பொதுபல சேனா அங்கீகரிக்கப்பட்ட பௌத்த அமைப்பல்ல - களனி மகிந்த சங்கரத்னதேரர்
பொதுபல சேனா அங்கீகரிக்கப்பட்ட பௌத்த அமைப்பல்ல எனவும், அதற்கு முடிவெடுக்கும் அதிகாரங்கள் எதுவும் கிடையாதெனவும் தெரிவித்திருக்கும் களனி ரஜமகா விகாராதிபதி கொள்ளுப்பிட்டிய மகிந்த சங்கரத்னதேரர் அஸ்கிரிய, மல்வத்தை பீடங்களும், மூன்று நிக்காயாக்களின் தலைமைப் பீடங்களுமே எந்தத் தீர்மானத்தையும் எடுக்கும் எனவும் குறிப்பிட்டார்.
நாட்டில் இனங்களுக்கிடையே பிரச்சினைகளைத் தோற்றுவிக்க எந்தச் சக்திக்கும் இடமளிக்க முடியாதெனவும் சகல இனங்களும் ஒன்றுபட்டு வாழக்கூடிய சூழ்நிலையை உறுதிப்படுத்த வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தினார்.
இலங்கை வர்த்தக சம்மேளனமும், அகில இலங்கை ஜெம்இயத்துல் உலமாவும் இணைந்து கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் நடத்திய விசேட செய்தியாளர் மாநாட்டில் ஊடக வியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே களனி ரஜமகா விகாராதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது ;
பொதுபல சேனா வீதியோரங்களில் நடத்தும் கூட்டங்களில் தெரிவிக்கும் கருத்துக்களையிட்டு அலட்டிக் கொள்ளவேண்டியதில்லை. பொதுபலசேனா என்பது மகாசங்க உயர் பீடத்தினால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பல்ல. அது சாதாரணமான ஒரு இயக்கம் மட்டுமேயாகும். இது போன்ற அமைப்புக்கள் நாட்டில் பரவலாகவே உள்ளன. பொதுபல சேனாவின் அச்சுறுத்தலுக்கு மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை.
நாட்டில் மதங்களுக்கிடையே நல்லிணக்கம் ஏற்படவேண்டும். சகல இனத்தவர்களும் புரிந்துணர்வுடன் ஐக்கியமாக வாழவேண்டும். அவரவர் மதங்களைப் பின்பற்றி வாழும் உரிமை சகலருக்கும் உண்டு. அதனை யாரும் மறுக்கமுடியாது.
நான் மீண்டும் சொல்கிறேன், பொதுபல சேனாவை நீங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவேண்டாம். அவர்களின் கருத்துக்கள் தொடர்பில் அலட்டிக்கொள்ளவும் தேவையில்லை. எந்தச் சமூகத்துக்கும் அநீதி ஏற்பட நாம் ஒரு போதும் இடமளிக்க மாட்டோம் எனவும் களனி விகாராதிபதி தெரிவித்தார்.
ஆனால் பொறுப்பாக கடமையாற்ற வேண்டிய அரசு இந்த விடயத்தில் வாய்மூடி மௌனியாக இருக்கின்றதே...? இது எதனை குறிக்கின்றது?
ReplyDeleteedu arasangathin thundukol sadi welai
ReplyDeletearasangame enda sadi welayai seygiradu
ReplyDelete