Header Ads



அம்பாறையில் பாடசாலைகளை நோக்கி படையெடுத்த பெற்றோர்கள் (படங்கள்)



அம்பாறை மாவட்டத்திலுள்ள பாடசாலை மாணவர்களை வற்புறுத்தி, அடாத்தாக 'தயட்ட கிருள்ள' காண்காட்சிக்கு அழைத்துச் செல்லும் முயற்சியில் இன்று வியாழக்கிழமை காலை ராணுவத்தினர் ஈடுபட்டதையடுத்து பாடசாலைகளில் இன்று 28-03-2013 குழப்பமானதொரு சூழ்நிலை காணப்பட்டது. 

அக்கரைப்பற்று மற்றும் அட்டாளைச்சேனை போன்ற பிரதேசங்களிலுள்ள முக்கிய சில பாடசாலைகளுக்கு இன்று காலை சென்ற ராணுவத்தினர் - அப்பாடசாலை மாணவர்களை அம்பாறையில் இடம்பெறும் 'தயட்ட கிருள்ள' காண்காட்சிக்கு அழைத்துச் செல்லப் போவதாக அதிபர்களிடம் கூறியுள்ளனர். 

ஆனாலும், பெற்றோர்களின் அனுமதியின்றி மாணவர்களை அவ்வாறு அனுப்பி வைக்க முடியாது என்று குறித்த பாடசாலைகளின் அதிபர்கள் கூறியதாகத் தெரியவருகிறது.

இந் நிலையில், தமது பிள்ளைகளை 'தயட்ட கிருள்ள' காண்காட்சிக்கு ராணுவத்தினர் அடாத்தாக அழைத்துச் செல்வதற்காக வந்துள்ளதை அறிந்த பெற்றோர்கள் - உடனடியாக பாடசாலைகளுக்குச் சென்று, தமது பிள்ளைகளை வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். 

இதனால், இப் பிரதேசங்களிலுள்ள பாடசாலைகள் மற்றும் வீதிகளில் - பெற்றோர் அங்குமிங்கும் பதட்டத்துடன் ஓடித் திரிந்ததைக் காணக்கிடைத்தது. 

ராணுவத்தினர் இவ்வாறு மாணவர்களை அச்சுறுத்தி 'தயட்ட கிருள்ள' கண்காட்சிக்கு அழைத்துச் செல்லவுள்ளதை அறிந்த – அக்கரைப்பற்று மற்றும் அட்டாளைச்சேனை பிரதேசத்தினைச் சேர்ந்த அனைத்துப் பாடசாலைகளின் பெற்றோர்களும் - தமது பிள்ளைகளை பாடசாலைகளிலிருந்து அழைத்துச் சென்றனர். 

அம்பாறையில் நடைபெற்று வரும் 'தயட்ட கிருள்ள' எனும் தேசத்துக்கு மகுடம் கண்காட்சியில் கலந்து கொள்வதை முஸ்லிம்கள் தவிர்த்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதனால், இக் காண்காட்சி எதிர்பார்க்கப்பட்ட வகையில் வெற்றியளிக்கவில்லை என்றும் தெரியவருகிறது.  





7 comments:

  1. எமக்கு உரிமைகள் கிடைக்கும் வரைக்கும் வீதியில் மட்டும் அல்ல
    தேசத்தில் எங்கும் போராடுவோம்.

    நாங்கள் சலைத்தவர்கள் அல்ல

    பணத்துக்கும் பதவிக்கும் தனது சமூகத்தை விற்கின்ற விற்பன்னர்களின் அடிச்சுவடிகள் அல்ல நாங்கள்

    உரிமைகள் கிடைக்கும் வரைக்கும் உயிரை கூட துச்சமாக மதித்து
    இஸ்லாமிய உணர்வுகளோடு போராடுவோம் கல்வியில் மட்டும் அல்ல.உரிமைகளை இழக்கும் எல்லா சந்தர்பத்திலும்.


    அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லாஹ் ஒருவனுக்கும் மட்டும் தான்
    மாறாக மற்றவர்களுக்கு அல்ல என்பதை இந்த தகவல் மூலமாக
    ஆட்சியில் இருக்குர அரசிக்கு புரியட்டும்

    (ஓட்டமாவடி றம்சின்)

    ReplyDelete
  2. IT'S not only that school but also Ak/As-siraj scl

    ReplyDelete
  3. This happened in sammanthurai also ARMY taken one school students. And same school ladies students return backed to hame

    ReplyDelete
  4. தேசத்துக்கு மகுடம்
    முஸ்லிம்களுக்கு துரோகம்.
    இஸ்லாமிய பெற்றோர்களே! ஆசான்களே!
    உங்கள் குழந்தைகளை அனுப்ப வேண்டாம்.

    ReplyDelete
  5. முதலில் கேவலம் கெட்ட இந்த குடும்ப அரசாங்கத்தை அவர்களது வீட்டுக்கு அனுப்ப வேண்டும். அதனோடு ஒட்டியிருக்கும் முஸ்லிம் அட்டைகளுக்கு செருப்பால் அடித்து சாக வைக்க வேண்டும். நம் மக்கள் பணம் சம்பாதிப்பதிலும் நமக்கேன் இந்த வம்பு என்று இருக்கும் வரைக்கும் இவைகள் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

    ReplyDelete
  6. முஸ்லீம்களின் ஹர்தாலில் கன்ட தொல்வியை தடுக்க், அல்லது, ஹர்தாலை அர்தமற்றதாக்க அர‌சு இட்ட திட்டமே பரீட்ச்சையை ஒத்திவைத்து அவசரமாக அதிபர்களின் கூட்டம் வைத்து, மாணவர்களை அழைத்துச்செல்ல படையினருடன் திட்டமிட்டது. ஹர்தால் அர்தமுள்ளதே என கான்பிக்க மக்கள் புறப்பட்டனர். அம்பாரைக்கு எமது குழந்தைகள் பொகக்கூடாது என பிள்ளைகளை வீட்டுக்கு அழத்துச்சென்றனர். எவ்வளவே ஆவலுடன் ப‌ரீட்ச்சைக்கு ஆயத்தம் செய்தமாணவர்கலுக்கு எமாற்றரமெ தவிர, கல்வி பாளானதே தவிர ஆனபலன் ஒன்றுமில்லை.

    ReplyDelete
  7. "அடாத்தாக" - what is the meaning for this?

    ReplyDelete

Powered by Blogger.