'காதர் ஹாஜிக்கு' ஒரு கடிதம்...!
அஸ்ஸலாமு அலைக்கும்..!
உங்களது 'நல்ல' ( உள) நலத்திற்கு அல்லாஹ்வைப் பிரார்த்தித்து ஆரம்பிக்கிறேன் ஹாஜி.
நான் நாட்டின் தலையானவர் தொட்டு பலருக்கும் சமூக நல விடயங்கள் குறித்து பல கடிதங்களை எழுதியிருக்கின்றேன் ஹாஜி. ஆனால், அரசியல் சார்ந்தவர்களில் உங்களுக்குத்தான் ஹாஜி முதன் முதலாக 'திறந்த' கடிதமொன்றை எழுதும் சந்தர்ப்பம் கிடைத்திருக்கு...!
ஒரிரு வாரத்திற்கு முன்பு பாராளுமன்றத்தில் சகோதர இனத்தைச் சேர்ந்த மூத்த அமைச்சர் ஒருவர் ஹாஜி 'எந்தப் பள்ளியும் தக்கப்படவில்லை' என்று 'பச்சப்' பொய்யை பகிரங்கமாகச் சொன்ன போது அதனை மெய்ப்பித்தமாதிரி நீங்களும் உங்கள் நண்பரும் நடந்து கொண்டது கொஞ்சம் 'ஓவர்' ஹாஜி. அதனாலே நானும் கொஞ்சம் 'ஓவரா' இதற்கு முதலிலே ஒரு கட்டுரையை எழுதினேன் ஹாஜி. அதில் ஏதும் பிழையிருந்தாலும் இந்தக் கடிதத்தில் ஏதும் தவறு இருந்தாலும் இந்த 'சாமானியனை' மன்னித்திடுங்க ஹாஜி.
இக்கடிதத்தை நான் அவசரமாக (பயணமொன்றிலிருந்து இல்லம் வந்து) எழுதுவதற்கு காரணம் கம்பளையில் சந்திப்பொன்றில் முந்திக்கொண்டு நீங்கள் தெரிவித்தது, என்னையும் சிந்திக்க வைத்ததனால்தான் ஹாஜி.
நாட்டில் இதுவரை எந்தப் பள்ளிவாசலும் தாக்கப்படவில்லை என்றும் இரண்டு ஸியாரங்கள் தான் உடைக்கப்பட்டுள்ளன என்றும் மேலும், அவற்றை உடைத்தது சிங்களவர்கள் அல்ல எங்கடவர்கள்தான் என்றும் நீங்கள் கூறியிருப்பதாக ஒரு ஊடக நண்பர் கூறினார் ஹாஜி.
இது உண்மையா ஹாஜி..?
பொய்யான இத்தகவல்களில் ஒரு பகுதியை(இது வரை எந்தப் பள்ளிவாசலும் தாக்கப்படவில்லை என்று) சகோதர இனத்தைச் சேர்ந்த மூத்த அமைச்சர் பாராளுமன்றத்தில் இரண்டு சந்தர்ப்பங்களில் 'மெய்'யாக்கி உறுதிப்படுத்திய போதும் அவர் அங்கு கூறுவதற்குப் பயந்துவிட்ட கருத்தை நீங்கள்; இங்கு கூறிவிட்டீர்கள் ஹாஜி. உங்களுக்கு சரியான துணிவு ஹாஜி!
உங்களுக்கு ஓரு முக்கியமான விடயத்தை சொல்லனும்; ஹாஜி. அது என்னயென்றால் ஹாஜி, பௌத்த தீவிர வாதிகளால் கடந்த 15 மாதங்களில் முஸ்லிம்களுக்கெதிராக இடம் பெற்ற தாக்குதல்கள் பற்றிய கால அடிப்படையில் அமைந்த குறிப்பொன்று என்னிடம் இருக்கிறது ஹாஜி. அதிலே பெரும்பாலும் எல்லாவற்றையும் நான் சரியாக எழுதி வைத்திருக்கிறேன் ஹாஜி.
அதனால் ஒரு வேளை அத்தாக்குதல் அனைத்திற்கும் நான்தான் சூத்திரதாரி என்று நீங்கள் என்மீது குற்றம் சுமத்தி, தூக்குத் தண்டனையை பெற்றுத் தந்தால் கூட ஹாஜி, நான் அங்கம் வகிக்கும் இந்த 'முஸ்லிம் உம்மா'வில் எவரையும் காட்டிக் கொடுக்காது அத்தண்டனையை மிகவும் விரும்பத்துடன் ஏற்றுக் கொள்வதற்குத் தயாராக இருக்கின்றேன் ஹாஜி!
