ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான அமெரிக்க பிரேணை - முஸ்லிம்கள் குறித்தும் ஆராய்வு?
சுவிஸ் - ஜெனீவா நகரில் நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக அமெரிக்க கொண்டுவரவுள்ள பிரேணையில் அண்மைக்காலமாக இலங்கை முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் இனவாத அச்சுறுத்தல் குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளதாக அறியவருகிறது.
இவ்வாறான தகவல் ஒன்று குறித்து முஸ்லிம் அரசியல் வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. சர்வதேச வானொலிக்கு ஒன்றுக்கு ஆசாத் சாலி வழங்கியுள்ள செவ்வி ஒன்றிலும் இதனை சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் இலங்கை அரசியல் வட்டாரங்களிலும் இதுகுறித்து பேசப்பட்டுள்ளது.
இலங்கை முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் சர்வதேச மட்டத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருப்பது முக்கியத்துவமிக்கதாக கருதப்படுகிறது. அமெரிக்கா இலங்கை தொடர்பில் கொண்டுவரும் பிரேணையில் இலங்கை முஸ்லிம் விவகாரங்களும் உள்ளடக்கபட்டிருக்கையில், அதன்போது முஸ்லிம் நாடுகள் எவ்வாறான போக்கை கடைபிடிக்கப்போகின்றன என்ற எதிர்பார்ப்பும் மேலோங்கியுள்ளது.
இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத நடவடிக்கை காரணமாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு வாக்கெடுப்பின் போது மலேசியா இலங்கைக்கு எதிராக வாக்களிக்க வேண்டுமென்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இலங்கைக்கு எதிராக அமெரிக்காவின் அனுசரணையில் கொண்டுவரப்படும் தீர்மானம் எதிர்வரும் 21 ஆம் திகதி விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையிலேயே தற்போது இலங்கை முஸ்லிம்கள் குறித்த தகவல்களும் வெளியாகியுள்ளன.

Mounamai irukkum baba'vaana Janathipathi ippothavathu vaayai thirappaaraa...?
ReplyDeleteநம்ம நாட்டு முஸ்லிம் அரசியல்வாதிகள் வாதிகள் அரசாங்கத்துக்கு ஆதரவா பேச போவாங்களே!
ReplyDeleteAllah Is Great
ReplyDeleteபொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் ,இந்தவிடயமும் உள்வாங்கப்பட்டிருக்கிறதா என்பதனை. இந்த உலக நடப்பே தனி ?????????
ReplyDeleteMasha-Allah
ReplyDeleteநமது முஸ்லிம் தலமைகள் என்று சொல்லிக்கொல்பவர்கள் ஜெனீவாவுக்கு படை எடுக்கலாம், இலங்கையில் முஸ்லிம்களுக்கு எந்தபிரச்சினையும் இல்லை என்று சொல்லி அரசுக்கு வக்காலத்து வாங்கி தங்கள் அமைச்சு பதவிகளை பாதுகாக்க.
ReplyDeleteஅங்கு நமது பொன்ன முஸ்லிம் அமைச்சர்கள் இடம் கேட்டால் முஸ்லிம்களுக்கு ஒன்றுமே நடக்க இல்லை என்று தானே சொல்வார்கள்
ReplyDeleteமுஷ்லிம் அமைச்சர்கலே நீங்கல் இப்படியே இருங்கல். நீங்கல் அல்லாஹ் உங்கலுக்கு தந்த அமானிதத்தை நிரைவேற்றாத்தைப் பார்த்து அவனே செய்திருக்கிரான். அல்ஹம்டுலில்லாஹ். ஆனால் உங்கல் அனைவருக்கும் நாலை மஹ்சரில் கேல்வி இருக்கிரது.
ReplyDelete