Header Ads



பேதங்களை மறந்து உலாமா சபையுடன் இணைந்து செயற்படுவோம் - ஹரீஸ் எம்.பி. அழைப்பு


(அவுதீனா)

இலங்கை வாழ் தமிழ் மக்கள் வாழ் அல்லது வாழவிடு என்ற நிலைக்கு ஒரு காலகட்டத்தில் தள்ளப்பட்டிருந்த நிலமை  இன்று மாறி, உண் அல்லது உண்ணவிடு  என்ற நிலைக்கு முஸ்லிம் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இவ்வாறு திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கல்முனை அபிவிருத்திக் குழுவின் தலைவருமான எச்.எம்.எம. ஹரிஸ் சாய்ந்தமருது பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் புதன் கிழமை (13.03.2013)  சாய்ந்தமருது வெலிவோரியன் கிராம அபிவிருத்தி தலைவர் எம்.எம். இப்றாஹிம் தலைமையில் வெனிசுலா நாட்டின் ஜனாதிபதி ஹியுகோ சவேஸின் மறைவையொட்டி இடம்பெற்ற இரங்கற் கூட்டத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்று எமது நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற ஹலாலை ஒழிப்போம் என்ற தேராணையில் நாட்டின் ஸ்திரத்தன்மையினையும், சமூகங்களுக்கிடையிலான   ஒற்றுமையையும்  சீர்குலைக்க பொதுபல சேன கங்கனம் கட்டிக்கொண்டு அப்பாவி பௌத்தமக்களை தூண்டி முஸ்லிம்களுக்கு எதிராக துவசே மனபாங்குடன் கசப்புணர்வினை ஏற்படுத்திவருகின்றனர். ஹலாலினை இலங்கையில் இல்லாதொழிக்க பொது பல சேனா எடுத்த முயற்சியில் வெற்றி பெற்றாலும் ஹராத்தை எந்தவொரு முஸ்லிமும் அனுமதிக்கப் போவதில்லை. கற்பனையிலும் நடக்காத  காரியத்திற்காக அவர்கள் பகற்கனவு கண்டு கொண்டிருக்கின்றாகள்.

அதுமாத்திரமல்ல பொதுபல சேனாவின் அடுத்த இலக்கு ஹிஜாப், முஸ்லிம் பெண்கள் இனி ஹிஜாப் அணியக்கூடாது, சிங்களப் பாடசாலைகளில் கல்வி பயிலும் முஸ்லிம் மாணவர்களும் மற்றும் ஆசிரியர்களும் ஹிஜாபின்றியே பாடசாலைக்குள் செல்லவேண்டும்,  அரச அலுவலகங்களில் கடமையாற்றும் முஸ்லிம் பெண்களும் இவ்வாறே செயற்படவேண்டும் என்று பகற்கணவு கண்டு கொண்டிருக்கின்றார்கள். இவ்வாறான சம்பவங்கள் நடைபெற நாம் ஒருபோதும் இடமளிக்கக்கூடாது.

இம்மாதம் 11 ஆம் திகதி கொழும்பில்  நடைபெற்ற ஜம்மியத்துல் உலமா சபையும் பெளத்த தேரர்களும் இணைந்து நடாத்திய ஹலால் தொடர்பான ஊடகவியளாலர் மகாநாட்டுடன் ஹலால் பிரச்சினையும் முஸ்லிம்களுக்கு எதிராக அண்மைக்காலமாக நடைபெற்று வருகின்ற குரோதத் தன்மை முடிவடைந்து விட்டது என்று நினைக்க்கூடாது. அன்றிலிருந்துதான்  முஸ்லிம்களுக்கு பிரச்சினை ஆரம்பித்துள்ளது என்று நான் கருதுகின்றேன்.

குர்ஆனும்  நபி(ஸல்) அவர்களின்  வழிகாட்டலும் முஸ்லிமான ஒவ்வொரு மனிதனும் ஏனைய மதங்களையும், ஏனைய மதங்களிலுள்ளோரின் உணர்வுகளையும் அவர்களது கலை கலாசார விழிமியங்களையும் மதித்து கண்ணியப்படுத்தி நடக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறது.

