Header Ads



புத்தளம் தள வைத்தியசாலைக்கு வெளிநாட்டு வைத்தியர்கள் விஜயம் (படங்கள்)



(அபூ நாதில்)

புத்தளம் தள வைத்தியசாலை துரித அபிவிருத்தி மற்றும் எதிர்கால அபிவிருத்தி தொடர்பாக மேற் பார்வை செய்யும் நோக்கில் விசேட தூது குழுவொன்று இன்று புத்தளம் தள வைத்தியசாலைக்கு விஜயம் செய்தது.  ஜெய்க்கா மற்றும் யுனிசெப் அமைப்புகளின் பிரதி நிதிகள் இந்த குழுவில் அடங்கி இருந்தனர்.

புத்தளம் தள வைத்தியசாலை வைத்திய  அத்தியட்சகர் அஷோக் பெரேரா புத்தளம் தள வைத்தியசாலை தொடர்பான சகல விடயங்களை தூது குழுவினருக்கு விளக்கமளித்தார். ஜப்பான், கொரியா, தன்ஸானியா, பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த வைத்தியர்கள் மற்றும் சுகாதார பிரிவு உயர் அதிகாரிகள் இந்த குழுவில் அடங்கி இருந்தனர்.        


No comments

Powered by Blogger.