Header Ads

ஹலால் சான்றிதலும், ஹலாலும்..!

(ஜே.எம்.ஹபீஸ் - மூத்த ஊடகவியலாளர்)

இன்று இலங்கை முஸ்லிம்களுக்கு மத்தியில் பரவலாகப் பேசப் படும் விடயம் ஹலால் பற்றியதாகும். இங்கே நாம் சிந்திக்க வேண்டியது ஹலாலா? அல்லது ஹலால் சான்றிதலா? என்பதாகும். 

இன்று எனது நண்பர் ஒருவர் தொலைபேசியினுடாக என்னிடம் கேட்டார் 'உலமா சபையை பேரினவாத அமைப்பு விலைகொடுத்து வாங்கி விட்டதா?' என்று அதிலும் நியாயம் உண்டு. அதனடிப்படையில் அனேகர் என்னிடம் கூறிய விடயங்களை கீழே தரவிரும்பு கிறேன்.

இங்கு எனது நண்பர் கேட்டவிடயம் 'ஹலால்' பற்றியதாயின் அவரது ஆதங்கம் மிகவும் பொருந்தும்.  ஏனெனில் ஒரு முஹ்மீனுடைய வாழ்கைதான் ஹலால். எனவே ஹலால் மீது எவரும் கை வைக்க முடியாது. நாம் ஹலாலைப் பேண வேண்டும். ஹலாலாக உழைக்க வேண்டும். ஹலாலையே உண்ண வேண்டும். எமது வாழ்கை முறை, கொடுக்கள் வாங்கள, பணப் பறிமாற்றம், எமது உடை, பிரயானம், எமது சொத்து, குடும்ப வாழ்வு, பிள்ளை குட்டிகளை வளர்ப்பது உற்பட அனைத்தும் ஹலாலாகவே இருக்கவேண்டும். இதை எவராவது விட்டுக் கொடுப்பார்களாயின் அவர் மீத நாம் சினம் கொள்வது ஒருவகையில் நியாயமானதே. அதில் இரண்டு கருத்துக் கிடையாது.

இதில் வேறு ஏதும் கருத்து இருப்பின் அது எமது ஈமானின் கோளாரராகிவிடும்.
ஆனால் ஹலால் சான்றிதழ் பற்றிப் பேசும் போது இரண்டு கருத்தல்ல பல கருத்திற்கு இடமுண்டு. ஹலால் சான்றிதல் எம்மைப் பாதுகாக் உலமா சபை ஏற்படுத்தித்ததந்த  ஒரு கேடயம். அதை பாதுகாக்க முயற்சிக்க வேண்டும். முடியாது போனால் அது எமது தோல்வியாகவும் இருக்கலாம். விட்டுக் கொடுப்பாகவும் இருக்கலாம். அல்லது கோளைத் தனமாகவும் இருக்கலாம். இதற்காக நாம் உலமா சபையையோ அல்லது சில உலமாக்களையோ திட்டித் தீர்பதை விட ஹராமான உணவுகளை தவிர்ந்து கொள்வது சாலச் சிறந்தது. 

இலங்கையில் ஹலால் சான்றிதழ் நடை முறையை ஏற்படுத்தித் தந்தவர்கள் எமது உலமா சபையாகும். உலமா சபையின் பாசையில் கூறுவதாயின் அது அவர்களது குழந்தை. அதற்கு  அவர்கள் வைத்த பெயர்.அதன் உரிமை அவர்களது கையிலும் இருக்கத்தான் செய்கிறது. அல்லது உலமா சபையை நாம் எமது கையில் எடுத்து நாம் கூறும் விதத்தில் வழி நடத்தவும் முடியும்.இதற்குப் பூரண உரிமை உலமாக்கள் வசம் இருக்கிறது எனக கொள்ளவும் முடியும. சிலவேளை எப்படி நாம் உணவுகளை  தெரிந்து கொள்வது என்ற வினா ஏற்படலாம். 

