றிஸானா நபீக் தேசத்தின் புதல்வி நூல் - இறுவெட்டு (அமர்வு 1)
றிஸானா நபீக் தேசத்தின் புதல்வி எனும் தலைப்பிலான நூல் மற்றும் இறுவெட்டு என்பன நேற்று (01.03.2013) காத்தான்குடியில் வெளியிடப்பட்டன.
காத்தான்குடி மீடிhய போரத்தினால் வெளிடப்பட்ட இந்த நூல் மற்றும் இறுவெட்டு வெளியீட்டு வைபவம் காத்தான்குடி ஹிஸ்புல்லா மண்டபத்தில் நடைபெற்றது. மாலை 4 மணிக்கு பெண்களுக்கும் இரவு 8மணிக்கு ஆண்களுக்குமாக இந்த வெளியீட்டு வைபவம் நடைபெற்றது.
காத்தான்குடி மீடியா போரத்தின் செயலாளர் மௌலவி எஸ்.எம்.எம்.முஸ்த்தபா தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் முக்கியஸ்த்தர்கள், மற்றும் றிஸானா நபீக்கின் தாய் தந்தை மற்றும் அவரது குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.
நூலின் முதற்பிரதி பெண்கள் வைபவத்தில் றிஸானாவின் தாயார் றிஸினாவிடம் வழங்கி வைக்கப்பட்டது.
கடந்த ஜனவரி மாதம் 9ம் திகதி சஊதி அரேபியாவில் கொலை குற்றச்சாட்டு ஒன்றில் மரண தண்டனைக்குள்ளான மூதூர் ஷாபிநகரைச்சேர்ந்த றிஸனா நபீக்குக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது முதல் ஊடகங்களில் பரபரப்பாக வெளிவந்த கட்டுரைகள் ஆக்கங்களை தொகுத்து இந்த நூல் வெளியிடப்பட்டது. அத்தோடு றிஷானா தொடர்பான ஒரு இறுவெட்டும் வெளியிடப்பட்டது.



ஏன் மீண்டும் மீண்டும் றிஸானாவின் பெற்றோரை அழவைக்கிறார்கள்?
ReplyDeleteஅரசியல் வாதிகளை முன்னூிமைப்படுத்துவது தவிா்க்கப்பட வேண்டும்
ReplyDeleteநல்ல முயற்சி, இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காதிருக்க இந்தநூல் ஓர் ஆவணமாக எதிர்காலத்தில் நிச்சயமாகப் பேசும். இதனை மேற்கொண்டோருக்கு என்னுடைய வாழ்த்துக்களும் பிராத்தனைகளும்.
ReplyDeleteTHESE FARTHA TEAM CAN RECALL ALL RISANA IN SAUDI ARABIA, JUST THEY WANT TO SHOW UP, THEY ARE SUPPORTING TO PODU PALA SENA, THIS STORY RAISE MANY ISSUE AGAINST ISLAM BUT STILL KEEPING ON GOING BY MUSLIM UMMA ALLAH WANT TO GIVE GOOD LEARING
ReplyDelete