ஊடகவியலாளர்களின் சொத்து விபரங்களைக் கேட்கும் அமைச்சர்
ஊடகவியவாளர்கள் தமது சொத்து விபரங்களை அறிவிக்க வேண்டும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் பதிவு செய்துள்ள ஊடகவியலாளர்கள் அனைவரும் தமது சொத்து விபரங்கள் தொடர்பில் வெளியிட வேண்டும் என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் ஊடகவியலாளர்கள் தமது சொத்து விபரங்களை வெளியிட வேண்டும். அதற்கமைய சொத்துக்கள் குறித்த தகவல்களை திரட்டுவதற்கும் அது குறித்து ஆராய்வதற்கும் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகக் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் ஊடகவியலாளர்கள் அனைவரும் சொத்து விபரங்களை வெளியிட வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். அதன்படி எதிர்வரும் மூன்று மாதங்களில் இந்தத் திட்டத்தை அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளது.
இதேவேளை அரசியல்வாதிகளின் சொத்து விபரங்களை வெளியிடுமாறு ஊடகங்கள் கோரிவருகின்றன. தற்போது அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் சுமார் 3000 ஊடகவியலாளர்கள் பதிவு செய்து கொண்டுள்ளனர்.
அதன்படி மாகாண ஊடகவிலாளர்கள், முழு நேர ஊடகவியலாளர்கள் மற்றும் ஏனையோர் என்ற வகையீட்டின் அடிப்படையிலேயே தகவல்கள் திரட்டப்பட உள்ளதாகவும் ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Aaahaa...! now they want to know who has more money and wealth to arrange White Van.
ReplyDeleteWhat a frauds...!
ITS SHAME ON YOU MR MINISTER,
ReplyDeleteமுதலில் ஜனாதிபதியினதும், அவரின் சகோதரர்களினதும் சொத்து விபரங்களையும் அதன் பின் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண அமைச்சர்களின் சொத்து விபரத்தை நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்தலாம்.
ReplyDeleteஅதிலும் குறிப்பாக கிழக்கு மாகாணத்தை சேர்ந்த உறுபினர்களின் சொத்து விபரத்தை முதலில் வெளியிடலாம்.
அவர்கள்தான் பேரையும், புகழையும் தவிர வேறு ஒன்றும் சம்பாதிக்கவில்லை( சும்மா லு லு லா ). .