முஸ்லிம்களை வம்புக்கிழுத்து வளமான நாட்டை சுடுகாடாக்க வேண்டாம் - அமைச்சர் றிசாத்
(இர்ஷாத் ரஹ்மத்துல்லாஹ்)இப்பொழுது முஸ்லிம்களுக்கெதிராக நடக்கின்ற அட்டூழியங்களைக் சட்டதிட்டத்தின் அடிப்படையில் கட்டுப் படுத்த முடியவில்லை என்றால் இந்த நாடு இன்னும் 30, 40 வருடங்களுக்குப் இனவாத தீயினால் எரியூட்டப்பட்டுக் கொண்டே இருக்கும் என்பதை நான் ஜனாதிபதிக்கும், பொலிஸ் மா அதிபருக்கும் சொல்லியிருக்கின்றேன். என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும் கைத்தொழில் வர்த்தக அமைச்சருமான றிசாத் பதியுதீன் கூறினார்.
இன்று மட்டக்களப்பு உறுகாமத்தில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றம் போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் றிசாத் பதியுதீன்,
‘இனங்களுக்கிடையில் கலகம் விளைவிப்பவர்களை கைது செய்யுங்கள் அவர்களை அடையாளம் காட்ட மக்கள் தயாராக இருக்கின்றார்கள் என்பதை வலியுறுத்தி கூறிவந்துள்ளோம்.சட்டத்தைக் கையிலெடுக்கும் சட்டபூர்வமற்ற பொலிஸார் என்று சொல்கின்றவர்களை கைது செய்யுங்கள் என்று சொல்லியிருக்கின்றோம்.
கடை உரிமையாளர் முஸ்லிம் என்ற ஒரேயொரு காரணத்திற்காக அந்தக் கடையைச் சூழ்ந்து கொண்டு தாக்கியிருக்கின்றார்கள். பக்கத்திலிருந்த பௌத்த வழிபாட்டுத்தலத்திலிருந்து வந்துதான் இந்த அராஜகத்தைப் புரிந்திருக்கின்றார்கள். கடை உரிமையாளர் மயிரிழையில் உயிர் தப்பினார். சில ஊழியர்கள் கடுமையாக தாக்கப்பட்டனர்.
இன்னும் சிறிது நேரத்தில் பொலிஸார்வர தாமதித்திருந்தால் பாரிய உயிரழிவும் சொத்தழிவும் எல்லாமே கணப்பொழுதில் ஏற்பட்டிருக்கும். இந்தக் கலகக் காரர்களுக்குத் தேவை பிரச்சினை என்ற ஒன்றுதான். ஆனால் நாட்டில் பெரும்பாலான மக்களுக்கு இந்த நாட்டிலே நிம்மதி தேவை.
நாட்டிலுள்ள 20 இலட்சம் முஸ்லிம்களையும் நையாண்டி செய்து குழப்பம் விளைவித்து அவர்களை எப்படியாவது வம்புக்கு வலிந்திழுத்து எடுக்க அவர்கள் கங்கணம் கட்டி நிற்கின்றார்கள்.இதற்காக இல்லாத பொல்லாதவற்றை பிரசாரம் செய்கின்றார்கள்.அவர்களது இந்த விடயங்களை பரப்புவதற்கு சில ஊடகங்கள் வரிந்து கட்டிக் கொண்டிருக்கின்றது .
ஆயிரத்து நாநூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த முஸ்லிம்களின் சமய கலாசார பண்பாட்டு அம்சங்கள் இன்று நேற்று வந்தது போல இவர்கள் பூச்சாண்டி காட்டுகின்றார்கள்.
புதுப்புது விளக்கங்களுடன் பொது பல சேனா என்றும் ஜாதிக ஹெல உறுமய என்றும் சிங்கள ராவய என்றும் சட்டரீதியற்ற பொலிஸ் காரர்கள் vdf;Fwpf;nfhz;L முஸ்லிம்களுக்கு அநியாயமிழைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
இந்த அநியாயத்தை இப்பொழுதே தடுக்கவில்லை என்றால் இந்த நாடு இன்னும் முப்பது வருடங்கள் அல்ல முடிவுறாத காலத்திற்கு அழிவைச் சந்திக்க வேண்டிவரும் என்பதை ஜனாதிபதிக்கும், பொலிஸ் மா அதிபருக்கும் சொல்லி இருக்கின்றோம்.
