Header Ads



மதவாத, இனவாத குரோதங்கள் வேண்டாம் - ஜனாதிபதி மஹிந்த அறிவிப்பு


சிறார்கள் எதிர்காலத்தில் மதவாத மற்றும் இனவாத குரோதங்களை அதிகரிப்பதில் இருந்து விலகியிருக்க வேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஆயிரம் பாடசாலைகளை மேம்படுத்தல் செயற்றிட்டத்திற்கு அமைவாக நிர்மாணிக்கப்பட்ட இரண்டாவது பாடசாலையை திறந்து வைக்கும் நிகழ்வு மாத்தறையில் 17-02-2013 இடம்பெற்றது. மஹிந்த ராஜபக்ஷ வித்தியாலயம் என பெயரிடப்பட்டுள்ள குறித்த பாடசாலை மாத்தறை - ரஸ்ஸன்தெனிய பிரதேசத்தில் 24 ஏக்கர் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி, 

எதிர்கால தலைமுறையினரின் மத்தியில் முற்போக்கான நிலைப்பாடுகளை மேம்படுத்துவதற்கு பெற்றோர் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றும் கூறினார். பெந்தர மற்றும் களனி பாலங்களுக்கு அப்பாலும் அபிவிருத்தி பணிகளை கொண்டு சென்றது தமது அரசாங்கமே என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

திறன்காண் பரீட்சைகளில் மாணவர்கள் வெளிக்காட்டும் திறமைகளால் அவர்களின் முற்போக்கான சிந்தனை வெளிப்படுவதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார். Sfm

3 comments:

  1. We do not want think about this you and your community want to thinks about this,

    ReplyDelete
  2. எல்லாமே வார்த்தைகளில் செயலில்?ஒரு சில வாரங்களுக்கு முன் நீங்கள் கூறிய சிறு குழு
    மஹரகமையில் விஸ்வரூபம் எடுத்திருக்கிறேதே

    ReplyDelete
  3. மதவாதமும் இனவாதமும் குழந்தைகளுக்கு வேண்டாம் ஆனால் தனக்கும் (தன்) பொது பல சேனாவுக்கும் வேண்டுமென மறைமுகமாக சொல்வது போல் உள்ளது.

    திறமை அடிப்படையில் நடந்த சட்டக் கல்லூரி பரீட்சை முடிவுகளை தூக்கிப் பிடித்தது யார் ?

    இப்படி சப்ப கட்டு கட்டுகிறீரே ஹக்கீமுக்கிட்ட கோஸ் முடிச்சிங்களோ?

    ReplyDelete

Powered by Blogger.