இதற்கு எமது மூதாதையர்களது வழியையும் சில இடங்களில் பின்பற்றலாம். உணவில் ஹலாலை உறுதி  செய்ய ஒரு சான்றிதழால் மட்டும் முடியாது. ஏனெனில் ஒருவன் திருடிய பணத்தால் ஹலால் சான்றிதழ் வழங்கிய உணவை விலைகொடுத்து வாங்கிக் கொண்டு வந்து உண்டால் அது ஹலாலாகுமா? 

எனவே ஹலால் என்பது உலமா சபை வழங்கும் உறுதிப் பத்திரம் மட்டுமல்ல. அது எமது நடவடிக்கையுடனும் தொடர்புடையது.

எமது மூதாதையர்கள் ஹலால் சான்றிதழைப்பாhத்தா உணவுகளை தெரிவு செய்தார்கள். இயன்றவரை நாம் சந்தேகமான உணவுகளை தவிர்ந்து கொள்வோம். சொந்தத் தயாரிப்புக்களையும் எமது நிறுவனங்களுடைய உற்பத்திகளையும் இயன்றவரை பாவிக்க முயற்சி எடுப்போம். எமது உணவில் ஹலாலைப் பேணுவது எமது கடமையே தவிர சான்றிதழ்வழங்கும் நிறுவனத்தின் கடமை மட்டுமாகாது.

மற்ற விடயம் அகில இலங்கை ஜம்மியதுல் உலமா என்பது  இலங்கை மக்களுக்கு உரியதா? அல்லது வெளிநாட்டினருக்கா? என்ற சந்தேகம் வருகிறதாக ஒரு நண்பர் தெரிவித்தார். எமது உலமா சபையின் அறிக்கையைப் பார்க்குமிடத்து அது எமக்குறிய உலமா சபையாகத் தெரிய வில்லை என்றும் குற்றம் சாட்டினார். ஏனெனில் வெளிநாட்டு மக்களை பற்றி கவலைப் படுவதை விட உள்ளுர் மக்களது விடயத்திலே அவர்களுக்கு தார்மீகப் பொறுப்புக்கள் பல உண்டு என்றும் ஏற்று மதி செய்யும் போது அதனை இறக்குமதி செய்யும் நாடுகள் பார்த்துக் கொள்வார்கள் என்றார். உள்ளுரை மறந்து வெளியூரில்  எமது உலமா சபை தலையிட்டு தீர்க்கத் தேவையில்லை என்றார்.

சிலவேளை 'அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா' என்பது 'சர்வதேச ஜம்மியத்துல் உலமா'வாக ஏற்றுக் கொளளப்பட்டுள்ளதா என்ற வினா சிலரிடத்தில் தோன்றுவதும் நியாயமே.

எனவே ஜம்மியத்துல் உலமா சான்றிதழ் வழங்குவது இல்லை என்றால் அதை விட்டு விட வேண்டியதான். வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு மட்டும் வழங்குவது என்பதை மறு பரிசிலனை செய்வது நல்லது என்பதே அனேகரின் கருத்ததாக உள்ளது.

8 comments:

  1. OTRUMAI ROMPA MUKKIYAM. NAAM 9% ONLY. NAAM ETHIRKA VENDUMANAAL NAMMIDAM AVARKALIL ARAIVASI PALAM VENDUM ( QURAAN )

    ReplyDelete
  2. yes we still trust ACJU they must stop issuing halal certificate for export as wel

    ReplyDelete
  3. Good Article. Jamiyathul Ulama must completely given up halal certificate business. why export halal certificate......