இந்த அரசாங்கத்தைப் பொறுத்த வரை நாங்கள் நேற்று அல்லது முந்தநாளிலிருந்து அரசுடன் சேர்ந்தவர்களல்ல. ஆட்சியமைப்பதற்குப் பெரும்பான்மை இல்லாமல் இல்லாமல் பொழுது கைகொடுத்தவர்கள்தான் நாம்.
இந்த நாட்டிலே சமாதானம் மலர வேண்டும் என்பதற்காகத்தான் நாம் அவ்வாறு செய்தோம். சிங்களவர்களும் தமிழர்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதற்காகத்தான் நாம் மஹிந்த ராஜபக்ஷ மீது நம்பிக்கை வைத்து அவருக்குக் ஒத்துழைப்பு கொடுத்தோம்.
அவருடைய இந்தத் தலைமைத்துவம் இந்த நாட்டிலே எல்லோருக்கும் சமத்துவத்தைப் பெற்றுத் தரும் என்பதற்காகவே நாம் அவருக்கு ஒத்துழைப்பு வழங்கினோம்.
முஸ்லிம்களுக்கு இத்தனை நடந்தும் ஏன் பேசா மடந்தையாக இருக்கின்றீர்கள் என்று எமது சமயத் தலைவர்கள், சிறியவர்கள், பெரியவர்கள் எமக்கு வாக்களித்த மக்கள் என்று எல்லோரும் இப்பொழுது எம்மைக் கேள்வி மேல் கேள்வி கேட்டு குடைந்தெடுக்கின்றார்கள்.
ஒரு வசனமும் பேசாமல் அமைதி காக்கிறீர்களே என்பதுதான் அவர்களது ஆக்ரோஷமான கேள்வி! பயத்திலா இருக்கிறீர்கள்? முஸ்லிம் சமுதாயத்தை இழிவு படுத்தும் பொழுது, மதத் தளங்களை அசிங்கப்படுத்தும் பொழுது, கடைகளை உடைக்கும் பொழுது, கலாசார ஆன்மீக விடயங்களில் மூக்கை நுழைத்து எங்களை இழிவு படுத்தும் பொழுது நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றீர்கள் என்று மக்கள் கேட்கின்றார்கள்.
நாங்கள் இவை பற்றி வாய் திறக்காமல் இல்லை. அரச உயர் மட்டத்துடன் கதைக்கின்றோம், ஜனாதிபதியிடமும் பேசுகின்றோம், அமைச்சரவையில் கதைக்கின்றோம், அமைச்சரவை உப குழுவில் கதைக்கின்றோம். நாங்கள் ஜெனீவாவுக்குப் போய் முறையிடவில்லை, வெளிநாட்டுத் தூதரகங்களுக்குப் போகவில்லை, சர்வதேச சமூகத்திடம் சென்று குறை சொல்லவில்லை.
நாங்கள் எங்களது நாட்டுக்குள்ளே கண்ணியமாகப் பேசி எமது பிரச்சினைகளை பாருங்கள் என்று கூறுகின்றோம். மிகவும் இக்கட்டான ஒரு சூழலிலே நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
இனிமேல் எமது அரசியல் கொந்தராத்து அரசியலாகவும், அபிவிருத்தி அரசியல், குறுகிய அரசியல் என்கின்ற மாயையிலிருந்து விடுபட வேண்டிய அவசரமும் அவசியமும் தற்போது ஏற்பட்டுவிட்டது எமது சமூகம் புரிந்துகொள்ள வேண்டும்.
நாங்கள் கண்ணியமாக உடையணிவதைக் கூட ஒரு பிரச்சினையாக அவர்கள் பார்க்கின்றனர்.இஸ்லாம் கூறும் வழிமுறைகளை நாங்கள் பின்பற்றுகின்றோம்.ஆனால் இதற்கு எதிரானவர்கள் அறைகுறை ஆடைகளைில் செல்வதையே கலாசார நாகரீகம் என்று கூவுகின்றனர்.
உடலை மூடி கண்ணியமாகப் போவதுதான் அவர்களது கண்களைக் குற்றுகிறது. miu நிர்வாணமாகி நடமாட முடியும். அது ஒன்றும் ஒருத்தருக்கும் பாதிப்பில்லை என்றுதான் அவர்கள் கருதுகிறார்கள்.
கௌரவமாக கண்ணியமாக உடையணிந்து மரியாதையாக நடந்து செல்லும் இஸ்லாமிய சமூகப் பெண்களால் அவர்களுக்கு அச்சமும் பயமும் ஏற்பட்டுள்ளதாம் என்று பூச்சாண்டி காட்டுகின்றார்கள்.
