்டு உள்நாட்டில் முஸ்லிம் சகோதர சமூகத்தின் கன்னத்தில் அறைந்துள்ளது. இதுதான் நடந்துள்ள உண்மை என ஜனநாயக  மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த  மனோ கணேசன்  மேலும் கூறியதாவது,

எதிர்காலத்தில் இலங்கைக்கு உள்ளே விற்பனை செய்யப்படும் பொருட்களில் ஹலால் இலச்சினை இருக்காது எனவும், ஆனால் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு மாத்திரம் இலவசமாக ஹலால் இலச்சினை வழங்க அகில இலங்கை ஜம்மியத்துல்  உலமா சபை இணங்கியுள்ளதன் மூலம் ஹலால் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் அரசாங்க அறிவிப்பு வெளியாகியுள்ளது.

முஸ்லிம் மக்களின் மதரீதியான நடவடிக்கைகளுக்கு பொறுப்பான தலைவர்கள் இந்த உடன்பாட்டுக்கு உடன்படுவார்களானால், இந்த முடிவு நடைமுறையாகட்டும். இதுபற்றி முஸ்லிம் சமூகம்தான் முடிவு எடுக்க வேண்டும். ஆனால் இதையடுத்து வெகு விரைவில் முஸ்லிம் பெண்கள்  உடை அணியும் பாங்கு தொடர்பிலும் புதிய பேரினவாத எதிர்ப்பு கோஷங்களை இந்நாடு எதிர்கொள்ள வேண்டிவரும் என்ற எச்சரிக்கையை நான் இந்த வேளையில் முஸ்லிம் சகோதரர்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன்.

ஹலால் இலச்சினையை இலங்கையில் ஏற்றுகொள்ள முடியாவிட்டால், ஹலால் இலச்சினை கொண்ட பொருட்களை வாங்க வேண்டாம் என்று தமது ஆதரவாளர்களுக்கு வேண்டுகோள் விடுப்பதுடன் தமது நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டு வரும்படி பொதுபல சேனைக்கு  அரசாங்கம் கண்டிப்பாக உத்தரவு பிறப்பித்திருக்க வேண்டும். அதை செய்யாமல் இந்த மத அனுஷ்டான உணவு முறைமை இன்று முழுமையாக உள்நாட்டில்  தடை செய்யப்பட்டுள்ளது.

அதேவேளை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு நாட்டுக்கு அந்நிய செலாவணியை கொண்டுவரும் பொருட்களுக்கு வர்த்தக நோக்கில் இந்த இலட்சினை பொறிக்கப்படுகிறது. அதையும், அகில இலங்கை ஜம்மியத்துல்  உலமா சபையை கொண்டே அரசாங்கம் செய்யபோகிறது. இது அரசாங்கத்திற்கு உள்ளே இருக்கும் சிங்கள-பெளத்த தீவிரவாத சக்திகளின் சாணக்கிய நிலைப்பாட்டுக்கு கிடைத்துள்ள வெற்றி.

இந்த நாட்டில் அநீதிகளுக்கு தலைவணங்கி உடன்படுவதா அல்லது அநீதிகளை எதிர்த்து ஜனநாயகரீதியாக போராடுவதா, இல்லையா என முஸ்லிம் சமூகம்தான்  தீர்மானிக்க  வேண்டும். இந்நாட்டு தமிழர்களின் மத்தியில் அநீதிக்கு இணங்கி தலைவணங்கி உடன்படும் ஒரு சிறு பிரிவினர் இருக்கும் அதேவேளையில், அநீதிக்கு எதிராக தேசிய, சர்வதேசிய ரீதியாக போராடும் வல்லமை கொண்டவர்களாக  நாங்கள் இருக்கின்றோம் என்பதை இந்த இடத்தில் ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.  



8 comments:

  1. நன்றி மனோகணேசன் அவர்களே நீங்கள் மட்டுமாவது வாயை திறந்துள்ளீர்கள் அது கண்டு ஓர் அளவேனும் சந்தோசமாக இருக்கின்றது எங்களுடைய அமைச்சர்களின் வாய்கள் எப்போதுதான் திறக்குமோ???.
    அன்புடன் அப்துல்சலாம்

    ReplyDelete
  2. ஹலாலை ஹறாமாக்குவதும்
    ஹறாமை ஹலால் ஆக்குவதுமே
    எம் இப்போதைய அரசியல் அரங்கேற்றம்.
    இன்னும் இருந்து பாருங்க!
    எத்தன கூத்து, கும்மாளம் இரிக்கெண்டு.
    --கூலிக்காரன்--

    ReplyDelete
  3. Emathu muskim aradiyal vaathikal yaavarum maraniththu vittaarkal . Endraalum neenkalaavathu emathu muslim makkalukku etpadukinra aneethikalukku kuralkoduthamaikku nandrikal

    ReplyDelete
  4. நன்றி திரு. மனோகணேசன் அவர்களே. அத்துடன் முஸ்லிம்கள் எப்போதும் இறைவன்மீதுதான் நம்பிக்கைவைத்திருப்பார்கள் இறைவன் உதவியைத்தான் நம்புவார்கள் அதுதான் முஸ்லிம்களின் இறை நம்பிக்கையின் ஒருபகுதி. இருப்பினும் இறைவன் உதவிசெயவான் நாம்தான் முயற்சிகள் செய்யவேண்டும் ஆக தாங்கள் அனீதிக்கெதிராக தேசிய சர்வதேசிய ரீதியாக போராடும் வல்லமையுள்ளவர்களாக உள்ளதாக கூறியிருந்தீர்கள் அப்படியானால் இந்த அரசாங்கத்தின் முகத்திரையைக்கிழிக்க அனைவரும் ஒன்றுதிரண்டு இவர்களின் கொடுங்கோல் ஆட்சிக்கு ஒரு முற்றுப்புள்ளிவைக்க முயற்சியுங்கள் நாமும் உமக்கு கைகொடுப்போம்...

    ReplyDelete
  5. சொறனை கெட்ட முஸ்லிம் அரசியல் வாதிகளே இனிமேல் பாவாடை கட்டிக்கொன்டு பாராளுமன்றம் போங்கள்...............

    ReplyDelete
  6. இது ஒரு சமூக சாத்தவீகப் போராட்டத்தின் துவக்கத்துக்கான தருணம்.

    ReplyDelete
  7. திரு கணேசன் அவர்களுக்கு பல நன்றிகள் . முஸ்லிம் MP கள் இவருடைய .... குடித்தா சரி இன உணர்வு வருதாண்டு பாப்பும் !

    ReplyDelete
  8. Thank you so much Mr. Manokanesan.... I'm very shame on muslim MPs and ministers, specially SLMC leader Hakeem.

    ReplyDelete

Powered by Blogger.