Header Ads



அபூபக்கர் ரழி அவர்களும் உறுதிமிக்க அரசியலும் ...!



(H. பைஸ்)

நபியவர்களின் மரணத்தின் பின் முஸ்லிம்களை அதே பாணியில் நிருவகிக்க வேண்டிய சீரிய தலைமைத்துவத்தின் பால் தேவை ஏற்பட்டது . ஏனென்றால் நபி அவர்களின்  மரணத்தின் பின் பல பிரச்சினைகள் உருவாக ஆரம்பித்தன . ஏன் நபியின் மரணம் கூட ஒரு பிரச்சினையாகவே இருந்தது .

நபியவர்களின் மரணித்த உடல் நபித்தோழர்கள் முன்னிலையில் இருக்கின்றது .ஆனால் நபியவர்கள் மரணித்து விட்டார்கள் என்ற ஒரு உணர்வை ஏற்றுக்கொள்ள அவர்கள் உள்ளம் இடம் கொடுக்கவில்லை . இதற்கு உமர் ரழி கூட விதிவிலக்காக இருக்கவில்லை  . ஆனால் இந்த பிரச்சினையை தீர்த்து வைத்த அபூபக்கர் ரழி அவர்களின் தனித்துவம் முஸ்லிம் தலமைத்துவத்திட்கு பொருத்தமானவர் இவர்தான் என்பதை பறை சாற்றிட்டு .

ஆனால் இதைவிட பெரிய விடயம் என்னவென்றால்    இவர்கள் தான் எனக்கு பிறகு முஸ்லிம் தலைமைத்துவத்திற்கு பொருத்தமானவர் என்பதை பல நபிமொழிகள் மூலம் நபியவர்கள் வெளிப்படுத்தி காண்பித்திருந்தார்கள். அது உண்மை படும் விதமாக  இறுதியல் தங்களுக்கு பொறுத்தமான தலைவர் அபூபக்கர் ரழி அவர்கள்  தான் என்பதை உணர்ந்த நபித்தோழர்கள் அவர்களையே தலைவராக தெரிவும் செய்தார்கள் . அவர்களும் தான் தலைமத்துவத்திற்கு  சலைத்தவன் அல்ல என்பதை நிருபித்தும் காண்பித்தார்கள் . ஏனென்றல் அவர்களும் நபியின் ஆன்மிகம் மட்டுமல்லாமல் அரசியல் பாசறையிலும்  பயின்றவர்கள் தானே .

அப்படியே இவர்கள் தலமை பொறுப்பை ஏற்றுக்கொண்டாலும் அது இலகுவாக வழிநடத்தி செல்ல முடியுமாக இருக்கவில்லை . பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது . குறிப்பாக சொல்லப்போனால் ஒசாமா ரழி அவர்களின் படையை அனுப்பும் போது ஏற்பட்ட பிரச்சினை , மதம் மாறியவர்களுக்கு எதிரான  யுத்தம் , சகாத் கொடுக்க மறுத்த ஒரு கூட்டம் இப்படி இன்னும் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேரிட்டது .

ஆனால் இவை அனைத்தயும் தீர்த்த விதம் அவர் ஒரு மிகப்பெரிய சானக்கியமிக்க அரசியல்வாதிதான் என்பதை நிருபித்து காட்டியது  . அதிலும் ஒசாமா ரழி அவர்களின் படையை அனுப்பும் போது ஏற்பட்ட பிரச்சினை கொஞ்சம் கடினமாகவே இருந்தது . ஆனால் அதையும் தான் மார்க்க உறுதியால்  இலகுவாக தீர்வு கண்டார்கள் .ஏனென்றல் இந்த பிரச்சினை தன் கூட இருந்த நபித்தோழர்கள் மூலமே ஏற்பட்டு இருந்தது .

இதற்கு காரணம்  ஒசாமா ரழி அவர்கள் மிக சிறு வயது கொண்டவர்களாக இருந்தார்கள் அதுமட்டுமல்லாமல் மிக பெரிய சகாபாக்கள் அந்த படையிலும் ,வெளியிலும் இருந்தார்கள். அதானாலேயே இந்த சிறு வயதை உடைய ஒசாமா ரழி அவர்களின் படை தலைமை பொறுப்பை ஏற்க நபி தோழர்கள்  மறுத்தார்கள் . ஆனால் இது நபி அவர்கள் தயார் செய்த படை என்பதால் எதற்கும் அஞ்சாமல் அனைவருடைய கருத்துக்கும் செவி சாய்க்காமல் நபியை முற்படுத்தி அந்த படையை அனிப்பி காண்பித்தார்கள் .

