பொது பலசேனாவின் அடுத்தடுத்த திட்டங்களும், முஸ்லிம்களும்..!
(மௌலவி முஆஸ்)
அன்புள்ள இலங்கை முஸ்லிம் சகோதர, சகோதரிகளுக்கு
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹ்
மதப் போதகர்கள் என்றும் துறவிகள் என்றும் தம்மை அறிமுகப்படுத்திக்கொண்டும், பௌத்த நாட்டைப் பாதுகாப்பதாக வரிந்து கட்டிக் கொண்டும் அநியாயங்களையும் அட்டூழியங்களையும் கட்டவிழ்த்து, தன் இனத்தை முஸ்லிம்களுக்கு எதிராகத் தூண்டி வன்முறைகளுக்கு வரைபடம் வரைந்துள்ள பொது பல சேனா எனும் இயக்கம் அரசாங்கத்தின் பூரண ஒத்துழைப்புடன் செயல்படுவது வெட்ட வெளிச்சமாகியுள்ளதை நான் கூற முன்பே நீங்கள் புரிந்திருப்பீர்கள்.
இவ்வாறான இக்கட்டான சூழ்நிலையில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவும் அவர்களுடன் சார்ந்த குழுக்கழும் எடுக்கும் முடிவுகளை எதிர்ப்பதோ, விமர்சிப்பதோ எப்பயனையும் அளிக்காது என்பதனையும், அவ்வாறான நடவடிக்கைகள் எம்மை மேலும் மேலும் பின்னடையச் செய்யும் என்பதனையும் கூறிக் கொள்வதோடு, விஷேசமாக வெளிநாடுகளில் இருந்து கொண்டு இலங்கைச் சூழலைப் பற்றியோ, எதிர் விளைவுகளைப் பற்றியோ அறியாது கண்டபடி விமர்சனங்களை எழுதுவதைத் தவிர்க்குமாறும் வேண்டிக் கொள்கின்றேன்.
ஜம்இய்யதுல் உலமாவின் தீர்மானத்தில் "ஏற்றுமதிப் பொருட்களுக்கும் ஹலால் சான்றிதழ் கிடையாது" என்று குறிப்பிட்டிருந்தால். பொருளாதாரப் பின்னடைவைத் தாங்க முடியாமல் மீண்டும் ஹலால் சான்றிதழுக்கான அனுமதியை சிலவேளை பெறுவதற்கான வாய்ப்பை எதிர்காலங்களிலாவது பெற்றிருக்கலாம் எனக் கருதுகிறேன்.
என்றாலும் இக்கட்டான சூழ் நிலையில் கலவரமொன்றுக்காக சூடேற்றப்படும் சந்தர்ப்பத்தில் இவ்வாறு முடிவெடுத்துள்ளீர்கள்.
பொது பலசேனாவின் முதல் வெறியாட்டம் இலங்கை நாட்டில் ஹலால் முத்திரையை ஒழிப்பதே. அதனை எதிர்த்துப் போராடுவதற்கும், அறிவுகெட்ட சமூகத்துக்கு ஹலால் ஹராம் பற்றி முடிந்தளவு தெளிவுபடுத்துவதற்கும் பல்வேறு கூட்டங்களை ஏற்படுத்தி அயராத முயற்சியில் ஈடுபட்ட அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவுக்கு தனிப்பட்ட ரீதியில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இன்று இந்நாட்டு முழு முஸ்லிம்களுக்கும் ஏற்பட்டுள்ள அவல நிலைக்கும், பிரச்சினைகள் நாளுக்கு நாள் வளர்வதற்கும் களம் அமைத்துக் கொடுத்த எவரும் அல்லாஹ்வின் விசாரனையின்போது தப்பவே முடியாது என்பதனைத் தெரிவிப்பதோடு, ஈருலகிலும் இறைவனின் சாபமும் சோதனைகளும், தண்டனைகளும் அவர்கள் மீது இறங்கட்டும் எனப் பிரார்த்திப்போமாக.
பின் விளைவுகள் பற்றி துளியளவும் சிந்தனையற்ற பொறாமையும், குரோதமும், சுயநலமும் கொண்ட முஸ்லிம்களில் சிலர் இயக்கங்களைப் பட்டியலிட்டுக் காட்டிக் கொடுத்ததே இக் கொந்தளிப்பின் அத்திவாரம் என்றால் மிகையாகாது. இஸ்லாத்தினதும், முஸ்லிம் சமூகத்தினதும் துரோகிகளான இக்கயவர்களை அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான்.
நபி (ஸல்) அவர்களுக்கு இறைவன் அருளிய அடுத்துவரும் அல் குர்ஆன் வசனங்களிலிருந்து நாமும் படிப்பினை பெறுவோமாக.
