Header Ads



'சிங்களவர்கள் புத்தியற்றவர்கள் என்று உலமாக்கள் சபை நினைத்து விடக்கூடாது'



தேசிய பாவனைக்காக நுகரப்படும் பொருட்களில் ஹலால் இலட்சினையை நீக்கி ஜெம்இய்யத்துல் உலமா சபை சிறப்பான தொரு நாடகமொன்றை நாட்டில் அரங்கேற்றியுள்ளது. அத்துடன், சில பௌத்த மதகுருமார்களின் பின்னால் நின்று கொண்டு நாட்டின் மரபினை சிதைக்க  முற்படும் ஜெம்இய்யத்துல் உலமா சபை தொடர்ந்தும் ஷரியா சட்டத்தினை நாட்டில் ஸ்தாபித்து நாட்டில் பிரிவினை வாதத்தினை ஏற்படுத்துகின்றது. 

ஆதலால்  சிங்கள பௌத்த நாடான இலங்கையின் மரபுகளையும் கலாசாரத்தினையும்  பாதுகாக்கும் வகையில் ஹலால் முற்று முழுதாக நாட்டிலிருந்து விலக்கப்படவேண்டுமென பொதுபல சேனா அமைப்பின் பிரதான செயலாளர்  கலபொட  ஹத்தே ஞான சாரதேரர் தெரிவித்தார். 

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ;  கடந்த திங்கட்கிழமை  சினமன் கிராண் ஹோட்டலில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் மூலமாக நாட்டில் சிறப்பானதொரு நாடகத்தினை அகில இலங்கை ஜெம்இய்யத்துல் உலமா சபை முன்னெடுத்திருந்தது. நாட்டின் அனைத்து மக்களையும் ஏமாற்றும் வகையில்,  தேசிய பாவனைக்காக  பயன்படுத்தும் பொருட்களிற்கு ஹலால் சான்றிதல் வழங்கும் நடவடிக்கையினை நிறுத்துவதாக அவ் ஊடகவியலாளர் சந்திப்பில் உலமா சபை தெரிவித்திருந்தது. 

அத்துடன், வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களிற்கும் உள்நாட்டில் வெளிநாட்டவர்களால் நுகரப்படும் பொருட்களிற்கும்  ஹலால் சான்றிதழை இலவசமாக வழங்குவதற்கு  உலமாக்கள் சபை தீர்மானித்திருந்தது. அகில இலங்கை ஜெம்இய்யத்துல் உலமா சபையின் ஹலால் சான்றிதழ் வழங்கும் நடவடிக்கை அவ்வமைப்பின் சில கொள்கைகளின் கீழேயே வழங்கப்பட்டுவருகிறது. 

உதாரணமாக ஹலால் சான்றிதழ் வழங்கல் சட்டத்தின் 3:1:6 என்ற பிரிவில் குறித்த உற்பத்திப் பொருள் சுகாதாரத்தன்மை ஷரியா நீதியின் அடிப்படையில் அங்கீகரிக்கப்பட்டால் மட்டுமே ஹலால் சான்றிதழ் வழங்கப்படும். இலவசமாக ஹலால் சான்றிதழை வழங்குவதன் மூலம் நாட்டின் சட்டத்தில் ஷரியா சட்டத்தை புகுத்தும் நடவடிக்கையினை அகில இலங்கை ஜெம்இய்யத்துல் உலமா சபை  மேற்கொள்ள முயற்சிக்கின்றது. அதனால், ஹலால் சான்றிதழ்  வழங்கும் முறை நாட்டிலிருந்து முற்று முழுதாக நீக்கப்படவேண்டும். 

அகில இலங்கை ஜெம்இய்யத்துல் உலமா ஹலால் சான்றிதழ் மூலமாக நாட்டில் பிரிவினை வாதத்தினை ஏற்படுத்தி வந்ததோடு மட்டுமல்லாது தனது தவறை மறைக்க இன்று சில காவியுடையின் பின்னால் மறைந்து தமது செயற்பாடுகளை செய்ய முற்படுகிறது. இதனாலேயே  அண்மையில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பிலும் சில பிக்குமார்களை உலமா சபை அழைத்திருந்தது. 

சிங்களவர்கள்  புத்தியற்றவர்கள் என்று ஒரு போதும் உலமாக்கள் சபை நினைத்து விடக்கூடாது. தொடர்ந்தும் உலமா சபையின் கபட நாடகத்துக்கு  அனுமதியளிக்கமாட்டோம். 

