Header Ads



புல்மோட்டையில் 6 முஸ்லிம் மீனவர்கள் கைது


(அப்துல்சலாம் யாசீம்)

புல்மோட்டை அரிசிமலைப்பகுதியில்  வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 6 வள்ளங்களும், 6 இன்ஜீன்களும், ஜெனரேட்டர் 6, அத்துடன் 6 நபர்களையும் கைது செய்து புல்மோட்டை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக புல்மோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களுடன் தடை செய்யப்பட்ட வளைகளும் காணப்பட்டதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர் அத்துடன் இவர்களை திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஐர் படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மீன் பிடிக்க சென்றவர்களை கடற்படையினர் தனிப்பட்ட குரோதத்தில் அதாவது காணி சுவீகரிப்பு பற்றி எதிர்வரும் திங்கள் கிழமை புல்மோட்டை  கடற்படையினருக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதினாலேயே இச்சம்பவங்களை மேற்கொண்டு வருவதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினரொருவர் குற்றம் சுமத்துகின்றார்

No comments

Powered by Blogger.