Header Ads



முஸ்லிம் காங்கிரஸ் பொறுமை காப்பது ஏன்..? விளக்குகிறார் தவம்

(எஸ்.அன்சப் இலாஹி)

சிறுபான்மை இனங்களின் மீதான ஒடுக்குமுறைகளுக்கு எதிராக தமிழ் சமூகம் ஆயுதப் போராட்டத்தைத் தொடங்கிய போது, முஸ்லிம் இளைஞர்களும் அதே வழியில் சென்றுவிடக்கூடாது என்பதற்காகவே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற ஸ்தாபனத்தை மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் உருவாக்கினார் என்கின்ற வரலாற்றை மறந்து விட்டு பொதுபலசேனா பேசுவது கண்டனத்திற்குரிய விடயமாகும் என்று கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.தவம் கூறினார்.

சமகால நிகழ்வுகள் தொடர்பாக மக்களுக்கு தெளிவுபடுத்தும் ஒன்றுகூடல் நேற்று புதன்கிழமை மருதமுனையில் இடம்பெற்ற போதே மேற்கண்டவாறு அவர் கூறினார். மேலும் அவர் அங்கு கூறுகையில்,

 முஸ்லிம்கள் பௌத்த மதத்தை ஒரு நாளும் இழிவுபடுத்தவில்லை. இஸ்லாம் மற்ற மதங்களை கண்ணியப்படுத்துவதையே முஸ்லிம்களுக்குப் போதிக்கிறது. அப்படிப்பட்ட உயரிய மார்க்கத்தை இழிவு படுத்துவதை வெறும் அரசியலுக்காகப் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. மார்க்கமா? அரசியலா, என்ற சூழ்நிலை வந்தால், எல்லாப்பதவிகளையும் திறந்து விட்டு மக்களோடு மக்களாக வீதியில் இறங்குவதற்கும் தயங்கமாட்டோம். இதுவரை நாம் பொறுமை காத்துவருவது வடகிழக்கு தவிர்ந்த ஏனைய இடங்களில் சிறு சிறு கிராமங்களில் வசித்துவரும் முஸ்லிம் மக்களுடைய பாதுகாப்பையும் இருப்பையும் கவனத்தில் கொண்டுதான். இதனை புரிந்து கொள்ளாது தொடர்ச்சியான நெருக்குவாரங்களைத் தந்து கொண்டிருக்கிறார்கள். சிறுபான்மை இனங்களின் மீதான ஒடுக்குமுறைகளுக்கு எதிராக தமிழ் சமூகம் ஆயுதப் போராட்டத்தைத் தொடங்கிய போது, முஸ்லிம் இளைஞர்களும் அதே வழியில் சென்று விடக்கூடாது என்பதற்காகவே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற ஸ்தாபனத்தை மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் உருவாக்கினார் என்பதை மறந்துவிட்டு பொதுபல சேனா பேசுவது கண்டனத்திற்குரியது. 

இந்த நாட்டின் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக முன்வைக்கப்பட்ட பண்டா செல்வா ஒப்பந்தம் கிழித்து எறியப்படுவதற்கும், இலங்கை இந்திய ஒப்பந்தம் செய்யப்பட்டபோது பஸ்களை எரித்து எதிர்ப்புத் தெரிவித்ததற்கும், பொதுபல சேனா போன்ற அமைப்புகளே காரணமாக அமைந்திருந்தன. இதனால் ஏற்பட்ட உள்நாட்டு யுத்தத்தில் 30,000 இராணுவ வீரர்களை இழந்து, 20,000 இராணுவத்தினர் அங்கவீனமுற்று, 10,000 சிங்கள மக்களும், தலைவர்களும் இழந்ததற்குப்பின்னரும், பௌத்த மதத்தின் பேரால் அராஜகம் புரிவதை பொதுபல சேனா மற்றும் ஜாதிக ஹெல உறுமய போன்ற அமைப்புகள் படிப்பினை பெறவில்லை என்பது வேதனைக்குரிய விடயமாகும். 