நிச்சயமாக இதற்கு முன்னரும் அவர்கள் குழப்பத்தை விரும்பியிருக்கிறார்கள். உமது காரியங்களை புரட்டியும் இருக்கிறார்கள். முடிவில் சத்தியம் வந்தது. அவர்கள் வெறுக்கக் கூடியவர்களாக உள்ள நிலையில் அல்லாஹ்வுடைய காரியம் (மார்க்கம்) மேலோங்கியது.
“(வீட்டிலேயே தங்கியிருக்க) எனக்கு அனுமதி தாருங்கள்; என்னை சோதனைக்கு உள்ளாக்காதீர்கள்” என்று சொல்வோரும் அவர்களிடையே இருக்கிறார்கள்; அவர்கள் சோதனையிலன்றோ வீழ்ந்துவிட்டார்கள். மேலும் நிச்சயமாக நரகம் காஃபிர்களை (எல்லாப் பக்கங்களிலிருந்தும்) சுற்றி வளைத்துக் கொள்ளும்.
உமக்கு ஏதாவது ஒரு நன்மை ஏற்பட்டால், அது அவர்களுக்குத் துக்கத்தைத் தருகின்றது; உமக்கு ஏதாவது துன்பம் ஏற்பட்டால், அவர்கள் “நிச்சயமாக நாங்கள் எங்களுடைய காரியத்தில் முன்னரே எச்சரிக்கையாக இருந்து கொண்டோம்” என்று கூறிவிட்டு மிக்க மகிழ்ச்சியுடன் (உம்மை விட்டுச்) சென்று விடுகிறார்கள்.
“ஒருபோதும் அல்லாஹ் விதித்ததைத் தவிர (வேறு ஒன்றும்) எங்களை அணுகாது; அவன் தான் எங்களுடைய பாதுகாவலன்” என்று (நபியே!) நீர் கூறும்; முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே பூரண நம்பிக்கை வைப்பார்களாக!
(நபியே!) நீர் கூறுவீராக: ”(வெற்றி அல்லது வீர மரணம் ஆகிய) இரு அழகிய நன்மைகளில் ஒன்றைத் தவிர வேறு எதையும் நீங்கள் எங்களுக்காக எதிர்பார்க்க முடியுமா?” ஆனால் உங்களுக்கோ அல்லாஹ் தன்னிடத்திலிருந்தோ அல்லது எங்கள் கைகளினாலோ வேதனையை அளிப்பான் என்று நாங்கள் எதிர்ப்பார்க்கிறோம் - ஆகவே நீங்கள் எதிர்பார்த்திருங்கள், நாங்களும் உங்களோடு எதிர்பார்த்திருக்கின்றோம். (அத்தியாயம்: அத்தௌபா வசனம்: 48-52)
(அரசாங்க) பொது பலசேனாவின் அடுத்தடுத்த திட்டங்களுக்கும் தலை குனியாமல் இப்போதிருந்தே தக்க நடவடிக்கைகளை எடுக்கவேண்டியது அவசியமே எனக் கருதுகின்றேன்.
ஒழுக்கமோ, மரியாதையோ, நாணமோ, வெட்கமோ தம் மதத்தில் கூறப்படாத சமூகத்தின் அடுத்த இலக்கு எமது பெண்களின் இஸ்லாமிய ஆடையைக் கழற்றி எறிவதே. இதற்கெல்லாம் பணிந்தால் தொப்பி, தாடி, ஜுப்பா, அதான், குத்பா, மத்ரஸாக்கள் போன்றவற்றுக்கும் வேட்டு வைக்கமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?
நாளடைவில் அவர்களின் கைப்பொம்மைகளாக நாம் வாழும் அவல நிலை பற்றி சிந்திப்போம். எனவே மிக மிகச் சிந்தித்து செயல்படுவோம். எமது மூத்த அறிவாளிகளை இனங்கண்டு தீர்வு யோசனைகளைக் காலந்தாழ்த்தாது முன்னெடுப்போம்.
யா அல்லாஹ்! தன்னிகரற்ற பரிபூரண இப்புனித இஸ்லாத்தை முழுமையாகக் கடைப்பிடிக்கும் நல்லுணர்வையும், சோதனைகளில் பொறுமையையும், வெற்றியையும் அருள்வாயாக. உலகில் நாலா பகுதிகளிலும் சோதனைகளுக்கு முகங்கொடுக்கும் முஸ்லிம்களுக்கு விடிவை வழங்குவாயாக. முஸ்லிம்களுக்கும், இஸ்லாத்துக்கும் எதிராக இழைக்கப்படும் சூழ்ச்சியாளர்களின் ஒற்றுமையைச் சீர் குழைத்து அவர்களைச் சின்னாபின்னப்படுத்துவாயாக.

AAMEEN.