    ReplyDelete
  4. உண்மைதான் தயவு செய்து சிறிது காலத்திற்காவது சம்பூரணமாக நிறுத்தி வையுங்கள் அல்லாஹ் போதுமானவன்.
    Please. Please Please

    ReplyDelete
  5. இந்தக் கட்டுரை நடுநிலைமையில் எழுதப்பட்டதாக விளங்கவில்லை அவர் சொல்கிறார் இவர் கேட்டார் என்று ஜம்இய்யத்துல் உலமாவை சாடுவதாகவே விளங்குகிறது. ஜம்இய்யத்துல் உலமா இலங்கை முஸ்லிம்களில் பெரும் பாலானோர் அங்கீகரிக்கின்ற ஒரு தலைமை. அடுத்து எடுக்கப்படும் முடிவுகள் அல்லது எட்டப்படும் தீர்மானங்கள் அனைத்து வெளிப்படையான வெற்றிகளாய் மாத்திரம் எதிர்ப்பார்பது ஆரோக்கியமானதல்ல சில விடயங்கள் உதைபியா உடன்படிக்கை போன்றும் இருக்கலாம். ஜம்இய்யத்துல் உலமா சிந்திக்காமல் எதேர்ச்சையாக எடுத்த முடிவாக விளங்கவில்லை நீண்ட பேச்சு வார்த்தைகள் கலந்துரையாடல்களுக்கு பின்னரே இத் தீர்மானத்திற்கு வந்துள்ளது என்பது தெறிகிறது. இவ்விடயங்களில் சில தவறுகள் இருக்கலாம் அந்த விடயங்களை விமர்சனமாய் அல்லாமல் ஆலோசனையாய் பக்குவமாக சுட்டிக்காட்டுவதே சிறந்தது.. இல்லையேன் முஸ்லிம் சமூகத்திற்கு இருக்கின்ற கொஞ்ச நஞ்ச நம்பிக்கையிலயையும் தகர்ப்பதாய் போய்விடும். ஹலால் விடயத்தில் கருத்துக் கூறுபவர்கள் இந்த விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும். எமக்கிருக்கின்ற இந்த தலைமையை பலப்படுத்தி எதிர்வரும் சவால்களை இதனை விட சிறப்பாய் ஓரணியாய் எதிர்கொள்வோம்.. வரலாற்றில் முஸ்லிம் சமூகம் பிலவுபட்டிருந்த போதும் வெளி சமூகங்களிடமிருந்து சவால்கள் வந்த சமயங்களில் உம்மத் ஓரணியாய் நின்று வெற்றி கண்டுள்ளது அந்த பாடங்கள் இச் சூழலில் நிறைந்த பாடங்களைத் தரும் இன்ஷா அல்லாஹ். கூட்டாக எடுக்கப்படும் தீர்மானங்களில் அல்லாஹ்வின் உதவி இருக்கிறது என்பதில் என்பதும் தீர்மானம் எடுத்து விட்டால் அல்லாஹ்வில் பொறுப்புச்சாட்டுங்கள் என்ற வஹியின் வழிகாட்டலை பின்பற்றுவோம். எமத முயற்சிகளை அல்லாஹ் ஏற்று அங்கீகரிப்பானாக!

    ReplyDelete
  6. வெளிநாட்டு ஏற்றுமதிக்கான ஹலாலையும் விட்டுக்கொடுத்தால் இன்னொரு உலமா சபை உருவாக்கப்பட்டு அதன் மூலம் ஹலால் சான்றிதள் வழங்கப்படும்.
    சிந்திப்போம், செயல்படுவோம்

    ReplyDelete
  7. அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர்களே!!!
    ஹலால் இலச்சினையை ஜம்மியத்துல் உலமா உள் நாட்டில் வாபஸ் பெற்றும் வெளி நாட்டு ஏற்றுமதிகளுக்கு மட்டும் ஹலால் என்ற ஒரு முடிவை அறிவித்து இருந்தது.

