முஸ்லிம்களை கருவறுத்தல்..!
(MHM Niswer)
தொடர் (கதை) - முஸ்லிம்களை கருவறுத்தல்
பாகம் 1 - ஹலால் ஒழிப்பு
கதை, திரைக்கதை, வசனம் - பொது பல சேனா
இயக்கம் - கலகொட அத்தே ஞானசர தேரர்
தயாரிப்பு - கோட்டபாய ராஜபக்ஸ
அனுசரணை - இலங்கை அரசாங்கம்
"முஸ்லிம்களை கருவறுத்தல்" தொடரின் முதலாவது பாக நிறைவு புதிய தலைமை காரியாலய கட்டிட திறப்பு விழாவுடன் கோலகலமாக தயாரிப்பாளர் கோட்டபாய ராஜபக்ஸ அவர்களின் தலைமையில் நடைபெற்றது நாடறிந்த விடயம். ஒரு சிறு பான்மை சமூகத்துக்கு எதிராக துல்லியமாய் திட்டமிட்டு, கனகச்சிதமாய் செயல்படுத்தப்படும் காட்டுமிராண்டி கட்டவிள்ப்புக்களுக்கான ஒரு சிறந்த உதாரணம் இதை விட எங்குமே எம்மால் தேடிப்பெற முடியாது.
ஹலால் நிறுத்தம் கொண்டு வரும் நாளின் வெற்றியே கடும் போக்கு வாதிகளின் அலுவலக திறப்பு தினம் என ஏலவே தீர்மானிக்கப்பட்டது என்பதை எந்த முஸ்லிமும் சிந்தித்து பார்க்காமல் இல்லை. நாம் எடுத்துக்கொண்ட திகதி 11 ஆக இருந்தாலும் அது தீர்மானிக்கப்பட்ட து 9 ஆம் திகதியே என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
கடும் போக்களர்களின் தொடர் எவ்வளவு, எவ்வாறு, தொடர்ந்து செல்ல போகின்றது என்பது அல்லாஹ்வுக்கும் அதன் கதை எழுதியவர்களுக்கும் மட்டுமே தெரிந்த உண்மை. இடையிடையே விளம்பரங்கள் மூலம் அவர்களை பலப்படுத்த சின்ஹல ராவய, ஜாதிக ஹெல உறுமய போன்ற கடும் போக்கு காவிகளின் உதவிகளும் அவர்களுக்கு பக்க பலமமாக இருப்பது அவர்களின் வெற்றி.
ஜம்மியத்துல் உலமா சபை இந்த விடயத்தில் எடுத்த முடிவை எந்த அளவுக்கு விமர்சிப்பது என்பதும் மட்டுப்படுத்தப்பட்ட விடயம்.
ஏதாவது ஒரு சாதகமான முடிவு கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த எமக்கு கிடைத்த பரிசை மீள் பரிசீலனை செய்து கொண்டே சகிப்புத தன்மையின் உச்ச கட்டத்துக்கு சென்று கண்களையும் கலங்கசெய்து விட்டது இந்த நாள்.
ஹலால் என்பது முழுக்க முழுக்க இஸ்லாமியர்களின் சமய கோட்பாட்டுக்குள் உட்பட்டது என்றால் ஆகக் குறைந்தது இஸ்லாமியன் ஒரு சத வீத நன்மையாவது பெற வேண்டும். அதை விட்டு விட்டு ஹலாலே தேவை இல்லை என்றும் உங்கள் சமயத்தில் உள்ளதை எங்களுக்கு திணிக்க கூடாது என்றும் காழ்ப்புணர்வுகளை அள்ளி வீசிய காவிகள் மட்டும் நூறு சத விகிதம் இலாபம் பெறுவது எந்த வகையில் நியாயம்?
நமது மதத்தில் உள்ள உரிமையை எமக்கு பயன் படுத்த முடியமால் ஆக்கிவிட்டு நமது மதத்தில் உள்ளதை அவர்களுடைய வயிற்றை நிரப்ப மட்டும் பயன்படுத்த எவ்வாறு இடமளிக்க முடியும்?
"முஸ்லிம்களை கருவறுத்தல்" பாகம் 2 புர்கா ஒழிப்பு என்ற பெயரில் தொடங்கப்போவது BBS இன் புது செய்தி. அதில் அவர்கள் எந்த அளவுக்கு வெற்றி பெறுவார்களோ இல்லையோ ஹாலால் விடயத்தில் இன்னும் அவர்கள் முகம் கொடுக்க வேண்டிய சிக்கல்கள் நிறையவே இருக்கின்றன என்பது யாவருக்கும் தெரிந்த மறைந்து கிடக்கின்ற உண்மை.