ReplyDeleteயா அல்லாஹ்! தன்னிகரற்ற பரிபூரண இப்புனித இஸ்லாத்தை முழுமையாகக் கடைப்பிடிக்கும் நல்லுணர்வையும், சோதனைகளில் பொறுமையையும், வெற்றியையும் அருள்வாயாக. உலகில் நாலா பகுதிகளிலும் சோதனைகளுக்கு முகங்கொடுக்கும் முஸ்லிம்களுக்கு விடிவை வழங்குவாயாக. முஸ்லிம்களுக்கும், இஸ்லாத்துக்கும் எதிராக இழைக்கப்படும் சூழ்ச்சியாளர்களின் ஒற்றுமையைச் சீர் குழைத்து அவர்களைச் சின்னாபின்னப்படுத்துவாயாக.
ReplyDeleteஆமீன்!
Aameen
ReplyDeleteWho is going to preside? How far the ACJU going to preside and organize? Or who is going to make unite the community? And who is going to convey the fact to the sinhala community through sinhala media? These are the unanswered but should answer question in front of our community. But one thing definitely our people will do that criticism, diversity backbiting and etc. The community expectation is all that from able every individual is to convey the fact about Muslim ummah of Sri Lanka to the world as well as to sinhala community. Finally one question how long we the Muslim going to compromise, tolerate and fear to this racism and BBS?
ReplyDeleteWho is going to preside? How far the ACJU going to preside and organize? Or who is going to make unite the community? And who is going to convey the fact to the sinhala community through sinhala media? These are the unanswered but should answer question in front of our community. But one thing definitely our people will do that criticism, diversity backbiting and etc. The community expectation is all that from able every individual is to convey the fact about Muslim ummah of Sri Lanka to the world as well as to sinhala community. Finally one question how long we the Muslim going to compromise, tolerate and fear to this racism and BBS?
ReplyDeletenice artical. if they will try to move abaya, beard and other islamic activities. SOLUTION IS ONLY JIHAD. ALWAYS BE READY MY ISLAMIC BROTHERS. RASHARD IS ALWAYS READY TO FIGHT WITH THE ENEMIES OF ISLAM.
ReplyDeleteBM.SABRY SEUSL
ReplyDeleteஅகில இலங்கை ஜம்இய்யதுல் உலாமின் முடிவு கால சூழ்நிலைக்கு பொறுத்தமானது என்பது உண்மை. இருப்பினும் நாம் செய்த தவறு நம்மை துறத்துவது என்ற நிலையில் இன்றைய முஸ்லிம் சமூகம் உள்ளது. குறிப்பாக சென்ற வருடம் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாக அரபு நாடுகள் பலவற்றிற்க்கு சென்று இந்நாட்டில் தமிழ் சமூகத்திற்க்கு எவ்வித அட்டூழியங்களும் இழைக்கப்படவில்லை என்ற அப்பட்டமான பொய்யினை சா்வதேசத்தில் உரைத்தது. இதற்கு கூறிய காரணம் தாய்நாட்டினை பாதுகாப்பது. தாய்நாட்டினை பாதுகாப்பது விசுவாசம் எனினும் அநியாயம் இழைக்கப்பட்ட சமூகம் அதற்கான தீா்விற்காக ஏங்கிய போது தாய்நாட்டினை பாதுகாக்க அறபு தேசத்தில் ஜம்இய்யதுல் உலமா இலங்கை தொடா்பில் சொன்ன கருத்து தமிழ் சமூகத்தின் மனதினை பாரியளவில் புண்படுத்தியது. இவ்வாறான செயற்பாடு ஒரு வரலாற்று தவராக சில தமிழ் சகோதரா்களினால் விவரிக்கப்பட்டது. இருதிக் கட்ட யுத்தம் நடைபெற்ற போது ஜம்இய்யதுல் உலமாக அங்கு இந்ததா? இல்லை அவ்வாறு என்றால் என்ன முறையில் அவா்களினால் மேற்கூறிய விடயத்தினை சா்வதேசத்திடம் அழுத்திக் கூறியதினை நியாயப்படுத்த முடியும். இதற்காக நாம் அனைவரும் அல்லாஹ்விடம் பிராத்தனை செய்ய வேண்டும். அனைத்தினையும் அல்லாஹ்வே நன்கறிவான்
அந்நிய செலாவணியை அரசுக்கு பெற்றுக் கொடுக்க யம்மியதுள் உலமா தீர்ப்பு வழங்கி உள்ளது
ReplyDeleteآ مـــــين
ReplyDeleteஎங்கள் நாட்டை பிடித்துக்கொண்டு எங்களை நாட்டை விட்டு துரத்தப்பார்க்கும் பௌதர்களே நாங்கள் திரும்பி நின்றால் என்னவாகும் என்பதை சிந்திக்கவும், நீங்கள் இந்தியாவிலிருந்து வந்தேரிகள் என்பதற்கான ஆய்வுகளை முடக்கிவிட்டுள்ளோம் அது மட்டுமல்ல இலங்கை சோனிகளுக்கும் பின்னர் திராவிடர்களுக்கும்அதன் பின்னர்தான் உங்களுக்கும் சொந்தமாகும் இவை கூடிய சீக்கிரம் வெளிவரக்கூடிய உண்மை.
ReplyDelete