தமிழ் ,சிங்கள மற்றும் கிறிஸ்தவ சமூகம் துயருறும் போது அதனை கண்டும் காணாது    போல் நடப்பதை இஸ்லாம் அடியோடு வெறுக்கின்றது. இவ்வாறு குர்ஆன் கூறுகின்ற போது குர்ஆன் என்றால் என்ன என்று தெரியாத அமைச்சர் சம்பிக்க ரணவக்க குர்ஆனை வாசித்துக் காட்டி விளக்கம் கற்பிக்கின்றார்.

எனவே தான் முஸ்லிம்களாகிய நாம் அரசியல் பேதங்களை மறந்து  அனைவரும் ஒற்றுமைப்பட்டு ஜம்மிய்யத்துல் உலாமாவுடன் இணைந்து அரசியல் தலைமைகளோடு பேசி முஸ்லிம்களின் அத்திவாரத்தை அசைத்துப்பார்க்கின்ற விடயத்திற்கு எதிராக ஒன்றிணைய வேண்டும். என்று தெரிவித்தார்.

இந் நிகழ்வில். கிழக்கு மாகாண சபையின் உறுப்பினரும் குழுக்களின் தலைவருமான ஏ.எம். ஜெமீல், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம். சலீம், கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான ஏ.ஏ. பசீர், ஏ. நிசார்டீன், காரைதீவு  பிரதேச சபை உறுப்பினர் ஏ.பாயிஸ், அம்பாரை மாவட்ட உலமா சபைத் தலைவர் எஸ்.எச். ஆதம்பாவா மௌலவி , சாய்ந்தமருது பிரதேச பள்ளிவாசல்களின் தலைவர்கள் , உறுப்பினர்கள் , கல்வியாளர்கள் , வர்த்தக பிரமுகர்கள்  மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர். 

9 comments:

  1. சர்வதேச மட்ட அரசியல் தலைவரின் இரங்கலுரையில் பரடைஸ் மண்டபத்தில் கூறிய கருத்தை கொழும்பில் உங்களால் பாராளுமன்றில் கூற முடியுமாக இருந்தால்.....??

    ReplyDelete
  2. கௌரவ பா,ம,உறுப்பினர் அவர்களே!இங்கு பேசியதை,ஏன் பாராளுமன்றத்தில் உங்களுக்கெல்லாம் பேச முடியவில்லை.மக்கள் உங்களுக்கு வழங்கிய வாக்குகள் எல்லாம் அமானிதம்.அந்த அமானிதத்திற்கு பதில் கூறவேண்டியது உங்களைப்போன்றவர்களின் கடமை, அமானிதத்திற்கு மாறு செய்வது நிபாக்,, நயவஞ்சகத்தனம் ஆகும் முன்று விடயங்கள் ரிடம் இருக்கின்றதோ அவன்பரிபூரண முனபிக் நயவஞ்சகனாவான்.(01)அவன் பேசினால் பொய்யுரைப்பான்(02)வாக்களித்தால் மாறு செய்வான் (03)நம்பினால்வஞ்சகம் செய்வான்.,நயவஞ்சகக்காரர்கள் ,நரகத்தின் அடிப்பாகத்தில்இருப்பார்கள்.அவர்களுக்கு உதவி செய்வார் யாருமில்லை(அல்குர் ஆன்04-145)

    ReplyDelete
  3. ulam sabaiudan sari muslimgal anaievarum quran hadis matrum masjidkalil seyal padanum enru oru fathwa kodthal poothum oru kodaikul vanthuvidum enathu mudivu kiyamath varai kathripooma onrusera?

    ReplyDelete
  4. Sir, whenever u give an statement please thing twice and discuss with other educated & social interested people.
    First of all you all politicians need to get together as forget all deviations. Please think about the society as accountable for you because they voted.

    ReplyDelete
  5. SHEIKH உங்க நிலம புரியுது, கேட்குறத்துக்கும் நல்லா இருக்கு,
    BUT நடைமுறைக்கு சாத்தியமாகுமா?