ஆனால், அழிந்து போகக்கூடிய ஒரு கதிரைக்காக 'தேய்ந்துவிட்ட' ஆயுளையுடைய நீங்கள் பொய்யோடு புன்னகைத்துக் கொண்டு முழு முஸ்லிம்களையும் எதிரிகளிடம்; காட்டிக் கொடுப்பதை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை ஹாஜி. உங்களது காட்டிக் கொடுப்பு பற்றி நினைக்கின்றபோது என்நெங்சு வெடிக்கப் பாக்குது ஹாஜி...!
என்ன ஹாஜி சொல்லுகிறீங்க...?!
'நான் யாரடா காட்டிக் கொடுத்தன் என்றா கேட்கிறீங்க...?!'
'இல்லை...'
'உண்மையச் சொன்னா உனக்கு உறைக்குது என்றா கேட்கிறீங்க...?!'
ஹாஜி நீங்க அப்படி கேட்பதிலும் உண்மை இருக்கு ஹாஜி...
ஹாஜி உங்களது கேள்வியால எனக்கு என்னிலும் உங்களிலும் ஒரு பலமான சந்தேகம் வருகிறது ஹாஜி. (கடந்த 2011 செப்டம்பர் 7ஆம் திகதியன்று) அநுராதபுரம் ஒட்டுப்பள்ளம் பகுதியிலிருந்த பழமைவாய்ந்த ஸியாரம் ஒன்று இடித்தழிக்கப்படும் புகைப்படத்தை உங்களது கேள்வியோடு மீண்டும் உற்றுப் பார்க்கிறேன் ஹாஜி, என்னைப் போன்ற ஒருவர் அலவாங்கோடு அதனை இடிப்பதும் அச்சொட்டாய் உங்களைப் போன்ற ஒருவர் காவி உடையுடன் நிற்பதும் காவலுக்கு வந்த முஸ்லிம் பொலிஸார் பாதுகாப்பு கொடுப்பதும் விளங்குகிறது ஹாஜி. பொய்யென்றால் இந்தா பாருங்க ஹாஜி.
அதைப்போல (2012 எப்ரல் 20 ஆம் திகதியன்று) தம்புள்ள நகரில் அமைந்துள்ள ஹைரியா ஜும்ஆப் பள்ளிவாசல் தாக்குதலுக்கு உள்ளானபோது பிடிக்கப்பட்ட படத்தைப் பாருங்க ஹாஜி. என்னைப்போன்ற ஒருவர் முன்னே வந்து பள்ளிவாசல் கதவை உடைப்பதையும் கதவைத் தள்ளிக் கொண்டு காவி உடையுடன் உங்களை ஒத்த ஒருவர் உள்ளே நுழைந்து அந்தா குர்ஆனை எடுத்து எறிகிறான் ஹாஜி. கொங்சம்; பாருங்க ஹாஜி தெரியிது...
இது மட்டுமில்லை ஹாஜி...
(2013 ஜனவரி 24ஆம் திகதியன்று) குளியாப்பிட்டியில் முஸ்லிம்களுக்கெதிரான ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றதல்லவா ஹாஜி. அந்த ஆர்ப்பாட்டத்தில் பன்றியின் தலையுடன் அல்லாஹ்வின் நாமத்தை தாங்கிய சுலோகத்தை ஏந்திச் செல்லும் போது (நாஊது பல்லாஹி மின்ஹா) பிடிக்கப்பட்ட படத்தை கொஞ்சம் கவனமாகப் பாருங்கோ ஹாஜி அதில் ரிசேட்டில் என்னைப் போல நான்தான் ஹாஜி... கடும் காவி உடையில் உங்களைப் போல ஹாஜி... ஹாஜி... அது நீங்கதான் ஹாஜி... அந்தா உருண்டு உருண்டு உரத்த குரலிலே கத்திகிட்டு... வேறு யாரும் அர்த்தமில்லாம அப்படி கத்துவானா ஹாஜி.
இது மாதிரி 40ற்கும் அதிகமான முஸ்லிம்களுக்கெதிரான செயற்பாடுகளில் எல்லாம் உங்கட பெருத்த உருவம்தான் எனக்கு விளங்குது ஹாஜி. 'அந்த'அத்தனையிலும் உங்களுக்குப் பக்கத்திலே நானும்தான் ஹாஜி நிற்கின்றேன் !
என்ன ஹாஜி சிரிச்சிக்கிட்டு முறைக்கிறீங்க...?
'..................'
நீங்க சொல்கிறது எனக்கு விளங்கவில்லை ஹாஜி.