அடிப்படையில் தமிழர்களின் ராஜ்ஜியங்கள் இருக்கவில்லை, தமிழர்கள் இந் நாட்டின் சாதாரண குடிமக்களே தவிர, இன்னும் ஒரு தேசமாக அவர்கள் எப்போதும் இருந்ததில்லை எனக்கூறி, இந்த நாட்டில் மூன்று தசாப்தங்கள் இரத்த ஆறு ஓடியதைப் போன்று, முஸ்லிம்களையும் வலிந்து சண்டைக்கு இழுக்கும் தந்திரோபாயத்தை பொதுபல சேனாவின் பின்னணியில் இருந்து சில அரசியல்வாதிகள் தொடங்கியிருக்கிறார்கள். இதில் முஸ்லிம்கள் மிகக் கவனமாக இருக்கவேண்டும்.

நமது மறைந்த பெரும் தலைவர் அஷ்ரப் முஸ்லிம்களுக்கு ஆயுதம் கொண்டு வந்ததாகவும், அந்த ஆயுதங்கள் எங்கே என்றும் பொதுபலசேனா கேள்வி கேட்கிறது. அஷ்ரப்பின் முற்போக்கு சித்தனைகளை தெரிந்து கொள்ளாமையினாலேயே இவர்கள் இவ்வாறு கேட்கிறார்கள். அஷ்ரப் இந்த நாட்டில் வாழும் மூன்று சமூகங்களையும் ஒன்றிணைக்க நினைத்த கடந்த நூற்றாண்டின் உன்னத முஸ்லிம் தலைவராகும். இலங்கையில் வாழும் மக்கள் தமிழர்கள், முஸ்லிம்கள், சிங்களவர்கள் என்று பிரித்து வாழாமல், இலங்கையர் என்கின்ற பொதுப் பண்பியல்பில் வாழும் போதுதான், உண்மையான சமாதானம் இந்த நாட்டில் பிறக்கும் என்பதனை முன்னுணர்ந்து, தேசிய ஐக்கிய முன்னணி என்ற ஒரு பேரியக்கத்தை உருவாக்கி, அதில் மூவினத்தையும் இணைத்துக் காட்டிய உன்னத தலைவர். சிறுபான்மை இன தலைவராக இருந்த போதிலும், இந்த நாட்டின் தேசிய இனப்பிரச்சினைக்கு 2000 ஆம் ஆண்டில் யாப்புச் சீர்திருத்தத்திற்கான முன் மொழிவை பாராளுமன்றத்தில் முன்வைத்த பெருந்தலைவர். இந்த வரலாற்றை பொதுபலசேனாவினர் தேடித் தெரிந்து கொள்ளவேண்டும்.

சுதந்திரமாகப் போராடுகின்ற போது மாக்கான் மாக்கார், அறிஞர் சித்திலெவ்வை, சுதந்திரத்திற்குப் பின்னரான யுத்த காலத்தில் அஷ்ரப், ஜெனிவாவில் முஸ்லிம் நாடுகள் என்று  இந் நாட்டிற்காக முஸ்லிம்கள் உள் நாட்டிலும் வெளிநாடுகளிலும் ஆற்றிவரும் பங்களிப்பினை பொதுபலசேனா அமைப்பினர் குழி தோண்டி மூடி மறைக்கப்பார்க்கிறார்கள். புதிய வரலாற்றைப் புனைந்து இலங்கையில் ஏக இனக் கொள்ளையை புகுத்தப்பார்க்கிறார்கள். உலகம் வளர்ந்து, நாடுகள் சேர்கின்றன. இனங்கள் கலந்து புதிய தலைமுறைகள் உருவாகின்றன. இவற்றை பொதுபல சேனா தெரிந்து கொள்ள வேண்டும். பின் நவீனத்துவ சிந்தனைகள் பற்றிய அறிவையும், தொழில்நுட்ப அபிவிருத்தி பற்றிய கனவையும் சுமந்து உலகம் ஓடிக்கொண்டிருக்கின்ற போது, இன்னும் மதவாத சகிப்புத்தன்மையற்று மத போதையில் மயங்கிக் கிடக்கும் இலங்கையை உருவாக்க இவர்கள் முனைவது, இந்த நூற்றாண்டின் அறியாமைச் சமூகம் இந்த நாட்டில்தான் இருக்கிறது என்பதைத்தான் எம்மால் உணர முடிகிறது என்றும் மேலும் தெரிவித்தார்.