    ReplyDelete
  6. இவரை முதலில் தொப்பி தாடிமீசை வைத்து ஒரு முஸ்லிம்போலாவது தோற்றமளிக்கச்சொல்லுங்கள்.
    உணவு ஏற்றுமதியையும் சிலகுடும்பம்கள் தங்களுக்குள்ளேயே உள்வாங்கிக் கொள்ளவேண்டும் என திட்டமிட்டு நடைமுறைப்படுத்தும் ஒரு சதித்திட்டம் இதுவாகும்.
    இதன் அடிப்படையை விளங்காது முன்னிலையில் நிற்க்கும் கூட்டத்துக்கு விளங்கும் ஆனால் சுணங்கும்.
    ஏற்றுமதிப் பொருள்களில் ஹலால் முத்திரை பதிப்பதை எதிர்ப்பதன் நோக்கம்தான் என்ன ???????????
    இதைப்பற்றி இலங்கை முஸ்லிம்களோ ,ஜம்மியத்துல் உலமா சபையோ அலட்டிக்கொள்ளத்தேவையில்லை
    பொருள்களின் உட்பத்தியாலர்களும் ,அரசாங்கமும் பார்க்க வேண்டிய விடயம்

    ReplyDelete
  7. UNGALA ROMBA NAALAA KAANA ILLAYE SIR ENGE OLINJI IRUNTHINGE???

    ReplyDelete
  8. திரு ஹரீஸ் அவர்களே! அஸ்ஸலாமு அலைக்கும்!

    நீங்கள், உங்கள் தலைவர், உங்கள் அரசியல் சஹாக்கள் எல்லோரும் “மக்கள் மடயனாக்கிகள்”

    ஆதலால் எங்களுக்கு உங்கள் சொல் செயலெல்லாம் சலித்து, அலுத்துப் போய் விட்டன. உங்களை நினைத்தால் அருவருப்பு மட்டுமே உணர்வாய் உதிக்கிறது.

    அதாவுல்லாவுடன் சேருவோம் என்றீர்கள், சேர்ந்து வேலை செய்தோம் கடைசியில் காங்கிரஸில் காசி கூடயாம் என்றவுடம் கடைசித்தருணத்தில் குத்திக் கரணம் அடித்தீர்கள். நாங்களும் குழம்பி கரணம் அடித்தோம். இப்படி எத்தனையோ குத்திக்கரணங்கள்! கரணக்கள் அடித்ததில் உங்களுக்கு பணமும், பரிவட்டமும், பரிவாரமும், பாவம்!! எங்களுக்கோ காயங்களும், தழும்புகளும், தவிப்புகளும், தனிமைகளுமே மிஞ்சின.

    நீங்கள் எல்லோரும் வருமானத்துக்காக மானத்தை அடமானமாக்கியவர்கள். தயவு செய்து தள்ளி நில்லுங்கள். பொது மக்கள் இந்த பொது பல சேனாவை அகிம்சையாக வென்று முடிப்பார்கள். சேனை பல வென்றவர்கள் முஸ்லிம்கள்.

    பொது பல சேனவினதும், JHUம் பள்ளி உடைப்பின் போதும், பகிரங்க முஸ்லிம் எதிர்ப்பு கூட்டத்தின் போதும், படம் பார்த்துக் கொண்டிருந்தீர்கள்! இன்னும், இத்தருணத்திலும் நடந்து கொண்டிருக்கிற திறந்த முஸ்லிம் விரோத செயல்களை நீங்கள் கண்டிக்க மாட்டீர்கள்,
    மாறாக, நலிந்து இருக்கும், எடுப்பார் கைப்பிள்ளையைப்போல் உள்ள ஒரு அமைப்பாக மாற்றப்பட்டுள்ள “ஜமியத்துல் உலமா” என்று கேள்விக்குறியிலே முடியும் ஒரு அமைப்போடு வரிந்துகட்டுவது வீரனுக்கான தகைமயல்ல.

