Header Ads



முஸ்லிம்களுக்கு எதிரான இனவெறிக்கு ஆசிர்வாதம் வழங்கியது யார்..?


(எம்-எச் முஹம்மத்) 

முரண்பாடுகளை மெல்ல மெல்ல வளர்க்க வார்த்தை பிரயோகங்களே போதுமானது. பிரத்தியேகமான இன்னொரன்ன ஏற்பாடுகள் எல்லாம் ஏதும் விஷேடமாக தேவையில்லை. பிரிவினை வாதத்திற்க்கு எதிரான அரசின் வெற்றி வெறுமனே பௌத்த இனத்தின் வெற்றியாக மாத்திரம் சூளுரைக்கபட்டதே இன்றைய பொது பல சேனாவின் அட்டகாசத்தின் பின்னனிக்கும் முழு அத்திவாரமாய் அமைந்துள்ளது.

நாட்டின் ஹாலால் தரச்சான்றிதழ் தொடர்பாக கனகச்சிதமாய் காய் நகர்த்தி மத வெறிவாத யுத்தத்திற்க்கு ஆரம்ப புள்ளி வைத்துள்ள பொதுபல சேனாவின்  போக்கு நடந்து முடிந்த யுத்தத்தை விட மோசமான ஒரு கட்டத்திட்க்கு  மக்களை அழைத்து செல்லப்போகின்றது. பௌத்தமதமும் ,புத்தர் போதனைகளும் ஹராமாக்கிய (தடுத்த) மதுபானமும் , யுத்தம் போன்ற எத்தனையோ பௌத்ததர்மங்கள்  எல்லாம் ஓரம் கட்டி வைத்துவிட்டு காலம் காலமாய் ஆட்சியும் அரசியலும் பழகிப்போன நாட்டில் 'ஹலால'; நடைமுறை மாத்தரம் பௌத்துவத்திற்க்கு எதிராக மாறியுள்ளதா? என்பது ஆராயப்பட வேண்டியதொன்று.

யாதார்த்தமாக ஹாலால் பொறிமுறை, உலமா சபை என்பதற்க்கு எல்லாம் எதிரான போக்கு என்பதை விட இலங்கை முஸ்லிம்களின் மனநிலைக்கும், அமைதிக்கும் எதிரான மிலேச்சதனமாகவே இதை நாம் வரையரை செய்யவேண்டியுள்ளது. இறுதி  போரில் வெற்றி இலக்கை தட்டிச்சென்ற அரசாங்கம் வெற்றி நகர்வுகளின் பின்னனியில் பலத்த இராஜதந்திர சாவல்களுக்கு முகம் கொடுத்துவருகிறது. ஜ.நா மனித உரிமைப்பேரவையில் கடந்த அமர்வுகளிள் இலங்கை அரசாங்கத்திக்காக அரபியர் தேசமெல்லாம் தாய் நாட்டிற்க்காக மடிப்பிச்சை கேட்ட உலமா சபை இன்று அல்-கொய்தாவின் முக்கிய பிரிவாக விமர்சன ரீதியில் மாற்றப்பட்டுள்ளது.

மஹிந்த சிந்தனை கொள்கைத்தத்துவத்தை அடிப்படையாகக்கொண்ட அரசாங்கத்திக்கு முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதியாக உலமா சபை செய்த உதவிக்கு இன்றைய எதிர்பார்ப்புயெல்லாம் சிவப்பு சால்வை தரைத்தழுவிய செங்கம்பள கௌரவிப்பள்ள, மாறாக தனித்துவத்தையும் சமுதாய அடிப்படை உரிமைகளை சேதப்படுத்தாத நிம்மதியான வாழ்வே ஆகும். 

ஐக்கிய இலங்கைக்குள்ளே  ஐக்கியமான வாழ்வையே எதிர்பார்த்து இருக்கும் முஸ்லிம் சமூகம் அன்று முதல் இன்று வரை ஒரே இலங்கை என்ற கொள்கைக்கு கடுகளவும் முரண்பட்டு நின்ற வரலாறு கிடையாது.

சர்வதேசத்தின் கூலிப்படைகளாக தெளிவாக திட்டமிடப்பட்டு சில காவிதரித்த தலைமைகளின் கையில் கொந்தராத்து கொடுக்கபட்டு வழிநாடத்தப்படும் மதவெறி சேனாவின் யுத்ததிற்க்கு அரசாங்கத்தின் மறைமுக ஆதாரவு இருக்கின்றதா????? என்பது இன்றைய சூழலில் தெளிபடுத்தபடவேண்டியதொன்று. அதேபோன்று  தனிப்பபட்ட சமுதாயத்தின் அடிப்படை உரிமைகளிள் கைவரிசையை காட்டும் மதவெறி சேனாவை இதுவரை அரசு இரும்புகரம் கொண்டு அடக்குவதற்க்கான எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படமை முஸ்லிம் சமுதாயத்தின் சந்தேகத்தை வலுவுட்டுகிறது. மேலும் அரசின் உச்சகட்ட தடுப்பின்மையும் ஒரு வகையான அமைதிப்போக்கும் படிப்படியாக மத வங்குரோத்து யுத்தத்தை வளர்க்கும் பொதுபல சோனாவின் நகர்வுக்கு மைல் கல்லாகிப்போனது. இது அங்காங்கு வெடித்த மனிதவெடிகுண்டுகளை விடஅபாயகரமானது.