18 comments:

  1. மைலாட் - பள்ளிவாசல்கள் தாக்கப்டவில்லை என்று கூறுகிறீர்கள் -
    (இது தற்பொழுது பாராளுமன்றத்திலிருந்து மாகாண சபைக்குள்ளும் வந்துவிட்டது)
    " மார்க்கமா? அரசியலா, என்ற சூழ்நிலை வந்தால், எல்லாப்பதவிகளையும் திறந்து விட்டு மக்களோடு மக்களாக வீதியில் இறங்குவதற்கும் தயங்கமாட்டோம்." இங்கு என்ன தான் நடந்துகொண்டிருக்கிறது மைலாட்.

    மைலார்ட் இவர் அந்தரங்க உடைக்குள் பின்புறத்தால் விரல் விடுகிறார்.

    இவர் பிறந்தது அக்கரைப்பற்று, தெரிந்தமொழி -தமிழ் மட்டும்

    அதாவுல்லாஹ்வுக்கு ஆப்புவைக்கப் பார்க்கிறார் மை லாட்

    ReplyDelete
  2. சேகு இஸ்சடீனுடன் இருந்த போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசை சேகு உருவாக்கினார் என்றீரே! சரி மர்ஹூம் அஷ்ரப்தான் உங்கள் “றோல் மொடல்” என்றால்--

    இப்போது நீங்கள் எல்லோரும் “நுஆ”வில் அல்லவா இருக்க வேண்டும்! மர்ஹூம் அஷ்ரப் அவர்களின் தூரநோக்குக்குக்கான அமைப்பை உடைத்து உதாசீனப் படுத்தி விட்டீர்களே! அது கெடக்கட்டும்.

    பிரச்சினை பொதுபலசேனாவோ, JHU வோ அல்ல அதை ஊக்கிவிப்பது போன்று இன்னும் அரசுடன் ஒட்டிக்கொண்டிருக்கும் நீங்களும், உம்தலைமையும், உம்போன்ற “பூட் லிகேர்ஸ்”சும் தான்.

    “மார்க்கமா? அரசியலா, என்ற சூழ்நிலை வந்தால், எல்லாப்பதவிகளையும் திறந்து விட்டு மக்களோடு மக்களாக வீதியில் இறங்குவதற்கும் தயங்கமாட்டோம்” என்றெழுதி இருக்குறீர்;

    இதிலிருந்தே தெரிகிறது நீரும் உங்கள் தலைமையும் பதவி மப்பிலும் பொருள் மயக்கித்திலும் இருக்குறீர்கள். அன்றும் உங்களுக்குத் தெளிவாகச் சொன்னோம்! மக்கள் தெளிவாகத்தான் இருக்கிறார்கள் என்று; எங்கே தவற விட்டீர்கள் உங்கள் தெளிவுகளை?

    உங்களுக்கு இப்போதைய தேவை மப்பு, வெப்பு, தப்பு, மயக்கத்தில் இருந்து விடிவு பெறுவதுதான்.

    முஸ்லிம் பொது மக்கள் மிகவும் கவனமாகவே நிலைமைகளை சரி செய்துகொண்டு வருகிறார்கள் – தயவு செய்து குழப்ப வேண்டாம்!