    தொடரான ஹலால் மழையால் அங்காங்கே சில காளான்கள், எட்டிப் பார்க்கின்றது. பதவிக்காக மக்களை மடயர்களாக்கும், கதை வசனம், டைரெக்சன், நடிப்பு எல்லாவற்றையும் இப்போதாவது நிறுத்திவிடுங்கள்.
    “உருப்படியாக செய்தல்” என்பது உங்களைப் போன்றோருக்கு – அறியாத கல்வி என நாம் அறிவோம்.

    கடந்த சில ஆண்டுகளாக நிம்மதி தொலைத்து, உயிரோடும், மானத்தோடும் வாழ்ந்தால் போதும் என்ற நிலைக்குத்தள்ளப்பட்டு, அதிலும் சில சமயங்களில் சுய கௌரவத்தையும் சரியவிட்டு, தூக்கம் தொலைத்து, எந்த நிமிடமும் நாம் தாக்கப்படலாம் என்ற பீதியோடும், வேதனையோடும் வாழ்ந்துகொண்டிருக்கும் எமது சிங்களவர்கள் பகுதிகளில் உள்ள நமது முஸ்லிம் சகோதர்களின் மனநிலையையும், இவ்விக்கட்டான தருணத்தையையும் – நீங்களும், உங்களைப் போன்ற அரசியல் வாதிகளும் ஒருபோதும் அறியவும் மாட்டீர்கள், அறிய முயற்சிக்கவும் மாட்டீர்கள்.

    இன்ஷாஅல்லாஹ் நாங்கள் பொதுமக்கள் அகிம்சையாக வென்றெடுப்போம் – நீங்கள் விலகி நின்றாலே போதும் வெற்றி முஸ்லிம்களுக்குத்தான்.

    கடைசியாக, முஸ்லிம் பொதுமக்களின் உள்ளத்தில் உள்ள “ஹவா” ஒன்று “ஒரே கட்சியின் கீழ் எல்லோரும் ஒன்று சேர்ந்திருப்பது” எங்கே எல்லா முஸ்லிம் எம்பிக்களும் செய்து காட்டுங்கள்! பார்போம்! விகடம்தான்! ஒருவேளை உண்மையானால்?

    ஹரிஸ் அவர்களே! உலமா சபையுடன் பேதங்கள் எமக்கில்லையே! இல்லாத ஒன்றை இருப்பதாகக்க் கூறி பேதம் உருவாக்க நினைக்கிறீரா? அதிதியாக கலந்து கொண்டதால் அநீதியாகப் பேசலாமோ?
    நேர்காணல் என்றால் ஒருவரை அல்லது ஒரு பொருளை மதிப்பீடு செய்வதென்று பொருள். இந்நேர்காணலில் என்ன மதிப்பீடு இருக்கிறது என்று எமக்குப்புரியவில்லை. மற்றும் நேர்காணல் என்பதில் ‘கதை, வசனம், டைரேக்க்ஷன், எல்லாம் ஒருவராக இருந்தால் அதற்குப் பெயர் “உடான்ஸ்”

    உங்களைப் போன்றோர் ஒருபோதும் உதவி செய்வதில்லை அப்படி நாங்கள் கேட்கவும் இல்லை – நாம் கேட்பதெல்லாம் உபத்திரவம் செய்யவேண்டாம் என்பது மட்டுமே!.

    யாஅல்லாஹ் பீதியோடும், அச்சத்தோடும் வாழ்ந்துகொண்டிருக்கும் முஸ்லிம்களுக்கு சகிப்புத் தன்மையையும், அறிவையும், ஞானத்தையும் மேன் படுத்துவாயாக! பகுத்து அறியும் தன்மையில் தெளிவு தருவாயாக! எம் பிரதிநிதிகளுக்கு பயபக்தியைக் கொடுப்பாயாக! அவர்கள் மக்களிடம் வாங்கிய அமாநிதத்தைக் காப்பாற்றக்கூடிய பக்த்தியையும், மன நிலையையும், கொடுப்பாயாக! அவர்களுக்கு பொருள் பணம் பதவி போன்ற மயக்கத்தில் இருந்தும், பராக்கிலிருந்தும் பாதுகாப்பாயாக! ஆமீன்!!!!

    ReplyDelete
  9. ivar naattil thaana ullar

    ReplyDelete

Powered by Blogger.