கடந்த 30 வருட கால உள்நாட்டு ஆயுதக் கிளர்ச்சியின் போது ஹபாயாவுக்குள் குண்டு கொண்டு வரவில்லை. தற்கொலைப் படை வந்து பாயவில்லை.
ஆனால் இப்பொழுது இந்த சமாதான சூழ் நிலையில்தான் ஹபாயாவுக்குள்ளும் பர்தாவுக்குள்ளும் குண்டு வந்து விடும் அதனால் தாங்கள் பாதிக்கப்பட்டு விடுவோம் என்று குண்டுப் புரளி எழுப்புகின்றார்கள்.
எங்களை இன்னுமின்னும் சீண்ட வேண்டாம் என்று நாங்கள் இவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கின்றோம். வலிய வம்புக்கிழுத்து வளமான நாட்டை சுடுகாடாக்க வேண்டாம் என்று இந்த ஆசாமிகளிடம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.
நாங்கள் இந்த நாட்டில் கண்ணியமாக வாழ்வதற்கு இந்த அமைச்சுப் பதவி தடையாக இருக்குமாக இருந்தால் அதனைத் துச்சமென மதித்து உதறித்தள்ளி விட்டுவர நாங்கள் தயாராக இருக்கின்றோம்.’
கிழக்கிலே தமிழர்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையாக வாழ்கின்றார்கள் என்பதைக் கேட்டு என்னுள்ளம் பூரிப்படைகின்றது. 30 வருடகாலம் ஒரே மொழியைப் பேசுகின்ற நாம் பிரிந்து பிளவுபட்டுச் சின்னா பின்னமாகி இழக்க வேண்டியவை அனைத்தையும் இழந்து இன்று மீண்டும் குடிசைகளையும் கடைகளையும் பாடசாலைகளையும் கட்டுகின்ற சமூகமாக மாறிப்போயிருக்கின்றோம்.
விரும்பியோ விரும்பாமலோ கடந்தகால கசப்புணர்வுகளை நாங்கள் மறந்து புதிய பாதையிலே பயணிக்க வேண்டும். இந்த நாடு பிளவு படக்கூடாது என்பதிலே முஸ்லிம் சமூகம், மிகக் கவனமாக இருந்திருக்கின்றது.
அன்றைய பேரினவாதத் தலைமைகள் இனவாதத்தைக் கக்கியதனால் ஆயுதமேந்திப் போராட வேண்டிய துரதிஸ்டம் ஏற்பட்டது. 30 வருடங்கள் பேரழிவும் சின்னா பின்னமும் உண்டானது.
நான் இப்பொழுது இரவில் உறங்குவதில்லை. ஏனென்றால் எங்காவது முஸ்லிம்களுக்கெதிரான சம்பவங்கள் நடந்து விடும் அதற்குரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்பதால் எனக்குத் தூக்கமே வருவதில்லை.
‘வடக்கிலும் கிழக்கிலும் வாழ்கின்ற தமிழ் முஸ்லிம் சமூகம் ஒற்றுமைப்பட வேண்டும். தமிழ் மக்களின் அதிக பட்ச ஆதரைவப் பெற்றிருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் முஸ்லிம் மக்களை ஒற்றுமைப்படுத்துகின்ற விடயத்திலே எங்களுடன் பேச வேண்டும்.
தமிழ் பேசும் சமூகம் கிழக்கிலே ஒன்று பட்டு வாழ்வதைப்போல வடக்கிலும் சகவாழ்வு வாழ்வதற்கு நாங்கள் படாதபாடு படுகின்றோம். ஆனால் இந்த விடயத்திலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுடைய ஒத்துழைப்புப் போதுமானதாக இல்லை. இந்த இடத்திலே நாங்கள் பகிரங்க வேண்டுகோளை விடுக்கின்றோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசுவதற்கு நாங்கள் எந்நேரமும் தயாராக இருக்கின்றோம். உங்களுடன் ஒருசேர இருந்து தமிழ் முஸ்லிம் உறவுக்காகவும் உரிமைக்காகவும் குரல் கொடுக்க நாங்கள் திடசங்கற்பமாக இருக்கின்றோம். இனியும் நாங்கள் அர்த்தமில்லாமல் பிளவுபடுட்டு நிற்க முடியாது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயா அவர்கள் எங்களோடு இது விடயமாகப் பேச முன் வரவேண்டும். வடக்கிலும் கிழக்கிலும் வாழும் தமிழ் பேசும் சமூகம் ஒற்றுமையாக வாழவேண்டும். இதற்கு ஒத்துழைப்புத் தாருங்கள். ஒன்றிணைவோம் வாருங்கள் என்று பகிரங்க வேண்டுகோள் விடுக்கின்றேன்’ என்று அமைச்சர் றிசாத் பதியுதீன் அழைப்பினை விடுத்தார்.
maasha allah.......pullaikkuthu sir pullarikkudhu.