    இஸ்லாத்திற்காக எதாவது செய்ய வேண்டுமானால்;

    1. உங்கள் அடியாட்களுக்கு புனர்வாழ்வு அளியுங்கள்.
    2. தேர்தல் காலங்களில் சாராயம் தவிருங்கள்.
    3. நீங்களும் உங்கள் சஹாக்களும் பொது இடங்களில் ஒன்றன் பின் ஒன்றான சிகரட் புகைத்தலைத் தவிருங்கள்.

    இப்படி தனிப்பட்ட சீர்திருத்தங்களை உங்களைப் போன்ற அரசியல் வாதிகள் செய்தாலே – வாழும் இளம் முஸ்லிம் சமூகத்தில் ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தலாம்.

    இந்நாட்டில் இன்னும் மக்களை ஏமாற்றலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கும் உங்களைப் போன்ற அரசியல்வாதிகள் இருக்கு மட்டும் – இன்னும் பல “சேனாக்களும்”, “உறுமயகளும்” உருவாக உதவியாகவும் உரமாகவும் இருக்கும்.

    அறுதியாகவும், உறுதியாகவும், தெளிவாகவும், சுழிவு நெழிவு இல்லாமலும் சொல்கிறோம் – உங்களின் தேவை எங்களுக்கு ஏற்பட்டால் நிச்சயம் கூப்பிடுவோம்! அதுவரை.................

    எண்ணெய் திரண்டு வரும்போது தாழியை உடைப்பது போல் வேலை எதுவும் யாரும் செய்ய வேண்டாம்!!!

    -அல்லாஹ் போதுமானவன்-

    ReplyDelete
  3. ஐயா தவம் அவர்களே, தலைவர் அஷ்ரப் என்ன செய்தார் அவர் எப்படிப்பட்ட சேவகர் என்று நீங்கள் சொல்லி நாங்கள் தெரிய தேவையில்லை. இப்போது நீங்களும் நாங்கள் பாராளுமன்றத்துக்கும் அமைச்சரவைக்கும், மாகானசபைக்கும் அனுப்பிவட்ச உங்களைப்போன்ரவர்களும் முஸ்லிம் சமுதாயம் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு என்ன தீர்வு முன்வைக்கப் போகிறீர்கள்? வீதியில் இறங்கிப் போராடுவது என்றால் MP ஆகவோ, Minister ஆகவோ உங்களை ஆக்கேவேண்டியதில்லை. நீங்கள் ஆட்சியில் உள்ள அதிகாரம் உள்ளவர்களிடம் எங்கள் பிரச்சினையை எப்போது பேசி முறையான தீர்வு பெற்றுத்தரப் போகிறீர்கள்? ஏன் வாய் மூடி மௌனியாக உள்ளீர்கள்?

    ReplyDelete
  4. அட தம்பி நாங்க என்ன உங்கள ஜிஹாத்து செய்யவா சொல்லுறம்? வோட்டுப் போட்ட சனங்களுக்காக சொஞ்சம் வாயத் தொறந்து பாளிமன்டுள பேசுங்களேன் என்டுதானே சொல்லுறம். அதுக்கு என்னடா தம்பி பொறும காக்கிறம் - சிறு சிறு கிராமங்களின் பாதுகாப்பு என்டு பூசனிக்காயப் பொதக்கிற. எலக்கிசன் வந்தா எப்படியெல்லாம் முழங்கிறங்க. கம்புக்கட்டுக்க கபன் துணி எண்டிங்க. உயிரச் சமூகத்துக்காகப் பணயம் வெச்ச எண்டிங்க. ..........

    ReplyDelete
  5. ஜப்னா முஸ்லிம் ரசிகன் நான் – உங்களை ஓரிரு தடவை ஜப்னா முஸ்லிமில் சந்தித்திருக்கிறேன் – ஆனால் அலட்டிக் கொள்வதில்லை.