    உலமா சபையின் ஹலால் முடிவை மிகவும் வன்மையாக நேற்று எதிர்த்தவர்களில் நானும் ஒருவன்...அதற்கு முதலில் மன்னிப்பு கேற்கிறேன்...அல்லாஹ் போதுமானவன்.
    ஆனால் உலமா சபையின் அறிவிப்பு இலங்கை முஸ்லிம்களுக்கு பெரிய வெற்றியே என்று யோசித்து பார்க்கும் முஸ்லிம்களுக்கு புரியும் ...ஏனென்றால்--

    1.ஹலால் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு கொடுப்பதனால் இன்னும் ஹலால் செயன்முறை இலங்கையில் உள்ளது..இதன் மூலம் அந்நிறுவனங்கள் இரண்டு முறையில் தயாரிப்புகளை தயாரிக்க முடியாது..இதனால் அவர்களுக்கு பொருட்செலவே அதிகரிக்கும்...ஆகவே அவர்கள் எல்லாவற்றையும் ஹலால் முறையில் தயாரித்து பின்பு பொதி செய்யும் பொழுது ஹலால் முத்திரை வெளிநாட்டினருக்கும் இலங்கைக்கு ஹலால் முத்திரை இல்லாமலும் தான் தயாரிப்பார்கள்...இதன் மூலம் எந்த நிறுவனங்கள் வெளிநாட்டுக்கு ஹலால் செய்கிறார்களோ அவர்கள் முழுமையாக ஹலால் தான் செய்கிறார்கள்....இது மிகவும் பெரிய வெற்றி..

    2.ஹலால் இருப்பதால் தான் அதிக விலைக்கு பொருட்கள் விற்கப்படுகின்றன என்று கூறினார்கள்..ஆனால் இப்பொழுது ஹலால் இல்லை எனும் பொழுது எல்லா ஹலால் பொருட்களும் விலை குறைய வேண்டும்...ஆனால் அது நடக்க போகவில்லை என்று இலங்கை வர்த்தக சம்மேளனம் கூறியுள்ளது..ஏனென்றால் ஹலால் அவர்களுடைய செலவில் எந்த ஒரு தாக்கத்தையும் செலுத்தவில்லை என்பதால்....இதன் மூலம் பொது பல சேனா பெரிய பொய்யர்கள் என்பதை காட்ட முடியும்(அது நம்மளுக்கு எப்போதோ தெரிந்த விடயம் தான்).

    3.ஹலால் மூலம் நிறைய‌ காசு உழைத்தார்கள் என்று உலமா சபையை குற்றம் சாற்றி அச்சபையை கலைக்க பார்த்தார்கள் ..அனால் அது இலாபம் சம்பந்த பட்ட நிறுவனம் இல்லை என்று அவர்கள் "ஹலாலை இலவசமாக தருகிறோம்" என்று கூறியதன் மூலம் அறிவித்துள்ளார்கள்.இது இன்னொரு வெற்றி....

    ஏனென்றால் முஸ்லிம்களை சுற்றி ஒரு கயிறு சுற்றப்பட்டு கொண்டிருக்கிறது...இதன் மூலம் முஸ்லிம்கலுக்கு ஏற்படும் பிரச்சனையை போக்க ஒரு தலைமைதுவம் தேவை...அதற்கு தகுதியானவர்கள் தற்பொழுது 3000 பேரை கொண்ட உலமா சபையே...அதனால் எதிரிகள் முஸ்லிம்களை இந்த சபையிடம் இருந்து பிரிக்க முஸ்லிம்களுக்குள் இருக்கும் புல்லுருவிகள் மூலம் பிரச்சினை உண்டாக்கப் பார்கிறார்கள்.
    ஏனெறால் ஒரு பாம்பை கொள்வதென்றால் தலையை வெட்டினால் தான் முடியும்....இப்பொழுது இலங்கை முஸ்லிம் சமூகத்தின் தலை உலமா சபையே..அதனால் அதனை பற்றி பிடித்து கொள்ளுங்கள்...இதன் மூலம் முஸ்லிம்களுக்கு நன்மையே இருக்கும்...

    ஜம்மியத்துல் உலமாவின் சாணக்கியமான இந்த முடிவை நாம் பாராட்டாமல் இன்னும் எங்க‌ளுக்குள் பிளவு பட்டு இருக்கிறோம் என்றால் எஙளை நாம் புத்திசாலிகள் என்பதா அல்லது ?????????

    வஸ்ஸலாம்
    அல்லாஹ் போதுமானவன்.

    ReplyDelete
  8. அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர்களே!!!

Powered by Blogger.