சிங்களவர்களையும், முஸ்லிம்களையும் மிகுந்த கவலைக்கு உள்ளாக்கிய உலமாசபையின் இந்த நாடகத்துக்கு நாம் உடனடியாக முற்றுப்புள்ளி வைப்போம். அரசாங்கம் உடனடியாக ஹலால் சான்றிதழ் முறையை முற்றாக நீக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம் எனத் தெரிவித்தார். 

கடந்த 5  6 வருடங்களாக  நாட்டிற்கு ஒரு புற்று  நோயாக காணப்பட்ட ஹலால் சான்றிதழைப் பற்றி பௌத்த மக்கள் மத்தியில் தெளிவுபடுத்தி அதனை நீக்குவதற்கு பொதுபலசேனா பாரிய செயற்பாட்டினை கடந்த 10 மாதங்களில் முன்னெடுத்துவந்தது. ஹலால் சான்றிதழ் வழங்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியையேனும் நிறுத்தப்பட்டதென்றால் அந்த வெற்றி பொதுபலசேனா உட்பட பௌத்த மக்களுக்கு உரித்துடையதாகும். 

ஆனால், ஹலால் சான்றிதழ் வழங்கும் நடவடிக்கையினை அகற்றும் செயற்பாட்டில் சிறிதளவேனும் பங்கு கொள்ளாத சில மத அமைப்புகளும் சில  தனியார் அமைப்புகளும் இந்த வெற்றிக்கு தாமும் ஒரு காரணம் என மார்த்தட்டி கூறிக்கொள்கின்றது. 

இன்னும் பொதுபலசேனா தனது வெற்றியை அடையவில்லை. நாட்டிலிருந்து வேற்று மத சட்டங்களும் வெளிநாட்டு ஆதிக்கமும் என்று விலக்கிக் கொள்கிறதோ அன்றுதான்  நாம் எமது வெற்றி இலக்கை அடைந்ததாகக் கருதப்படும் எனத் தெரிவித்தார்.

11 comments:

  1. [بِسْمِ اللَّهِ الرَّحْمَـنِ الرَّحِيمِ]

    In the Name of Allah, the Most Gracious, the Most Merciful.

    [قُلْ يأَيُّهَا الْكَـفِرُونَ- لاَ أَعْبُدُ مَا تَعْبُدُونَ- وَلاَ أَنتُمْ عَـبِدُونَ مَآ أَعْبُدُ- وَلا أَنَآ عَابِدٌ مَّا عَبَدتُّمْ- وَلاَ أَنتُمْ عَـبِدُونَ مَآ أَعْبُدُ- لَكُمْ دِينُكُمْ وَلِىَ دِينِ-]

    Say: O disbelievers, I worship not that which you worship. Nor will you worship whom I worship. And I shall not worship that which you are worshipping. Nor will you worship that which I worship. To you be your religion, and to me my religion.

    அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப் பெயரால் (ஆரம்பிக்கிறேன்).

    ''(நபியே) கூறுவீராக; காபிர்களே (நிராகரிப்பவர்களே), நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்க மாட்டேன். இன்னும் நான் வணங்குகிறவனை நீங்கள் வணங்குபவர் அல்லர். அன்றியும் நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபவன் அல்லன். மேலும் நான் வணங்குகிறவனை நீங்கள் வணங்குபவர்கள் அல்லர். உங்களுக்கு உங்கள் மார்க்கம். எனக்கு என்னுடைய மார்க்கம்.''

    பௌத்த பிக்குகள், இன்னும் நமது மார்க்கத்தில் வீணாக தலையிடும் காபிர்களுக்கு சூரா அல் காபிரூன் நல்ல படிப்பினைகளைக் கற்றுத் தரும் என்று நம்புகிறேன். இந்த சூராவை அவர்களுக்கு எத்தி வைக்க யாராவது முன்வருவார்களானால்,அல்லாஹ் அவர்களுக்கு அருள் புரிவானாக.!

    ReplyDelete
  2. ஏ, உங்களுக்கு உலமா சபை ஆப்பு வச்சிட்டோ?

    சும்மா அதிரிதல்ல,,,ஆப்பு கண்ணுக்கு தெரியாது கண்ணா,,,,.

    ReplyDelete
  3. வேற்று மத சட்டங்களும் வெளி நாட்டு ஆதிக்கமும் என்பதுடன் வெளி நாட்டு பொருட்களும் வெளிநாட்டு உல்லாசபிரயாணிகளும் வெளிநாட்டு வாகனகளும் என்பதுடன் வெளிநாட்டு புத்தரின் போதனையையும் ஏன் உள்ளடக்க கூடாது......????