ReplyDeleteIF YOU ARE SINCERE... BROTHER RIZARD...MAY ALLAH WILL HELP YOU AND HELP THE UMMAH
ReplyDeleteஆழம் நிறைந்த, அர்த்தம் பொதிந்த,அருமையான பேச்சு! கூடவே,'பொறுத்தது போதும்; பொங்கியெழு...'என்ற வசனத்தையும் நினைவுபடுத்துகிறது.ஆஹா...எங்கள் அரசியல் தலைமைகளிடமிருந்து இப்படியான சங்க நாதம் வெளிப்பட வேண்டுமென்றுதானே இத்தனை நாளும் நாங்கள் காத்துக் கிடந்தோம்..!அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும்!
ReplyDeleteஇடியின் முழக்கமாய்- சிங்கத்தின் கர்ஜனையாய் வெளிவந்திருக்கும் உங்கள் பேச்சு, இலங்கையின் உயர்மட்டங்களில் நிச்சயம் அதிர்வலைகளை ஏற்படுத்தும்;அரச மட்டத்தை ஆட்டம் காணச் செய்யும்; இது என் நம்பிக்கை.
மற்றும்...
தமிழ்-முஸ்லிம் உறவு வலுப்பட வேண்டுமென்று நீங்கள் மிக்க சரியான-தேவையான ஒரு சந்தர்ப்பத்தில் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது.
ஆமாம்...
கடந்த கால கசப்பான சம்பவங்களினால் தமிழ்-முஸ்லிம் உறவில் விழுந்த விரிசலை நாம் ஒட்டியாக வேண்டும். வேண்டா வெறுப்பாகப் போட்டுக் கொள்ளப்பட்ட பிரிவினை வேலிகளை வெட்டி வீச வேண்டும். மீண்டும் ஒற்றுமைக் குடைக்குள் நாம் ஒன்றுபட வேண்டும்.
உங்கள் அழைப்பும் அறைகூவலும் தமிழ்த் தலைமைகளைக் கவரும் என்பது உண்மை. ஏனெனில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயா அவர்களின் அண்மைய அறிக்கைகளும் தமிழ்-முஸ்லிம் உறவுக்கான நேர்மையான அழைப்பாகத்தான் இருக்கிறது. மட்டுமன்றி, அண்மையில், முன்னாள் உயர் நீதியரசர் விக்னேஸ்வரன் ஐயா, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் உட்படப் பலர் இன்றைய காலகட்டத்தில் தமிழ்-முஸ்லிம் உறவு பலப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி இருக்கின்றார்கள். ஆக, எல்லோரும் இணைந்து, மீண்டும் தமிழ்-முஸ்லிம் ஒற்றுமையை சகல தளங்களிலும் கட்டியெழுப்பும் காலம் இப்போது கனிந்து வந்திருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டு, உறுதி மிக்க செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.
பேச்சு நல்லாத்தான் இருக்கு..... மறுமைக்கான விளை நிலம்தான் இவ்வுலகம்....
ReplyDeleteEappodhu Kan Thiranduwitteerhal Thodarattum Ungal YOUTHTHAM Muslim Makkalukkaha Yar Ungalukku Oddavi Saiyavittalum ALLHA Ungalukku Oddavi Saivan ALLAH Nutpamana Arivodayawan , Sakti Mikkawan ALLAHU AKBAR
ReplyDeleteபேச்சு நல்லாத்தான் இருக்கு..... மறுமைக்கான விளை நிலம்தான் இவ்வுலகம்....
ReplyDeleteஇது இரவா.... பகலா...!
ReplyDeleteஇது கனவா.... நிஜமா...!
