Header Ads



பெரும்பான்மையான மக்களின் கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதே வழமை - கோட்டா

ஜனநாயக ஆட்சி நடைபெறும் நாட்டில் பெருபான்மையான மக்களின் கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளப்படுவது வழமை என்பதால், 13 வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தை தொடர்ந்தும் இதேவகையில் முன்னெடுத்துச் செல்ல வேண்டுமா  அல்லது அதிகாரங்களை குறைக்க வேண்டுமா அல்லது அதிகாரங்கள் அதிகரிக்கப்பட வேண்டுமா என்பது குறித்து தீர்மானிக்கும் அதிகாரத்தை மக்களிடம் ஒப்படைப்பகது மிகவும் சிறந்தது என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அவ்வாறான வாக்கெடுப்பு நடத்தப்படும் போது, இலங்கையில் செயற்படும் அரசியல் கட்சிகள், அமைப்புகள் தமது நிலைப்பாடுகளை மக்கள் மத்தியில் முன்வைத்து,  மக்களின் நிலைப்பாட்டை அறிந்து கொள்ள சந்தர்ப்பம் கிடைக்கும் எனவும் கோத்தபாய குறிப்பிட்டுள்ளார்.

4 comments:

  1. எல்லா செயல்களையும் நீங்களே செய்வதும் உங்களை நீங்களே தெரிவு செய்வதும் பின்பு நீங்கள் மட்டுமே வெற்றிகொள்வதும் என்னடா உங்க அக்கிறுமங்களுக்கு ஒரு எல்லையில்லை எண்ற எண்ணமா உங்களுக்கு எல்லாவற்றையும் பார்த்தவண்ணம் றப்புல் ஆலமீன் இருக்கின்றான் என்பது உங்களுக்கு தெரியாது கொடூரப்பாவிகளே எங்கள் பொறுமைக்கு இறைவன் நிச்சயம் நற்கூலி தருவானாக.. ஆமீன்...

    ReplyDelete
  2. நல்ல ஜனநாயகம்.
    நல்ல(பொது பல சேனா)சனநாயகம்.
    சார் நீங்க கோட்டு சூட்டு போட்ட பல சேனா .

    ReplyDelete
  3. That's true Mr, Gotha, If the Majority says to wipe out the Muslims tomorrow, Will you do it ? That's what you guy doing now.

    ReplyDelete
  4. அடடடா..... அவங்க formula தெரியாதா என்ன? "செய்வதைத் தான் சொல்வார்கள். சொல்வதைத் தான் செய்வார்கள் " மறந்திட்டேங்களா என்ன? புரிஞ்சுக்கங்கப்பா.. அது சரி ஒரு பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கும் அரசியலமைப்புக்கும் உள்ள சம்பந்தம் என்ன?

    ReplyDelete

Powered by Blogger.