Header Ads



2 வருடங்களில் (ஹிப்ழ்) மனனம்செய்த மாணவன் (படங்கள்)


(ஸாரா)

புத்தளம் தில்லையடி முஹாஜிரீன் அறபு மத்ரஸாவில் அல்குர்ஆனை இரண்டு வருடங்களில் (ஹிப்ழ்) மனனம் செய்த தில்லையடி அல்காஸிம் சிட்டி ரிசாத் பதியுத்தீன் முஸ்லிம் பாடசாலையில் தரம் 7 ல் கல்வி கற்கும் பாலாவி உலுக்காப்பள்ளத்தைச் சேர்ந்த மாணவன் என்.அக்ரம் அவர்களை பாராட்டும் நிகழ்வும் அவரை உம்ராவுக்கு அனுப்பி வைப்பதற்கான விமான டிக்கட்டை கையளிக்கும் வைபவமும் தில்லையடி முஹாஜிரீன் அறபு மத்ரஸாவில் அதன் பணிப்பாளர் மௌலவி எஸ்.எச்.எம்.முபாரக் (ரஸாதி) தலைமையில் நடைபெற்றது. இதில் உலமாக்கள் ஆசிரியர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர். மாணவன் என்.அக்ரம் அவர்களுக்கான உம்ராவுக்குரிய சகல செலவுகளையும் சிலாபத்துறையைச் சேர்ந்த தொழிலதிபர் ஏ.ஏ.றமீஸ் பொறுப்பேற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.