அரிசி மூடையில் இஸ்லாம்...!
(Abu Saudh)
வெலிகம என்ற ஊரில் குடும்பமாக வாழும் ஒரு முஸ்லிம் சகோதரர் தினமும் காலையில் தமது தொழிலுக்காக காலிக்கு வருவார்.
நேற்றுக் காலை வழமை போன்று பஸ்ஸில் வந்த அவர் காலி வீதியிலுள்ள கடற்படைத் தளத்துக்கு அருகில் இறங்கி நடந்து செல்லுமளவு தூரத்திலுள்ள “தலாபிடிய” என்ற ஊருக்கு நடந்து செல்லும்போது வேகமாக வந்துகொண்டிருந்த கறுப்பு நிற முச்சக்கர வண்டி ஒன்றிலிருந்து 50 கிலோ கிராம் எடை கொண்ட ஓர் அரிசி மூடை கீழே விழுந்துள்ளதை அவதானித்துள்ளார்.
முச்சக்கர வண்டியில் ஏராளமான அரிசி மூடைகள் இருந்ததால் சாரதி அதை அறியாததால் வண்டியை நிறுத்தாமல் வேகமாகச் சென்றுவிட்டார். அவ்விடத்தில் இவரும், இன்னொரு பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த சகோதரியும் மாத்திரமே இருந்துள்ளனர். இவர் விழுந்துள்ள அரிசி மூடையை சற்று ஓரமாக்கி வைத்து உரியவர் திரும்பி வந்தால் ஒப்படைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் அவ்விடத்தில் சில நமிடங்கள் காத்திருந்துள்ளனர்.
உரியவர் திரும்பி வராமையாலும், வேலைக்குச் செல்லவேண்டி இருப்பதாலும் கடற்படைத் தளத்துக்கு எதிரிலுள்ள தொழிற்சாலை ஒன்றின் பாதுகாப்பாளரை அணுகி நடந்ததைக் கூறி உரியவர் வந்தால் இதை ஒப்படைக்குமாறு வேண்டவே, பாதுகாப்பாளரும் அதை ஏற்றுக்கொண்டுள்ளார். சில எட்டுக்கள் வைத்து அவ்விடத்தை விட்டும் நகரும்போதே தவற விட்டுச் சென்ற முச்சக்கரவண்டியில் அவ்விடத்துக்கு வந்த சாரதி (சிங்கள சகோதரர்) இந்த முஸ்லிம் சகோதரரிடம் தனது அரிசி மூடை விழுந்ததைப் பற்றி விசாரிக்கவே, தான் அதை எடுத்து தாங்களை எதிர்பார்த்து நின்றுவிட்டு இப்போது தான் அந்தப் பாதுகாவளரிடம் ஒப்படைத்ததாகக் கூறி அதனைப் பெற்றுக் கொடுக்க அப்பாதுகாப்பாளரிடம் சென்றுள்ளார்.
பாதுகாப்பாளர், சாரதியிடம் தான் இவ்வளவு நேரம் பாதுகாத்து வைத்ததற்காக 500 ரூபா தந்து விட்டு எடுத்துச் செல்லுமாறு கூறியதை சம்மதித்து சாரதி 500 ரூபாவைக் கொடுக்க முற்பட்டபோது, இந்த முஸ்லிம் சகோதரர் சாரதியிடம். நானும், இந்தப் பெண்ணும் தான் இதனைக் கண்டு எடுத்து வைத்து இவ்வளவு நேரமாகப் பாதுகாத்து வைத்ததாகவும், இப்போது தான் பாதுகாப்பாளரிடம் ஒப்படைத்ததாகவும் கூறி “நீங்கள் அவ்வாறு சன்மானம் கொடுப்பதானால் எமக்குத் தான் தர வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
பின்னர் அப்பெண்மணியை நோக்கி ''இவரிடமிருந்து உனக்கு பணம் தேவையில்லையே'' என்று கூறிவிட்டு ''எனக்கும் தேவையில்லை, உன்னோடு உனது 500 ரூபாவையும் வைத்துக் கொள்'' எனக் கூறியதைக் கேட்ட சாரதி “மகே கட்டிய எஹம தமய்” (எமது மக்கள் அப்படித்தான்) என்று கூறிச் சென்றுள்ளார்.
மரத்தால் விழுந்தவனை மாடு குற்றாமல் தடுத்த முஸ்லிம்.

அல்ஹமதுலில்லாஹ இப்பேற்பட்ட நல்ல குணங்கள் தொடர்ந்தும் வெளிவரட்டும்,
ReplyDelete