முஸ்லிம் அமைச்சர்கள் சமூகத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கிறார்கள் இல்லை - முஸ்ம்மில்
(Vi) உணவுப்பொருட்களின் சுத்தம், சுகாதாரத்தை விஞ்ஞான ரீதியில் உறுதிப்படுத்தும் ஆவணமே ஹலால் சான்றிதழாகும். இதைவிடுத்து இது மதமாற்ற சான்றிதழ் அல்ல என்று கொழும்பு மாநகரசபை மேயர் ஏ.ஜே.எம். முஸம்மில் தெரிவித்தார்.
அரசுக்கு தாளம் போடும் முஸ்லிம் அமைச்சர்கள் தமது சமூகத்தை பாதுகாப்பதில் அக்கறை காட்டுவதில்லையென்றும் அவர் குற்றம் சாட்டினார். சிறிகொத்தாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே மேயர் முஸம்மில் இதனைத் தெரிவித்தார். இது குறித்து மேயர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
நாட்டில் இன்று இனவாதம், மதவாதம் தலைதூக்கியுள்ளது. ஹலால் சான்றிதழ் தொடர்பாக பிழையான பிரசாரங்களை மேற்கொண்டு முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. இச் சான்றிதழ் முஸ்லிம் மதமாற்றம் என பிழையான வியாக்கியானம் வழங்கப்பட்டுள்ளது. சுத்தமான, சுகாதாரமான உணவுப்பொருட்களை விஞ்ஞான ரீதியாக உறுதிப்படுத்துவதே இச் சான்றிதழாகும்.
எனவே, முஸ்லிம் சமூகத்தையும் பள்ளிவாசல்களையும் அரசாங்கம் பாதுகாக்க வேண்டும். அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளைப் பெற்று சிறப்புரிமைகளை அனுபவிக்கும் முஸ்லிம் அமைச்சர்கள் அரசுக்குத் தேவையான விதத்தில் தாளம் போடுகின்றார்களே தவிர, தமது சமூகத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை எடுப்பதில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

நீங்க முதல்ல சரியா இருக்க முயற்சி செய்ங்க
ReplyDeleteThen who the hell are you?
ReplyDelete