    ReplyDelete
  4. சாமியரே உங்களுக்கு இப்போ என்ன பிறச் சின .ஷரிய சட்டமா ? இதோ சொல்றேன் கேளுங்க . விபாசரம் ..மது .. கற்பழிப்பு , கள்ள கடத்தல் ....ஒரின சேர்கை ..இன்னும் பல ஜில்ல லங்கடி வேல பக்குற ..... கள்ளேன் க்கு தான் இச் சட்டம் தலை வழிய இருக்கும்

    ReplyDelete
  5. இப்பதான் புறிஞ்சதா உலகம் எப்படி உங்களை நினைக்கிறதென்று??? ஆஹா இந்த மேதாவிட புத்தியகேட்டு ஜம்மியதுல் உலமா இனியாவது சான்று பகர்வதவிடுத்து முற்றாக ஒதுங்கி கொள்ளலாமே நம் நாட்டு ஏற்றுமதிகள் அதட்கு அப்புறம் ஆஹா ஓஹோ என்று ஓங்க அதை பாராட்டி சீராட்ட வர்தக சமூகம் பொதுபலசேனைக்கி பூசைநடத்தும் காட்சிகளை கண்ணார கண்குளிர காணவாவது ஜம்மியதுல் உலமா முற்றாக ஒதுங்கனுமே அல்லாஹ்வே ஜம்மியதுல் உலமாவுக்கு முற்றாக ஒதுங்கும் புத்தியை கொடு

    ReplyDelete
  6. moda singhalayo

    ReplyDelete
  7. terro yar sonnadu muslimgl kavali kondullargal enru yaruma kavali kollavelli neengal nadaham nadatteveddu ulmasabyyai solluheeray nadahakm yar nadatteyadu enru meeha veerayivel terreyum par

    ReplyDelete
  8. அட பண்ணிங்களா உங்களுக்கு இப்ப என்னதான் வேணும். பாடையில போவ.

    ReplyDelete
  9. Sura:3, Ayah:12
    قُل لِّلَّذِينَ كَفَرُوا سَتُغْلَبُونَ وَتُحْشَرُونَ إِلَىٰ جَهَنَّمَ ۚ وَبِئْسَ الْمِهَادُ

    3:12. நிராகரிப்போரிடம் (நபியே!) நீர் கூறுவீராக: “வெகு விரைவில் நீங்கள் தோல்வியடைவீர்கள்; அன்றியும் (மறுமையில்) நரகத்தில் சேர்க்கப்படுவீர்கள்; இன்னும், (நரகமான அவ்விரிப்பு) கெட்ட படுக்கையாகும்..

    ReplyDelete
  10. //*இப்பதான் புறிஞ்சதா உலகம் எப்படி உங்களை நினைக்கிறதென்று??? ஆஹா இந்த மேதாவிட புத்தியகேட்டு ஜம்மியதுல் உலமா இனியாவது சான்று பகர்வதவிடுத்து முற்றாக ஒதுங்கி கொள்ளலாமே நம் நாட்டு ஏற்றுமதிகள் அதட்கு அப்புறம் ஆஹா ஓஹோ என்று ஓங்க அதை பாராட்டி சீராட்ட வர்தக சமூகம் பொதுபலசேனைக்கி பூசைநடத்தும் காட்சிகளை கண்ணார கண்குளிர காணவாவது ஜம்மியதுல் உலமா முற்றாக ஒதுங்கனுமே அல்லாஹ்வே ஜம்மியதுல் உலமாவுக்கு முற்றாக ஒதுங்கும் புத்தியை கொட //*

    முஸ்லிம்கள் மத்தியில் ACJU மீது நம்பிக்கை இழக்க வைக்க..அல்லது இப்போதுள்ள தலைமையை இல்லாமலாக்க நடக்கும் நிகழ்சிகள் இது ... ஒரே அடியாக விட்டு கொடுத்தாள் அதை வெற்றியாக நினைப்பார்கள் ... so நாம் முற்றும் முழுதாக தற்போது ACJUகு ஆலோசனைகளையும் ,support இனையும் கொடுக்க வேண்டும் ...

    ReplyDelete
  11. நாங்கள் உண்மையைப் பற்றி நினைப்பதில்லை ஒத்துக்கொள்வோம்

    ReplyDelete

Powered by Blogger.