ஹாஜி 'இவனை' போட்டுக் குழப்பிவிட்டிங்க... ஸியாரம் 'உடைச்சதெல்லாம்' எங்கடவனென்று நீங்க உரிமையோட சொன்னதால எனக்கிட்ட இருந்த போட்டோவையெல்லாம் பார்த்தேன் ஹாஜி. என்ன ஹாஜி...
அதில கண்டதைத்தான் உங்களைப் போல நானும் முன் பின் தெரியாம என்னென்னமோ உலத்திட்டன் ஹாஜி.
குழப்பாதிங்க ஹாஜி...
இப்போ எனக்கு 'சரியாகிட்டு' ஹாஜி.
ஹாஜி,உங்களுக்கு சரியாகிட்டா?
உங்களை யாரு குழப்பிவைச்சான் ஹாஜி...?!
என்ன ஹாஜி சொல்கிறீங்க... யாரும் உங்களை குழப்பவில்லையா? அதுதான் உங்கட அசலா...? அதுவுமில்லையா...?
அப்படியென்றால் எப்படி ஹாஜி உங்களால் இப்படி மெத்தப் பெரிய பொய் மூட்டையை அவிழ்த்திட முடிந்திருக்கு?
சொல்லுங்க ஹாஜி...!???
பொய் என்பது பெரும்பாவம் என்பது உங்களுக்கு தெரிந்ததுதானே ஹாஜி.முனாபிக் என்னும் நயவஞ்சகனின் அடையாளங்களில் ஒன்று பொய் பேசுவது என்பது நான் கூறியா நீங்கள் தெரிய வேண்டும், என்ன ஹாஜி.
சுருக்கமாகக் கூறுகிறேன் ஹாஜி...இலங்கை முஸ்லிம்களது வரலாற்றில் மிகப்பெரிய பொய்யின் சொந்தக் காரர்களில் ஒருவராக உங்களை இந்த சமூகம் பார்க்கின்றது ஹாஜி. உங்களது வரலாறு பொய்யைச் சுமந்தவரின் வரலாறாக வரையப்படுகிறது ஹாஜி.
எனதன்பின் காதர் ஹாஜி,
நீங்கள் இந்த முஸ்லிம் சமூகத்திற்காக எத்தனையோ சேவை செய்திருப்பீர்கள். உங்களது ஓய்வு நேரத்தைக்கூட இந்த சமூகத்தின் நலனுக்கு ஒதுக்கிருப்பீர்கள். சமூகத்தின்- சன்மார்க்கத்தின் நலனுக்காக எவ்வளவோ சிரமப்பட்டிருப்பீர்கள். அவற்றையெல்லாம் நினைந்து இன்னும் ஓரிரு வரிகள் உங்களோடு உரிமையோடு பேசுகின்றேன் ஹாஜி.
ஹாஜி, நீங்கள் ஏதோ வாய் தவறி சொல்லி விட்டீர்கள். சொல்லிய அக்கூற்றின் பாரதூரத்தை மனங்கொண்டு அதனை பகிரங்கமாக 'வாபஸ்' பெற்றுக் கொள்வதுடன் அல்லாஹ்விடம் மன்னிப்பை கோருங்கள்... அல்லாஹ் போதுமானவன் ஹாஜி.
(இக்கடிதத்தில் ஏதும் பிழையிருந்தால் மன்னிக்குமாறு மீண்டும் மனம் திறந்து கோருகின்றேன் ஹாஜி.)
ஜஷக்கல்லாஹு கைரா!
இப்படிக்கு,
மூதூர் முறாசில்

ஹாஜி என்ற வார்த்தையை தவிர்த்திருந்தால் நல்லா இருந்திருக்கும்
ReplyDeleteHaji entra vaarththai athihamaha iruppathal sollavantha vidayam edufadavillai.unarfupoorvamana kadithamaha parinamikkavillai.Vaasikkumpothu aluththuviduhirathu.
ReplyDeleteGood article but better send this letter his office because of he never come to read this website because of he´s uneducated person and he never attended any schools,most of peoples never know it.
ReplyDeleteI am totally agreed with Riyas Mohamed Because, The voters in his electorate calling him as ARMA Cader( ARMA is his actual initial.) Please try to read it as it is in tamil. (Erumakkader)
ReplyDeleteBrothers Riyas & Iqbal.
ReplyDeletemurasil brother sariyathan sollikuraru
palavanthama haji pattatha serthukittu irukuravanga eallorum ippadithane pesuranga eannamo vara vara haji pattam poi solrathukkahavum golmal panrathukkahavume pavikka paduthu.
cader haji, aswer haji.....
ys u r Correct Mr.Sadakathullah.
ReplyDeleteVery sensible letter
ReplyDelete