ஹலால் விடயத்தில் நாம் இன்னும் நிறைய சிக்கல்களை பெரும்பான்மைக்கு கொடுக்க முடியும். இனிதான் நமது அகிம்சை போராட்டத்தை தொடங்க வேண்டும். அவர்களின் முற்றுப் புள்ளி தான் நமது ஆரம்பப் புள்ளி யாக எடுத்துகொள்ள வேண்டும். ஹலால் இலட்சினை அற்ற பொருட்களை பகிஸ்கரிப்பதன் மூலம் பெருமளவிலான பாதிப்பை உற்பத்தியாளர்களுக்கு ஏற்படுத்த முடியும். இது விடயமாக ஒவ்வொருவரும் தம் குடும்பத்தை வழிப்படுத்த வேண்டும். ஜும்மா உரைகள் மூலமும் இது நடைபெறல் வேண்டும் வெறுமனே மார்க்க சொற்பொழிவுகளை மட்டுமே நோக்கமாக கொண்ட வெள்ளிகிழமைகள் மாற வேண்டும். சமூக பிரச்சினைகள் அலசி ஆராயப்படல் வேண்டும். அதில் இஸ்லாமிய முறைப்படி தீர்மானங்களை மக்களுக்கு தெளிவு படுத்துதல் வேண்டும். இவ்வாறான நிகழ்ச்சி நிரல்கள் நிறையவே இருக்கின்றன அவைகளை செயல் படுத்த தவறிய மக்களாக நாம் ஆகி விடக் கூடாது. நாம் ஒன்று பட்டால் எவ்வாறான பாதிப்பை பெரும்பான்மை சமூகத்துக்கு கொடுக்க முடியும் என்பதை இந்த விடயத்தில் நிரூபிக்க வேண்டும். இது தான் நம்முடய இன்றைய தேவையாக வும் இருக்க வேண்டும்.
எங்கு அவர்களின் முற்றுப்புள்ளியோ அங்கே நமது கொமாவை வைத்து நம் அகிம்சை போராட்டத்தை மேற்கொள்வதன் மூலம் அவர்களேயே நம்மளவிற்கு இறங்கி வர வைக்க முடியும். அதற்கு நம்மை நாமே செம்மை படுத்திக் கொள்ள வேண்டிய தேவையில் இருகின்றோம். இதற்கு ஒவ்வொருவரும் முழு மூச்சுடன் உறுதி பூணுவது காலத்தின் தேவையாக இருக்கின்றது.
இதை செய்வோமா?

i thing you didnt undestand what ever said acju
ReplyDeletei agree 100%. Also advice all the muslims to refuse buying products without halal unless essential products & buy fast foods from KFC, McDonalds, P&S etc.
ReplyDeleteநீங்கள் சொல்வது முற்றிலும் சரி. ஆனால் அதனை அமுல்படுத்துவதற்குண்டான வழிமுறையை கனகச்சிதமாக மேற்கொள்ள வேண்டும். தலைமைகளோ இயக்கங்களோ அமைப்புக்களோ நிறுவன மயப்படுத்தப்பட்ட அமைப்பில் இதில் களமிறங்க முடியாது. நம்மைக் காட்டிக் கொடுக்க நமது அரசியல் “தலைவர்கள்” கடமையில் இருக்கின்றார்கள். இந்த சாத்வீகப் போராட்டம் சமூகத்திலிருந்தே ஆரம்பிக்க வேண்டும். நமது அரசியல் தலைமைகளோ, இயக்கங்களோ ஏன் ஜம்இய்யத்துல் உலமா கூட இதில் செல்வாக்குச் செலுத்த இடமளிக்கலாகாது. இது நமது உரிமைப் போர். தன்மானப் பிரச்சினை. நமது உரிமைகளில் அடுத்தடுத்து கை வைப்பதற்கு கங்கணங்கட்டிக் கொண்டடிருக்கும் கயவர்களுக்கு நாம் புகட்டும் பாடம், நாம் விடுக்கும் எச்செரிக்கை. செய்வதற்கு இளைஞர்கள் தயாரா?
ReplyDeleteஇன்ஷா அல்லாஹ் நம்ம மௌலவிமார் ஒன்றுபட்டால் மாத்திரமே இது சாத்தியமாகும்
ReplyDeletevery first we need to boycott maliban products. there the people who giving fund for anti minority campaign.
ReplyDeleteசகோதரரே! மௌலவிமார் மாத்திரமல்ல பொதுமக்களும் ஒன்றுபட்டால் சாத்தியமாகும்.
ReplyDeleteஆமாம் முஸ்லிம்கள் அனைவரும் ஹலால் பெறப்பட்ட பொருட்களை மாத்திரம் உபயோகித்தல்,அது இல்லாத போது முஸ்லிம்களின் உற்பத்திப்பொருட்களை உபயோகித்தல்.இவைகளை கடைபிடித்தால் இன்ஷாஅல்லாஹ் முடியும்.
பல நிஜங்களை சரியாக வெளிபடுத்திய சகோதரர் நிஸ்வர் அவர்களுக்கு நன்றிகள் இன்னும் பல உண்மைகளை எதிர் பாக்கின்றோம்
ReplyDeleteநல்ல யோசனை... நான் நேற்று இருந்தே ஆரம்பித்து விட்டேன் மெலிபன் பிஸ்கட்டுக்களை சாப்பிடுவதில்லை என்று.. அதே போல் எனது குடும்பத்துக்கும் அறிவித்து விட்டேன்.
ReplyDelete