    உங்கள் புகைப்படம் பார்த்ததும் கட்டுரை பார்க தோணவில்லை.
    காரண காரியம் இல்லாமல் உங்களிடமிருந்து கருணையும் வராது, கட்டுரையும் வராது. உங்கள் கதிரை இன்னும் காலியாகவில்லையே. எதற்கிந்த தவவேடம்? என அறிந்தவர்களுள் நானும் உங்கள் பழைய நண்பன்.

    ஆதலால் டைட்டிலை கிளிக் செய்து உடனடியாக கொமென்ட்டுக்கே வந்து விட்டேன்.
    ஒரே ஒரு கேள்வி: என்ன அண்மையில் தேர்தல் வருபோகிறதா?

    ReplyDelete
  6. உங்களை ஆயுதம் ஏந்தச் சொல்லவில்லை. முஸ்லிம்களின் பிரச்சினைகள் சம்பந்தமாக அரசுக்கு அழுத்தம் கொடுங்கள், பாராளுமன்றில் மெனிகளாக இருக்காதீர்கள். சமூகத்திற்காக கொஞ்சமாவது குரல் கொடுங்கள். என்றுதான் கூடுகின்றோம். உங்கள் கட்சியில் இருந்து ஒருவர் பிரச்சினை என்றால் உங்கள் என்ன பெயர் அது ஆ ஹை கொமான்ட் கூடுகின்றது. யாருடன் ஆட்சி என்பதற்காக ஹைகொமான்ட் கூடுகின்றது. தற்போதைய முஸ்லிம்களின் பிரச்சினைக்காக உங்களின் ஹை கொமான்ட் எப்போது கூடியது? என்ன தீர்மானங்கள் எடுத்தீர்கள். என்றாவது சொல்லுங்களேன். வேறு பிரதேசங்களில் சிறு குழுக்களாக முஸ்லிம்கள் இருக்கின்றார்கள் தான் இன்ஸா அல்லாஹ் அவர்கள் எப்போதும் இருப்பார்கள் தான் அதனைப் பாதுகாப்பதற்காக நீங்கள் பதவியிலிருந்து கொண்டு மௌனிகளாக இருந்தால் மட்டும் போதுமா? வாய்திறந்து இது சம்பந்தமா பேசுவதற்கு முடியாத ஜென்மங்கள். மக்களை ஏமாற்றுவதற்கு காரணங்கள் மட்டும் சொல்வார்கள்.

    ReplyDelete
  7. நண்பர் தவம் அவர்களுக்கு,நல்ல கருத்துக்களை முன்வைத்தீர்,காலத்தின் தேவையும் கூட.
    இப்போதைய நெருக்கடி நிலை குறித்து இது வரை முஸ்லீம் காங்கிரஸ் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?இந்த பிரச்சினை பற்றி கட்சி விசேட கூட்டம் ஏதாவது கூடி ஆராய்ந்ததா?எதிர் வரும் காலங்களில் நிலைமை மோசமாவதை தடுக்க என்ன உபாயங்களை முன்னெடுக்க இருக்கின்றது? அரசின் ஆதரவுக்கட்சி SLMC ,இது அரச தலைமையுடன் நேரடியாக இப்பிரச்சினை பற்றி நேரடிக்கலந்துரையாடல் ஏதும் நடாத்தியதுண்டா?இது பற்றிய எந்தத்தகவல்களும் மக்களை வந்தடைந்ததாக தெரியவில்லையே என்ன காரணம்?

