முஸ்லிம்களே..! கொஞ்சம் நில்லுங்கள்..!!
(அபூநதா- எம். ஜே.எம் ஆர். மதனி)
இஸ்லாத்தின் தூதை இறைத்தூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்களுடன் இணைந்து எடுத்துச் சென்ற மனிதர்கள் இன்றும் மாவீரர்கள் என்று போற்றப்படுவதற்குரிய காரணம் பற்றி நீங்கள் என்றவாது சிந்தித்ததுண்டா?
செல்வந்தர், வீரர்கள், அறிஞர்கள், இளைஞர்கள், பெண்கள், வறியவர்கள், சிறுவர்கள் என அனைவரும்தான் அந்த தூதை உலகெங்கும் எடுத்துச் சென்றார்கள்.
நபியின் பாசறையில் வளர்ந்த நபித்தோழர்களின் வரலாறு பற்றிப் படித்தீர்களா..?
உலகை திகைப்பிலும், அச்சத்திலும் ஆழ்த்திய மாவீரர்களை இஸ்லாம் வளர்த்தெடுத்தது என்பதே வரலாறு அபூபக்கர், உமர், உஸ்மான், அலி, ஹம்ஸா, முஆவியா, அபூஉபைதா, காலித்பின் வலீத், அல்முஸன்னா பின்ஹாரிஸா, அந்நுஃமான் பின் மிக்ரின், பரா பின் ஆஸிப், அம்றுபின் ஆஸ், ஸஃத் பின் அபீவக்காஸ், அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப், இப்னுமஸ்ஊத், இப்னு அப்பாஸ், உஸாமா பின் ஸைத், கப்பாப் பின் அல்அர்த், முஸ்அப் பின் உமைர் போன்ற நபியின் தோழர்களின் வரலாறு பற்றி நீங்கள் கொஞ்சமாவது கேள்விப்படாமல் இருக்க முடியாது. இல்லை எனில் நீங்கள் கொஞ்சம் படித்துப்பாருங்கள்.
இவர்களில் உங்களப் போன்ற செலவந்தர்கள் இருந்தார்கள். நபியுடன் இணைந்து போரில் கலந்து எதிரிகளை சந்திப்பது என்பது சாதாரண ஒரு விஷயமாகவே இருந்துள்ளது.
செல்வங்களை இறை வாரி இறைத்தல், தமது உயிர்களை அவ்வழியில் அர்ப்பணித்தல், போரில் கலந்து எதிரியை தோல்வியுறச் செய்தல் போன்ற இன்னோரென்ன அம்சங்கள் அற்பமாகவே தெரிந்தது. இவை அனைத்தையும் அல்லாஹ்வின் பொருத்தத்திற்காகவே செய்தார்கள்.
இந்த நாட்டை பௌத்தர்களின் நாடு என்றும், நாம் சிறுபான்மையினர் எனவே நாம் இஸ்லாம் பற்றி அலட்டிக் கொள்ளத்தேவையில்லை என்றும் உங்களுக்கு போதிக்கப்பட்டதன் விளைவாகவே இந்த மனோ நிலைக்கு நீங்கள் தள்ளப்பட்டுள்ளீர்கள்.
நீங்கள் இந்த இலங்கையில் வாழும் முஸ்லிம் பிரஜை என்றும், உங்கள் மூதாதையர் வீரம், நாணயம், வாய்மை, நம்பிக்கை கொண்ட உயர் பண்புகளைக் கொண்டு விளங்கிய அரபு முஸ்லிம்களின் பரம்பரையினர் என்றும் உங்கள் அடிமனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள்.
பௌத்தர்கள் எப்படி நேபாளத்தில் பிறந்த மைத்திரி சித்தார்தா- புத்த பெருமானைப் போதனையின் மூலம் சரி கண்டு பௌத்த தர்மத்தை ஏற்றுக் கொண்டார்களோ அப்படித்தான் நீங்கள் இஸ்லாத்தை சரிகண்டுள்ளீர்கள்.
இந்த நாடு வேடுவர்களின் நாடு என்று கூறப்படுகின்றது. இந்த நாட்டின் காணி உறுதிப்பத்திரம் புத்த பெருமான் பேரிலும் இல்லை. பௌத்தர்கள் அவரது வாரிசுகளும் கிடையாது.
இலங்கை என்பது பல்லின சமூகம் வாழும் ஒரு நாடாகும். இராணுபலத்தால் பௌத்த பொளத்த நாடு என்ற கோஷம் ஒலிக்கிறது. அவ்வளவுதான். முப்பது வருட போர் காலங்களில் இந்தக் கோஷம் மூச்சடைத்துக்கிடந்தது.
