Header Ads



கட்டாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கையர் சார்பில் மேன்முறையிடு


கட்டாரில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையரரான சுதேஸ்கரின் சார்பில் மேன்முறையிடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனை கல்ப் நிவ்ஸ் வெளியிட்டுள்ளது.

குறித்த மேன்முறையீட்டுக்கான சட்ட செலவை ஏற்றுக் கொள்ள இலங்கை தூதரகம் இணங்கியுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2011 ஆம் ஆண்டு தம்முடன் பணியாற்றிய இந்தியர் ஒருவரை கொலை செய்த குற்றச்சாட்டிற்காக சுதேஸ்கருக்கு மரண தண்டனை  தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் மரணமானவரின் குடும்பத்தினர் சுதேஸ்கரின் தரப்பில் இருந்து குருதிப்பணத்தை பெற்றுக் கொள்ள இணக்கம் தெரிவித்ததை அடுத்து அதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. 

No comments

Powered by Blogger.