21 ஆம் நூற்றாண்டு இந்தியாவுக்கே - நரேந்திர மோடி
மார்ச் 10 ஞாயிற்றுக்கிழமை காலை குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, வெளிநாடுவாழ் பாரதிய ஜனதா கட்சி நண்பர்கள் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த காணொளிக் காட்சி (வீடியோ கான்ஃபரன்ஸிங்) முறையில் மக்களிடையே உரை நிகழ்த்தினார். அமெரிக்காவில் உள்ள நியூ ஜெர்ஸி, சிகாகோ நகரங்களில் மக்கள் இந்த உரையை பொதுவில் குழுமியிருந்து கேட்டனர். இந்த நிகழ்ச்சி, அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளிலும் பல்வேறு நகரங்களில் ஒளிபரப்பப் பட்டது. இந்தியாவிலும் பெரும்பான்மையான ஊடகங்கள் இந்த உரையை நேரடியாக ஒளிபரப்பின.
இந்திய தேசிய உணர்ச்சியைத் தட்டியெழுப்பும் விதத்தில் அமைந்திருந்தது.
அவரது பேச்சில், "வளர்ச்சியே அனைத்துவித பிரச்னைகளுக்கும் தீர்வாக அமையும்” என்றார். "ஏக் பாரத், ச்ரேஷ்ட பாரத்’ (ஒரே பாரதம்; மிகச்சிறப்பான பாரதம்) என்ற கோஷத்தை முன்வைத்தார். இந்த மந்திரத்தை முன்னிறுத்தி நாம் முன்னேறினால், நாடு சிறப்பாகும் என்று கூறிய அவர், மதச்சார்பின்மை என்பது, "நாடே முதன்மையானது” என்ற எண்ணமே என்றார்.
நாம் எதைச் செய்தாலும் அது கட்டாயமாக இந்தியாவுக்காகவே இருக்க வேண்டும். இந்தியா, அதன் மதிப்பு, மக்களின் கனவு ஆகியவை சிதைவதற்கு நாம் விடக்கூடாது; இந்தியாவே எதிலும் முதன்மையானதாக இருக்க வேண்டும்” என்றார் அவர்.
கடந்த 3 தலைமுறையாக ஒரு கேள்வி முன்வைக்கப்படுகிறது என்று கூறிய மோடி, 21ம் நூற்றாண்டில் உலகை வழிநடத்தப் போவது யார் என்பதே அந்தக் கேள்வி; 19ம் நூற்றாண்டு ஐரோப்பாவுக்கானதாக இருந்தது. நாம் அந்தக் காலகட்டத்தில் காலனி ஆதிக்கத்தில் இருந்துவிட்டோம். எனவே அந்தக் காலகட்டத்தில் நிகழ்ந்த இயந்திரப் புரட்சி யுகத்தால் நாம் பெரிதும் பயனடையவில்லை. நாம் அப்போது காலனி ஆதிக்கத்துக்கு உட்படாமல் இருந்திருந்தால் நிகழ்வுகள் வேறு மாதிரியாக இருந்திருக்கும். நமக்கு தகுதிகளும் திறமைகளும் இருந்தன. ஆனால், காலனி ஆதிக்கத்துக்கு அடிமையாகி இருந்ததால், வாய்ப்புகள் நம் கையை விட்டுப் போய்விட்டன. 20ம் நூற்றாண்டு அமெரிக்காவின் யுகமாக இருந்துவிட்டது. அமெரிக்காவின் தாக்கம் உலகில் அதிகமாக இருந்தாலும், நாம் நம் சுய முயற்சியில், மகாத்மா காந்தியின் தலைமையில் போராடி நம் சுதந்திரத்தைப் பெற்றோம். சென்ற நூற்றாண்டிலேயே, அடுத்து வரும் நூற்றாண்டு ஆசியாவுக்கானது என்று உலக நாடுகளால் ஒப்புக் கொள்ளப்பட்டது. இந்த நிலையில், நம் அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையில் அரசு அமைந்தபோது, உலக நாடுகள் நம்மைப் பார்த்து, இந்தியா நிச்சயமாக ஏதாவது சாதிக்கும் என்ற நம்பிக்கையை முன்வைத்தார்கள். வாஜ்பாய் அணுகுண்டு சோதனையை நடத்தி சுயசார்பை வெளிப்படுத்தியபோது, இந்தியாவிலும், வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மத்தியிலும் நம்பிக்கை மேலும் துளிர்விட்டது. இத்தகைய நிலையில், இந்தியாவின் கைகளில் உலகத்தினை வழிநடத்தும் பொறுப்பு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பெருத்த ஏமாற்றம்... கடந்த 6-7 வருடங்களாக அப்படி ஏதும் நடக்கவில்லை! - என்ற தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார் நரேந்திர மோடி.
குஜராத்தின் வளர்ச்சி குறித்து தனது கருத்தை வெளியிட்ட மோடி,
தேர்தல்களில் வெற்றியோ தோல்வியோ... அதுவல்ல நம் இலக்கு. ஐந்து வருடத்துக்கு நமக்கு ஆட்சிக்கான பொறுப்பை மக்கள் அளித்தார்கள் என்றால், தன்னலமற்ற சேவையினை மக்களுக்குச் செய்வதற்கான அதிகாரத்தைத்தான் அவர்கள் அளித்துள்ளார்கள், அதைச் செய்ய வேண்டும். இந்தக் கடமையை நாம் செவ்வனே செய்துவந்தால், நமது சிறு சிறு குறைகளை மக்கள் பொறுத்துக் கொண்டு மன்னித்து விடுவார்கள். குஜராத்தின் 6 கோடி மக்களும் எனது குடும்பம். அவர்களின் மகிழ்ச்சி, என் மகிழ்ச்சி. அவர்களின் பிரச்னைகள், என் பிரச்னைகள் என்று கூறிய மோடி, குஜராத் தற்போது சுற்றுலாத் துறையில் அதிக கவனம் செலுத்துகிறது; வெளிநாடு வாழ் நண்பர்கள் குஜராத்துக்கு வருகை தரவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

நர மாமிச மோடி
ReplyDeleteநரேந்திர மோடி
குஜராத்தின் கேடி
அவன் செய்த கொலைகளை பாடி-
ஊடகங்கள் கூறுகின்றன கூடி
இனவாதத்தைப்பறை சாற்றும் அவனின் தாடி
அவன் எப்போதும் தேடுவதோ முஸ்லிம் லேடி
அவன் சொல்வதோ புளுகல் கோடி
அதற்கு ஆமாப்போடுகிறனர் அவனது அடியாட்கள் ஓடி
அப்பாவி முஸ்லிம்களை கொலை செய்த இந்த மோடி
உண்மையிலே சத்தியமாய் அவன் ஒரு சுத்தப்பேடி.
உன்மீது முஸ்லிம்களின் சாபம் கோடி
உன் நாசத்திற்காய் இறைஞ்சுகிறோம் இரு கரம் நீட்டி.