மஞ்சப் பிடவைகள் உடுத்திய மதகுருக்கள் பிரச்சாரம் செய்வது போன்று நாம் வந்தேறிகள் அல்லர். மாற்றமாக பகுத்தறிவைப் பயன்படுத்தி கல், மண், மரங்கள், மனித உறுப்புக்கள் எதுவும் கடவுளாக இருக்க முடியாது என்றும், மனிதனாக இருப்பவன் திருமண வாழ்வின்றி வெறும் துறவியாக இருப்பது என்று கூறுவது பொய், பிராடு என்றும் நம்பியதன் விளைவாக இஸ்லாத்தின் பக்கம் ஈர்க்கப்பட்டோம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்:
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ ثَلَاثٌ مَنْ كُنَّ فِيهِ وَجَدَ حَلَاوَةَ الْإِيمَانِ أَنْ يَكُونَ اللَّهُ وَرَسُولُهُ أَحَبَّ إِلَيْهِ مِمَّا سِوَاهُمَا وَأَنْ يُحِبَّ الْمَرْءَ لَا يُحِبُّهُ إِلَّا لِلَّهِ وَأَنْ يَكْرَهَ أَنْ يَعُودَ فِي الْكُفْرِ كَمَا يَكْرَهُ أَنْ يُقْذَفَ فِي النَّارِ – صحيح البخاري
மூன்று அம்சங்கள் யாரிடம் காணப்படுமோ அவர் ஈமானின் சுவையைப் பெற்றுக் கொண்டவர். (1) அல்லாஹ்வும், அவனது தூதரும் மற்ற அனைத்தையும் விட நேசத்திற்குரியதாக இருத்தல். (2) ஒரு மனிதனை அல்லாஹ்வுக்காகவே அன்றி நேசம் கொள்ளாதிருத்தல். (3) நரக நெருப்பில் வீசப்படுவதை வெறுப்பது போன்று தான் திரும்பி வந்து விட்ட இறை நிராகரிப்பிற்கு மீண்டும் செல்வதை வெறுத்தல் என்று கூறினார்கள்.
அல்லஹ்வையும், அவனது தூதரையும் நாம் நேசிக்கின்ற போது பிறர் நேசத்திற்குரியவர்களாக வரமுடியாது. அவர்கள் எவ்வளவு பெரிய உயர் பதவிகளை வகித்த போதிலும் சரியே!
பொதுபல்லா சேனா என்ற கடும்போக்கினர் நமது வரலாற்றில் புதியவர்களாக இருப்பின் அவர்களைக் கண்டு நீங்கள் அஞ்ச முடியும். ஃபிர்அவன், ஹாமான், காரூன், நம்றூத் போன்ற கொடியவர்களையும், ஜோர்ஜ் புஷ், ஷாரோன் போன்ற வீரம் பேசும் கோழைகளையும் கண்டு சலித்திருப்பீர்கள்.
தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் போன்றோர் அரங்கேற்றிய கொடுமைகள் உங்கள் மனங்களில் மாறா வடுக்களாக இருக்கக் கூடும்.
இந்த வரிசையில் பௌத்த தர்மத்தை தாமதாப் பாதுகாக்கப் புறப்பட்டவர்களில் இந்த பல்லே சேனாவும் ஒன்று. அல்லாஹ்வின் உதவியால் அவர்களால் நம்மை எதுவும் செய்ய முடியாது என்ற உணர்வை உங்கள் அடிமனதில் விதையுங்கள். கோழைகளாக இருக்காதீர்கள். கோடாரிக்காம்புகளாகவும் இருக்காதீர்கள். பதவி அமைச்சர்களாக இருக்காதீர்கள்.
அன்னை கன்ஸா தனது மகனுக்கு சொன்னதை நினைவில் வைத்து சாணக்கியமாக உங்கள் நகர்வுகளை அமைத்துச் செயல்படுங்கள். ஹலால் சான்றிதழ் பௌத்த தேவை இல்லை என்றால் அது பொறிக்கப்படாத பண்டங்கள் நமது வீட்டுக்கு அது அவசியம் இல்லை என்று நினையுங்கள்.
பால் பசுக்களை மாவட்டங்கள் தோறும் வளர்த்து பால் விநியோகக் கம்பனிகளை ஆரம்பிக்க முயற்சி செய்யுங்கள். பௌத்த சகோதர, சகோதரிகள் மத்தியில் இஸ்லாத்தை தூய தூதை தூய முறையில் தெளிவாகக் கொண்டு செல்லுங்கள்.
பொது பல்லோ மாதிரியானவர்களைக் கட்டுக்குள் கொண்டுவர இந்த நாட்டில் நமக்கென வழங்கப்பட்டுள்ள கருத்து, மத, எழுத்து போன்ற சகல உரிமைகளையும் பயன்படுத்தி நமது உரிமைகளை வென்றெடுக்க, நமது இருப்பை நமது சந்ததிகளுக்கு உறுதி செய்ய வழி செய்வோம். நாம் தோட்டக்காட்டில் வாழும் தமிழ் சகோதரர்கள் அல்ல. சுவனத்தின் வாரிசுகள் என்பதை நீங்கள் மறக்கலாகாது. நரகம் யாருக்கு வாக்களிக்கப்பட்டுள்ளது என்பதை நீங்கள் அறியாதவர்களாக இருக்கவே முடியாது.

masha allah kind of imaan.himmath will come by mujahada.
ReplyDeletelikewise sahaba
ஸஹபாக்களில் குறை காண்கின்ற,
ReplyDeleteஇறைத்தூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் சாதாரன மனிதர் என்கின்ற, மனிதர்கள் முஸ்லிம்களிடத்தில் இருக்கும் வரை சோதனைகள் வந்தேயாகும்.
தராவிஹ் தொழுகையை 20 ரகாத்தாகவும், ஞமாத்தாகவும் ஆக்கியது ஒரு ஸகாபி,
அதை 08 கவும், ஞமாத்தாகவும் மாற்றிய (ஸஹபாக்களில் குறை காண்ட) மனிதர்கள் உள்ள இன்றைய முஸ்லிம்களுக்கு சோதனை வரதான் செய்யும்.
Jazakallah kair. Good think I agree with u.
ReplyDeletejazakallahu haire
ReplyDeleteஅல்லாஹ்வின் சோதனை வரும் வழியை எவ்வளவு சுலபமாக சொல்லி விட்டார் சகோதரர் முஸ்தபா அவர்கள். வாழ்க.
ReplyDelete