Header Ads



இலங்கையர்களுக்கு 'நோவல் கொரோனா' குறித்து எச்சரிக்கை

உலகில் பல்வேறு நாடுகளில் பரவி வரும் உயிராபத்தை ஏற்பத்தியுள்ள நோவல் கொரோனா என்ற வைரஸ் தொடர்பில் இலங்கையும் கவனம் செலுத்தியுள்ளது.

இலங்கையர்கள் தொழில்புரியும் மத்திய கிழக்கு நாடுகளிலேயே இந்த வைரஸ் அதிகளவில் பரவி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனவே அந்த வைரஸ் மூலம் இலங்கைக்கு உள்ள அச்சுறுத்தல்களை குறைத்துக் கொள்வதற்காக எடுத்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு அறிவித்துள்ளதுடன், சுகாதார அமைச்சுடனும் கலந்துரையாடி வருவதாக பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் மங்கள ரந்தெனிய கூறினார்.

விலங்குகள் மூலம் இந்த வைரஸ் மனிதர்களுக்கு தொற்றுவதாக சர்வதேச செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.எனவே இந்த வைரஸ் இலங்கை மக்களை பாதிப்பதைத் தடுப்பதற்கான உயர்மட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் குமார டி சில்வா கூறினார்.

உயிராபத்தை ஏற்படுத்தக்கூடிய இந்த வைரஸ் தொடர்பில் அமெரிக்காவின் நோய் தடுப்பு மத்திய நிலையமும் சுகாதார அதிகாரிகளும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.இந்த வைரஸ் தொற்றினால் இதுவரை எட்டு பேர் உயிரிழந்துள்ளதாகவும் 14 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வைரஸ் 2003ஆம் ஆண்டு உலகளாவிய ரீதியில் பரவிய ஸாஸ் என்ற வைரஸ் வகையை சேர்ந்தது எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.