இது தான் உண்மை இஸ்லாம் உள்ள ஒரு அரசியல்வாதியின்  உறுதியாகும் . அவர்கள் நினைத்து இருந்தால் தன் பதவியை தக்க வைக்க நினைத்து மற்றவர்களின் கருத்துக்கு முன் உரிமை கொடுத்து இருக்க முடியும். ஆனால் அவர்கள் அதை செய்ய வில்லை . தனக்கு பட்டம் ,பதவி , ஆட்சி இதை எல்லாம் விட நபி தான் முக்கியம் என்று நினைத்தார்கள் . அதனால் தன் பதவிக்கு அவர்கள் அஞ்சவில்லை . பதவியும் அவர்களை விட்டு போகவில்லை .

இந்த அபூபக்கர் ரழி அவர்களின் முடிவு  இன்றைய ஆட்சியாளருக்கும் , அரசியல் வாதிகளுக்கும்  அப்படியே முரண் பட்ட விடயமாகும் . இவர்களுக்கு ஏற்பட்ட பிரச்சினையை விட சிறிய சிறிய பிரச்சினைகளுக்காக இன்றைய ஆட்சியாளர்களும் , அரசியல்வாதிகளும் தலைகீழாய் மாறி உள்ளனர் .இன்றைய அரசியல் வாதிகள் தன் பதிவிக்காக , தனது கட்சிக்காக , தன் ஊழியர்களுக்காக , தன் சொகுசு வாழ்க்கைக்காக , மற்றும்  தனக்கும் தன் கட்சிக்கும் உதவி செய்பாவர்களுக்காக மார்க்கத்தை மட்டுமல்லாமல் தன் மானத்தையும் விற்று ஆட்சி அதிகாரத்தை தக்க வைக்க போராடிக்கொண்டு இருக்கிறார்கள் .

மார்க்கத்திற்காக தன் பதவி போனாலும்  பரவாயில்லை என்று நினைத்த அபூபக்கர் ரழி அவர்கள் எங்கே தன் பதவிக்காக மார்க்கத்தையே துறந்த இவர்கள் எங்கே ? அபூபக்கர் ரழி அவர்களுக்கும் , இன்றைய உலக மற்றும் உள்நாட்டு அரசியல் வாதிகளுக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள இடைவெளி வித்தியாசமாகும் .

இன்று உலகளாவிய ரீதியில் முஸ்லிம்கள் படும் அனைத்து கஷ்ட நஷ்டங்களுக்கும் காரணம் இப்படி பட்ட அரசியல்வாதிகளின் நிலை  தான் . ஏதோ ஒரு சில அற்ப காரணங்களுக்காக இஸ்லாத்தையே விட்டு கொடுக்க இவர்கள் தயங்குவது இல்லை . மற்றவர்களுடன் நட்புறவு பேன வேண்டும் என்று நினைத்து மார்க்கத்தை விட்டு கொடுத்து இறுதியில் இன்று அரசியல் அடையாளத்தை முஸ்லிம்கள் இழந்து தவிக்கின்றனர் . எனவே  இன்றைய முஸ்லிம்களின் உடனடி தேவை மார்க்க முள்ள அரசியல்வாதிகள் தான் .  இதை தேர்ந்து எடுக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வரு முஸ்லிமுக்கும் இருக்கிறது . அப்படி தேர்ந்து எடுக்கும் நிலை எப்போது தோன்றுகிறதோ அப்போது தான் முஸ்லிம்கள் தலை நிமிர்ந்து நிற்கும்  அபூபக்கர் ரழி அவர்களின் ஆட்சி மீண்டும் உலகிற்கு கிடைக்கும் .

முஸ்லிம்களின் சுபீட்ச வாழ்க்கைக்கு அல்லாஹ் உதவி செய்வானாக !.  .

No comments

Powered by Blogger.