    ReplyDelete
  8. வளர்த்துவரும் ஓர் இளைய அரசியல்வாதி அவர்களே,
    சமூகப்பிரச்சினைகள் தொடர்பாக தனது கருத்துக்களை வெளிப்படுத்தாது தலைமரைவாய்ப்போன மூத்த அரசியல்வாதிகளின் மத்தியில் உங்களது சிறிய கருத்தும் வரவேற்கத்தகதே.மனிதர்கள் நாம் மறதிக்கும் தவறுக்கும் மத்தியிலே படைக்கப்பட்டிருக்கிறோம் எனுன் வார்த்தையின் அடிப்படையில்,கடந்தகால கசப்பான விடயங்களை களைந்து,ஓர் இஸ்லாமியன் என்ற அடிப்படையில் ஓர் சிறந்த அரசியல் வரலாற்றை வளர்ந்துவரும் சமுகத்துக்கு உங்களால் தரமுடியாதா? நீங்கள் ஒரு சிறந்த திறமைசாலி என்பது எமக்குத்தெரியும்.சிறந்தமுறையில் இஸ்லாமிய அடிப்படையில் நடைபோடுங்கள், சமுகம் உங்கள் பின்னால் வரும்.
    முஸ்லிம்கள் நாம் இன்று யாருக்கும் எதிராகவும் போர்செய்ய வேண்டியதில்லை. நாம் ஜனநாயக நாட்டில் வாழ்கிறோம்.நமக்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்ற அணிதிகளுக்கு எதிராக வாய் திறந்து குரல் கொடுத்து அதற்கான தீர்வுகளைப்ப்பெர்றேடுப்பதே போதுமானதாகும்.
    நன்றி.

    ReplyDelete
  9. இலங்கையின் அரசியல் வரலாற்றில் எந்தநேரமும் சிறுபான்மை மக்களுக்கு எதிரான நடவெடிக்கைகள் இருந்து கொண்டு தான் இருந்தது... அவற்றுக்கெல்லாம் அப்போதைய அரசியல் வாதிகள் நல்ல காத்திரமான அரசியல் முன்னெடுப்புக்களை ( அரசாங்கத்துக்கு தேவையான சரியான அழுத்தங்களை...) செய்து கொண்டிதான் இருந்தார்கள்... அனால் தற்போதைய அரசியல் தலைமை என்றுமே இல்லாத அளவுக்கு மிகவும் பலகினமாகவும் சுயநல அரசியலையுமே செய்து கொண்டிருக்கிறது என்பதை சாதாரண மக்களுக்கே புரிந்த விடயம்... நீர் ஒரு இளம் துடிப்புள்ள அரசியல் வாதி யதார்த்தத்தை புரிந்து கொண்டு மக்களுக்கு உண்மையை எடுத்துரைக்க வேண்டும்... அதை விட்டு விட்டு தலைமையிடம் நல்ல பெயர் எடுப்பதற்கு முயற்சிக்க வேண்டாம் சகோதரரே...!!!!

    ReplyDelete
  10. Iyaa. Enna ellorum avana thiddureenga? Konjam kudi pothaiyila ularinaa atha poy serious aka eduthuddeenga uvana manniyungo appa .

    ReplyDelete
  11. கிழக்கான் east உமது பின்னூட்டம், ஆழமானகருத்துடையதாகவும், உறைபானதுமாகவிருந்தது. வாழ்த்துக்கள். அத்தனையும் தேவையானதே.

    ReplyDelete
  12. குருவி நீங்கள் குழம்பி இருக்குறீர்கள். போயும் போயும் ஒரு அரசியல் வாதியிடம் போய் உண்மையை எடுத்துரைக்கச் சொல்லி இருக்கிறீர்கள். நடக்கிற காரியமா அது? நாளைய அரசியல் அதிகாரங்களைக் கனாக் கண்டு வாழும் இந்த சின்னத்தம்பியிடம் நீங்கள் எதிர்பார்ப்பது எதுவும் நடந்து விடப்போவதில்லை.

    இவரின் இலக்கியத்திருட்டு (கவிதாசாகரம் – தினகரன்) ஒன்றே இவரது தன்மைக்கும் உண்மைக்கும் சான்று பகருமென நீங்கள் அறிந்திருந்தும், இவர் மீது இன்னுமா நம்பிக்கை?