மிகவும் சந்தோஷமாகயிருக்கிறது.கௌரவ அமைச்சரின் துணிச்சலான உரை அல்ஹம்துலில்லாஹ்.இந்த நாட்டு முஸ்லிம்களின் விடுதலைக்காக களமிறங்க நாம் தயார் அஞ்ச வேண்டாம். முஃமின்களைப்பாதுகாப்பதாக வாக்களித்த இறைவன் இன்னும் சாகவில்லை
ReplyDeleteإِنَّا لَنَنصُرُ رُسُلَنَا وَالَّذِينَ آمَنُوا فِي الْحَيَاةِ الدُّنْيَا وَيَوْمَ يَقُومُ الْأَشْهَادُ
40:51. நிச்சயமாக, நாம் நம்முடைய ரஸூல்(தூதர்)களுக்கும், ஈமான் கொண்டவர்களுக்கும், இவ்வுலக வாழ்க்கையிலும், சாட்சிகள் நிலைபெறும் நாளிலும் உதவி செய்வோம்.، 52
وَلَقَدْ أَرْسَلْنَا مِن قَبْلِكَ رُسُلًا إِلَىٰ قَوْمِهِمْ فَجَاءُوهُم بِالْبَيِّنَاتِ فَانتَقَمْنَا مِنَ الَّذِينَ أَجْرَمُوا ۖ وَكَانَ حَقًّا عَلَيْنَا نَصْرُ الْمُؤْمِنِينَ
30:47. மேலும், நிச்சயமாக நாம் உமக்கு முன்னால் தூதர்களை அவர்களுடைய சமூகத்தினரிடம் அனுப்பியிருக்கிறோம், அவர்களும் தெளிவான அத்தாட்சிகளுடன் அவர்களிடத்தில் வந்தார்கள்; பிறகு (அத்தூதர்களை பொய்ப்பிக்க முற்பட்ட) குற்றவாளிகளிடம் பழி வாங்கினோம் - மேலும் முஃமின்களுக்கு உதவி புரிதல் நம் கடமையாகும்
أَمْ حَسِبْتُمْ أَن تَدْخُلُوا الْجَنَّةَ وَلَمَّا يَأْتِكُم مَّثَلُ الَّذِينَ خَلَوْا مِن قَبْلِكُم ۖ مَّسَّتْهُمُ الْبَأْسَاءُ وَالضَّرَّاءُ وَزُلْزِلُوا حَتَّىٰ يَقُولَ الرَّسُولُ وَالَّذِينَ آمَنُوا مَعَهُ مَتَىٰ نَصْرُ اللَّهِ ۗ أَلَا إِنَّ نَصْرَ اللَّهِ قَرِيبٌ
2:214. உங்களுக்கு முன்னே சென்று போனவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் உங்களுக்கு வராமலேயே சுவர்க்கத்தை அடைந்து விடலாம் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? அவர்களை (வறுமை, பிணி போன்ற) கஷ்டங்களும் துன்பங்களும் பீடித்தன; “அல்லாஹ்வின் உதவி எப்பொழுது வரும்” என்று தூதரும் அவரோடு ஈமான் கொண்டவர்களும் கூறும் அளவுக்கு அவர்கள் அலைகழிக்கப்பட்டார்கள்; “நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி சமீபத்திலேயே இருக்கிறது” (என்று நாம் ஆறுதல் கூறினோம்.)
إِن تَمْسَسْكُمْ حَسَنَةٌ تَسُؤْهُمْ وَإِن تُصِبْكُمْ سَيِّئَةٌ يَفْرَحُوا بِهَا ۖ وَإِن تَصْبِرُوا وَتَتَّقُوا لَا يَضُرُّكُمْ كَيْدُهُمْ شَيْئًا ۗ إِنَّ اللَّهَ بِمَا يَعْمَلُونَ مُحِيطٌ
3:120. ஏதாவது ஒரு நன்மை உங்களுக்கு ஏற்பட்டால், அது அவர்களுக்கு வருத்தத்தை கொடுக்கிறது; உங்களுக்கு ஏதாவது தீமை ஏற்பட்டால், அதற்காக அவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். நீங்கள் பொறுமையுடனும், பயபக்தியுடனுமிருந்தால் அவர்களுடைய சூழ்ச்சி உங்களுக்கு எந்தத் தீமையும் செய்யாது. நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்வதை (எல்லாம்) சூழ்ந்து அறிகிறவன்.
Ningal than muslimgalin ethirgallah thalawair.
ReplyDeletealhamdulillah
ReplyDeleteBarakkallahu Lakka. All hon.leaders here u come.rebuild our sub structure and recreate the super power.
ReplyDelete