முன்னால் ஜெனரல் முன்னால் நீதியரசர் விடயத்தில் எல்லாம் தீயாய் விழித்தெழும் சட்டத்தின்  கண்கள் நாட்டின் சிறுபான்மைக்கு எதிரான காடைத்தனங்களின் போது மாத்திரம் தன் சிநதனை கண்களை மூடிக்கொள்கிறது.சட்டத்தையும் அடிப்படை மனித உரிமைகளையும் பாதுகாக்கும் பொறுப்பு யாரிடம் உள்ளதோ அந்த தரப்பின் வினைத்திறனான அனுகுமுறையிலேயே நாட்டின் நிம்மதி தங்கியுள்ளது.

புனித பௌத்த மதத்தின் பெயரால் அரங்கேற்றப்படும் இந்த அட்டகாசங்களிள் இருந்து நாட்டு முஸ்லிம்களை காக்க வேண்டிய பாரிய பொறுப்னை சுமந்திருக்கும்  அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா,பிரச்சனைக்கு தீர்வாக ஹாலால் பொறிமுறையை நடைமுறைப்படுத்தும் பொறுப்பை அரசாங்கத்திடம் கையளிக்கமுடிவு செய்தது. அது தீர்கதர்சனமான முடிவல்ல என்பதை காலம் உணரத்தியுள்ளது.பொது பல சேனா என்பது வெறுமனே ஹாலால் சான்றிதழில் கோபம் கொண்ட அமைப்பு அல்ல. அது நல்லிணகத்திற்க்கும் முழு இலங்கையின் சமாதான வாழ்விற்க்கும் எதிரான பயங்கரவாதிகளின்அமைப்பு என்பதை உலமா சபை உணர்ந்து  செயற்பட வேண்டும், மேலும் அரசாங்கம் அதனை தடைசெய்ய வலியுருத்துவதே புத்திசாலித்தனமான செயற்பாடாக இருக்கும்.செய் நன்றியை மறந்த தலைமைகளுக்கு அதனை மீள மீள  வலியுருத்துவதும் அவசியமானதொன்றாக உள்ளது .அத்தோடு  ஒரே நாடு இங்கு சிறுபான்மை பெரும்பான்மை சமூகம் இல்லலை யாவரும் சமம் என மேடைகள் தோறும் முழங்கும் நல்ல சிந்தனையுள்ளம் கொண்ட ஜனாதிபதி உள்ள ஸ்ரீலங்காவில்  முஸ்லிம்களுக்கு எதிரான இனவெறி பயங்கரவாதம் அரங்கேறுவதே அரசின் ஆசிர்வாதமா????? பொது பல சோனா என்பதை   மக்கள் இனி ஆராய வழிவகுக்கும்.

3 comments:

  1. உபகாரம் செய்பவர்களை எல்லாம் நடாற்றில் விடுவது என்பது சிவப்பு சாழ்வையின் தனி ஸ்டைல். மங்கல சமரவீரா, பிரபாகரன் , சரத் பொன்செக, ஸிராநி பண்டரநாயக, இன்னும் நமக்கு தெரியாமல் எத்தனயோ? a deceased president ever in srilankan history

    ReplyDelete
  2. ஆம்,அதில் என்ன சந்தேகம்? நிச்சயமாக இனவெறிசேனா ராஜபக்ஷ கம்பனியின் ஏவல் நாய்களே.83 ஜூலைக் கலவரத்தை போன்றே ஒரு கொடூர இனச்சுத்திகரிப்பை இந்த மாத இறுதிக்குள் அல்லது ஏப்ரல் நான்காம் திகதியில் சீருடை அணியாத இராணுவத்தை கொண்டு செய்திட சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக அறியப்பட்டுள்ளது.இது வெறும் இரண்டே மணித்தியாலங்களுக்குள் சுமார் ஒன்றரை அல்லது இரண்டு லட்சம் முஸ்லிம்கள் இனச்சுத்திகரிப்பு செய்யப்படலாம் என்கிற தகவல்கள் உயர்மட்டத்தில் கசிந்துள்ளதாக அறியப்பட்டுள்ளது.மஹரகமையில் இனவெறிசேனாவினரின் கோரிக்கைகள் இதனையே வலியுறுத்தியுள்ளது.இனவெறிசேனா என்பது முஸ்லிம்களை நோக்கி எய்தப்பட்டுள்ள அம்புகளே என்பதை புரிந்துகொள்வது கடினமல்ல.ஆனால் அவற்றை எய்த கரங்கள் இரட்டை வேடம் அணிந்து ஏமாற்ற முனைவது ஆபத்தான சமிக்ஞைகளாக புரிந்துகொள்ளவேண்டும் .ராஜபக்ஷ கம்பனியிடம் முஸ்லிம்கள் பாதுகாப்புத் தேடிச்செல்வது ஓநாயின் குகைக்குள் ஆட்டுமந்தைகள் அபயம் தேடிச்செல்வதை ஒத்திருக்கிறது.

    ReplyDelete
  3. Maruthooran & Ishna , நீங்கள் மிகச் சரியான உண்மையை கூறியுள்ளீர்கள்.... ஆனால் இந்த ராஜபக்ச அன் கம்பனியை வால்பிடிக்கும் சுயநல அரசியல் வாதிகள் நிட்சயமாக மக்களிடம் வருவார்கள்..... இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் அவமானப்படித்திய இந்த ராஜபக்ச அன் கம்பனிக்காக இல்லாத பொய்களையும் பசப்பு வார்த்தைகளையும் கூறிக்கொண்டு பணத்தையும் வாரி வழங்கிக்கொண்டு ஓட்டு கேட்டு வாருவார்கள்.. பிறகு என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பாருங்கள்...

    ReplyDelete

Powered by Blogger.