    குருவி நீங்கள் கவனம் – தருணம் கிடைத்தால் இந்தக் குருவியும் அவரிடம் குறுமாவாகிவிடும்.

    ReplyDelete
  13. இதுவும் ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு இணங்க நடத்தும் நாடகமே கீரைக் கடைக்கும் எதிர் கடை வந்திருச்சி

    ReplyDelete
  14. என்ன தவம் .....கொமடி, கீமடி பண்ணலையே ?

    தவம் - ச்சே, ச்சே.

    பிரதேச சபையிலேயே குப்பை கொட்டத் தெரியாத நமக்கெல்லாம் மாகாணசபை உறுப்பினர் பதவி வேறு?

    தலைவர் மரணித்த அன்று கை கொட்டிச் சிரித்த உமக்கு அவரின் கட்சியில் உயர் பீட உறுப்பினர் பதவி?

    இதற்கெல்லாம் காரணம் உம் தலைவர் ஒரு டம்மி பீசு.
    வடிவேலுக்கு பில்டிங் ஸ்ட்ரோங், பேஸ்மென்ட் தான் வீக்கு!
    ஹக்கீமுக்கோ ரெண்டும் வீக்கு!
    காணாததுக்கு உனக்கும் ரெண்டும் வீக்கு!

    நல்ல படிப்....பும் தா.........ன் !
    நல்ல நடிப்....பும் தா.........ன் !

    ReplyDelete
  15. மையித்து பேசாது என்னருமை முஸ்லிம் சகோதரர்களே ...முஸ்லிம் காங்கிரஸ் வபாத்தாகி வெகுநாளாகி விட்டது.....

    ReplyDelete
  16. Well !! We the Muslims have clearly known your tolerant dear brother, you all waiting for the opportunity to demand for the ministerial post or lump sum of money or equivalents with these controversial problems of Muslims but one think almighty Allah waiting for rewards all us you SLMCers had given most promises to the community, please don’t dry to convert this into your political business.

    ReplyDelete
  17. பாட்டுபாடவேண்டாம். கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கு உங்களுக்கு சூடு சொரணை இருந்தால் வருங்கால அரசியல் எண்ணம் இருந்தால் அரசுடன் ஒற்றிக்கொண்டு இருப்பதை தவிர்த்துக்கொள்ளுங்கள். இதுதான் இப்போதைய தேவை. இதனால் எதுவும் உங்களுக்கு நடக்காது. மக்களாகிய நாங்கள இருக்கின்றோம். இதன் மூலம் தான் தலைக்கும் வாலுக்கும் கடிவாளம் போடமுடியும்.
    சரியான தரணத்தை பயன் படுத்திக்கொள்ளுங்கள்

    ReplyDelete
  18. அன்புள்ள தவம் அவர்க‌‌ேெ‌ள
    நீங்கள் எல்லாம் தெரிந்து கொண்டு சொதப்புகிறீர் என்று அடிமட்ட மக்களுக்கு நன்றாகத் தெரியும். அடுத்த தேர்தலுக்கு நாங்கள் உங்களின் அள்ளாஹூ அக்பர்களுக்கு தக்க பாடம் புகட்டுவோம். நீங்கள் உட்பட ஆஸாத் சாலியும் எங்களுக்கு தெரிந்தவர்தான். வங்குரோத்து அடையும் போது முஸ்லிம் சமூகத்தின் வாலைப்பிடித்துக் கொள்வது எமக்கு புளித்துப் போய்விட்டது மகனே எமக்கு எந்தக் காங்கிரஸூம் வேண்டாம் மகனே தேர்தல்தான் வேண்டும் வாக்களிக்கிறோம் பார் மகனே. போங்கடா மதத்தை விட முஸ்லிம்களுக்கு எதுவும் தேவையில்லையே.

    ReplyDelete

Powered by Blogger.