Header Ads



மூதூர் தளவைத்தியசாலையில் ஆளணிப் பற்றாக்குறையினால் நோயாளர்கள் பெரும் இன்னல்


(மூதூர் முறாசில்)

மூதூர் தளவைத்தியசாலையில் வைத்தியர்கள், துனை மருத்துவ சேவை உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட  ஆளணிப் பற்றாக் குறையினால் சிகிச்சை பெறுவதற்கு வரும் நோயாளர்கள் பெரும் இன்னலுக்கு உள்ளாகி வருவதாக கவலை தெரிவிக்கப்படுகின்றது.

மூதூர் பிரதேசத்தைச் சேர்ந்த நோயாளர்களும் ஈச்சிலம்பற்று, சேருவில முதலான அயல் பிரதேசங்களைச் சேர்ந்த நோயாளர்களும் பெரும் எண்ணிக்கையில் மூதூர் தளவைத்தியசாலையை நாடி வருவதனால் அவர்கள் அனைவருக்கும் தேவையான சேவையை வழங்க முடியாத இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நாளாந்தம் வெளிநோயாளர் பரிவிற்கு சிகிச்சை பெறுவதற்கு வரும் நோயாளர்களின் எண்ணிக்கை வரையறுக்கப்படுவதனால் மேலதிகமாக வரும் நோயாளர்கள் சிகிச்சையைப் பெற்றுக் கொள்ள முடியாது திரும்பிச் செல்ல வேண்டிய அவல நிலை தொடர்கிறது.

எனவே, இந்நிலைமையை போக்குவதற்கு தேவையான வைத்தியர்கள், துனை மருத்துவ சேவை உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட ஊழியர்களை நியமிப்பதற்கு சம்பந்தப்பட்டவர்கள் கவனம் செலுத்த வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.



No comments

Powered by Blogger.